MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மாட்டேன்! மாட்டேன்! என்று கூறினாலும் இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களில் அண்ணல் நபியின் ﷺ புகழைப் பாடியே ஆக வேண்டும்!


ஸல்லூ கமா ரஅய்துமூனீ உஸல்லி ' - நீங்கள் என்னை எதில் தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் .


பூமான் நபியவர்கள் இப்படித்தான் தக்பீர் கட்டினார்கள் எனவே நானும் அப்படியே கட்டுகிறேன். இப்படியே ருகூவு செய்தார்கள் , ஸூஜுது செய்தார்கள் என்று தொழுகையின் ஒவ்வொரு அசைவிலும் மாநபியவர்கள் நினைவு கூறப்படுகிறார்களே! அதுவே மௌலிது தான் !


மாட்டேன்! மாட்டேன்! என்றாலும் நாளுக்கு ஐந்து முறையாவது மாநபியின் பெயரை முழங்காமல் தொழமுடியாதே !


சாம்பிராணியை அல்லது ஊதுபத்தியை புகைப்போட்டு, மக்கள் சூழ அமர்ந்து ஓதுவதற்கு மட்டும் தான் மௌலிது என்று பெயரில்லை . அன்னவர்களை நினைத்தாலே அது மௌலிது தான் ... எம்மானை நினைக்காமல் இஸ்லாத்தில் எதை நிறைவேற்ற முடியும் . ஆரம்ப கலிமாவே அண்ணலின் மௌலிது தானே : لا إله إلا الله محمد رسول الله - லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்

அல்லாஹ்வையன்றி வணங்கத் தகுந்தவன் வேறுயாருமில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் .


இருந்தார்கள் என்று கூறவில்லையே இருகிறார்கள் என்றுதானே சொல்கிறோம். அதுவே மௌலிது தானே.


இரண்டாம் கலிமாவில் அல்லாஹ்வையன்றி வணங்கத் தகுந்தவன் வேறு யாருமில்லை என்று சாட்சி கூறுகிறோமே. அந்த அல்லாஹ் யார்? எங்கே இருக்கிறான் . எப்படியிருக்கிறான் என்று யார் போய்ப் பார்த்தது ? நேரிலே பார்க்காமல் எப்படி சாட்சி சொல்லுகிறோம் . அண்ணல் நபியவர்கள் சொன்னதால் தானே . அவர்கள் பார்த்துச் சொன்ன சாட்சியை நாமும் சொல்லி இஸ்லாமிய கப்பலில் பயணம் செய்கிறோம் . இல்லையேல் நிராகரிப்புக் கடலில் மூழ்கியிருப்போம் .


நாம் சுவாசிக்கும் இஸ்லாமிய காற்று இறுதிப் திருநபி தந்த பிச்சை தானே .


லாஇலாஹ இல்லல்லாஹ் என ஆயிரம் முறை சொன்னாலும் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என ஒரு முறை சொல்லாதவரை எப்படி முஸ்லிமாக முடியும்?



நன்றி :

நூல் : மாநபியின் மவ்லித் ஷரீப் மார்கத்திற்கு அரணா ? முரணா ?

ஆசிரியர் : T.S.A. அபூதாஹிர் ஆலிம் மஹ்ழரி

வெளியீடு : ஃபஹீமியா பப்ளிஷர்ஸ்