MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வணக்கங்களின் தாயகம்


வணக்கங்களில் எல்லாம் சிறப்பு மிக்கது எது என்று நான் உங்களை கேட்டால் நீங்கள் எதை சொல்வீர்கள்? 

தொழுகை? நோன்பு? ஹஜ்? குர்ஆன் ஓதுதல்? இப்படி உங்கள் பட்டியல் தொடரும். ஆனால் உண்மையில் எது தெரியுமா?

நம் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத்து சொல்வதுதான்.


என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனாலும் அதுதான் உண்மை. எப்படி என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் மேலே சொன்ன எல்லா காரியங்களும் மனிதர்களாகிய நாங்கள் செய்யும்படி அல்லாஹ்வால் நமக்கு ஏவப்பட்டவை. இதில் எதையும் அல்லாஹ் செய்வதில்லை. ஆனால் ஒரே ஒரு விடயத்தை மட்டும் அல்லாஹ் தானும் செய்வதாகவும் தன் மலக்குகள் செய்வதாகவும் சொல்லி விட்டு நம்மையும் செய்யும்படி ஏவுகிறான். அதுதான் இந்த பரிசுத்த ஸலவாத்து.


"நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் இந்த நபியின் மீது ஸலவாத்து சொல்கின்றனர். எனவே முஃமீன்களே, நீங்களும் ஸலவாத்து சொல்லுங்கள். இன்னும் நல்ல முறையில் ஸலாமும் சொல்லுங்கள்."


அல்லாஹ் தானும் செய்வதாக சொல்லிய இந்த காரியத்தை விட சிறந்த ஒரு அமல் இருக்க முடியுமா? எனவேதான் வணக்கங்களின் தாயகம் ஸலவாத்து என்கிறோம்.