MAIL OF ISLAM

Knowledge & Wisdom



திப்பு ஸுல்தான் ரஹ்மதுல்லாஹி அலைஹி


எழுதியவர் - அப்துல் ரஹீம் முஹம்மத் ஜௌபர்


மைசூரின் வேங்கை, திப்பு சாஹிப் என்றெல்லாம் அழைக்கப்பட்ட இஸ்லாத்தின் மா வீரர்களுள் ஒருவரான திப்பு சுல்தான் 20-11-1750 கர்நாடகாவில் பிறந்தார்கள்.


மைசூர் மகாராஜா ஹைதர் அலியின் மூத்த மகனாராகிய இவர்கள், மாபெரும் மார்க்க அறிஞர், யுத்த வீரர், உருது கவிஞர், அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். திரு குர்ஆன் விளக்கம், இஸ்லாமிய சட்ட நெறி, யுத்தக் கலைகள், குதிரை ஏற்றம், நீச்சல் என எல்லா துறைகளிலும் தலை சிறந்து விழங்கினார்கள்.

பல அபிவிருத்தி திட்டங்களை, முன்னேற்றகரமான நிர்வாக முறைகளை அறிமுகப்படுத்தியவர். இன்றைய ஏவுகணை தொழில் நுட்பத்திற்கு முன்னோடியானவர். இவர்களின் ஏவுகணை தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் எத்தனையோ முறை பிரித்தானியர் புறமுதுகிட்டு ஓடி இருக்கிறார்கள்.

இன்றைய நவீன ஏவுகணைகள இந்தியாவுக்கு வடிவமைத்து கொடுத்தவர் டாக்டர் அபுல் கலாம் அவர்கள். அவர்கள் ஒரு முறை 'நாஸா' வுக்கு ஏவுகணை தொடர்பான ஆறுமாத பயிற்சிக்காக அமெரிக்காவின் 'நாஸா' வுக்கு சென்றிருந்தார்கள்.

அங்கே சுவரொன்றில் ஒரு படம் வரையப்பட்டிருந்தது. அப்படத்தில் கருப்பர்கள் ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருந்தார்கள். வெள்ளையர்களான பிரிட்டிஷார் துடி துடித்து இறந்துக்கொண்ருந்தார்கள். ஏவுகணை படை திப்பு சுல்தானின் படை என்பதை அறிந்தபோது அபுல் கலாம் ஆச்சரியப்பட்டார்கள்.

இன்றும் பிரித்தானிய அரும் பொருட் காட்சி சாலையில் திப்பு சுல்தானின் இரண்டு ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தன் அருமை மகனாரின் ஆற்றலை நன்கு அறிந்துக் கொண்ட தந்தையார் ஹைதர் அலி பல பாரிய பொறுப்புக்களை அவர்களிடம் ஒப்படைத்தார்.

அவர்களுடைய 15வது வயதிலேயே மலபார் இராச்சியத்திற்கெதிரான யுத்தத்தில் தன்மகன் திப்பு சுல்தானை தலைமை தாங்க வைத்தார். மாபெரும் படை அணியை எதிர்த்துப் போராடிய திப்பு சுல்தான் நுணுக்கமான போர் தந்திரங்களால் மலபாரின் பெரும் படையை மூன்றே நாட்களில் முறியடித்தார்கள்.

இதனால் மனமகிழ்ச்சி அடைந்த அவரது தந்தையார் மைசூரின் ஐந்து பிரதேசங்களை ஆளும் பொறுப்பை மைசூரின் வேங்கை திப்புவிடம் ஒப்படைத்தார்.

தனது பதினைந்தாவது வயதிலிருந்து தனது நாட்பத்தெட்டாவது வயதுவரை தனது தாய் நாட்டின் சுதந்திரத்தை காப்பதற்காகப் போராடிய மைசூரின் வேங்கை, இறுதிப் போரில் பிரித்தானியரின் 50,000 போர் வீரர்களை எதிர்த்து தனது 30,000 போராளிகளோடு களமிறங்கினார்கள்.

மிர் சித்தீக் என்பவனின் காட்டிக்கொடுப்பினால், பிரித்தானியர் கோட்டையை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தாரகள். மிர் சித்தீக் திப்பு சுல்தானின் தாக்குதலால் கொல்லப்பட்டான்.

1799 ம் ஆண்டு மே மாதம் 5ந் திகதியான இன்று தனது 48வது வயதில், கொடியோர் பிரித்தானியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

திப்பு சாஹிப் பிரித்தானியரின் துப்பாக்கி வேட்டினை நெஞ்சில் தாங்கி உயிர் நீத்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்பாத்திஹா.

இன்று இந்திய துணை கண்டம் எங்கணும் திப்பு சுல்தான் மாபெரும் சுதந்திரப் போராளியாக மதிக்கப்படுகிறார்கள்.

நூறு வருடம் வீணாய் வாழ்ந்து சாவதை விட ஒரே ஒருநாள் சிங்கமாய் சாவது மேல். அல்லாஹ் இவர்களை பொருந்திகொள்வானாக.