MAIL OF ISLAM

Knowledge & Wisdom



​தன்னை அறிதல்

"ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்" இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு

​​

தொகுப்பு:  அஹ்மத்  பிலால்


உனக்கு உடம்பு என்ற புற அமைப்பு ஒன்று உள்ளது என்பதையும், மனம் அல்லது ஆத்மா என்ற அக அமைப்பு ஒன்று உள்ளது என்பதையும் இந்த இரண்டும் சேர்ந்தவன் தான் "நீ" என்பதையும், உணர்வதுதான், "தன்னை அறிவதற்கு" முதல் படியாகும்.


மனம் என்று குறிப்பிடுவது நமது மார்பில் இடப்பக்கத்தில் இருக்கும் சதைத்துண்டை அல்ல. மற்ற சகல சக்திகளையும், தன் கருவிகளாகவும், வேலை ஆட்களாகவும், பயன்படுத்தும் சக்தி இருக்கின்றதே அதைத்தான் "மனம்" என்று குறிப்பிடப்படுகிறது.


(இது அரபியில், "ரூஹ்", என்றும், "கல்பு" என்றும், "நப்ஸ்" என்றும், குறிக்கப்படுகிறது)



​​உண்மையில் இது பார்வைக்கு தட்டுப்படும் உலகை சேர்ந்ததல்ல. பார்க்க முடியாததை சேர்ந்ததாகும்.


வர்த்தகத்துக்காக வியாபாரி ஒருவன் அந்நியநாடு செல்வது போன்று, இது இந்த உலகத்துக்கு பிரயாணியாக வந்துள்ளது. விரைவில் இது தன் சுய பூமிக்கு திரும்பி போய்விடும்.


இந்த மனம் அல்லது ஆத்மா பற்றியும், அதன் குணங்கள் பற்றியும் அறிவதுதான் " இறைவனை பற்றிய ஞானத்துக்கு திறவுகோல் ஆகும்"


ஹுஜ்ஜத்துல் இஸ்லாம்,

இமாம் கஸ்ஸாலி (ரலியல்லாஹு அன்ஹு)


***********************************************************************************************************************************************

மனிதனை நான் செவ்வையாக்கி, பிறகு என்னுடைய ரூஹிலிருந்து அவனில் ஊதினேன் (அல்குர்ஆன் 38:72)


நம்முடைய ரூஹிலிருந்து அவரில் நாம் ஊதினோம். (அல்குர்ஆன் 21:91)


அதில் தன்னுடைய ரூஹை ஊதினான். (32: 9)


ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்க கூடியதேயாகும். பிறகு நம்பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (29: 57)


அல்லாஹ் படைப்பை முதலில் ஆரம்பிக்கிறான். பிறகு அதனை அவனே மீள வைப்பான். பிறகு அவன் பக்கமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். (30: 11)


அல்லாஹ்வின் பக்கமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (3: 158)

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

கலிமா தைய்யிபாவின் சிறு விளக்கம்


​​கலிமாவில் பொதிந்துள்ள தத்துவத்தின் (வஹ்ததுல் வுஜூத்தின்) சிறு விளக்கத்தை பெற்றுகொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

நீ யார்?


​​நாம் யார்? மலக்கா? மிருகமா? ஷெய்த்தானா? எமது நிலை என்ன? என்பதை அறிந்துக்கொள்ள அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.