MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஈத் முபாரக், ஜும்மா முபாரக் வாழ்த்து சொல்லலாமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.

பெருநாள் தினத்தில் "ஈத் முபாரக்" என்றும் வெள்ளிக்கிழமை (ஜும்மா தினத்தில்) "ஜூம்ஆ முபாரக்" என்றும் வாழ்த்து சொல்லலாமா?


​​

♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :

வழிகெட்ட முட்டாள் வஹ்ஹாபிகள் ஈத் முபாரக் என்று பெருநாள் தினத்திலும், ஜும்மா முபாரக் என்று வெள்ளிக்கிழமை தினத்திலும் வாழ்த்து சொல்லவது பித்அத் என்றும் பாவமான காரியம் என்றும் கூறுகிறார்கள்.


​​குர்ஆன், ஹதீஸ்களை விளங்காமல் முட்டாள்தனமான இவர்களினது விளக்கத்தை குப்பையில்தான் போட வேண்டும். ஆகையினால் அவர்களின் விளக்கங்களை கேட்டு சீரழிந்துவிட வேண்டாம்.


​​ஒருவருக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் முரணில்லாமல் எப்படி வேண்டுமானாலும் துஆ செய்யலாம் அந்த அடிப்படையில் "ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக்" என்பது ஒரு ஆகுமாக்கப்பட்ட துஆ ஆகுமே தவிர பித்அத் கிடையாது.

♣  ஈத் முபாரக், ஜும்மா முபாரக் என்று வாழ்த்து சொல்லலாமா?

பெருநாள் தினத்தில் "ஈத் முபாரக்" என்றும் வெள்ளிக்கிழமை தினத்தில் "ஜும்மா முபாரக்" போன்ற வாசகத்தை ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள். இந்த வார்த்தை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா? என்று பார்க்கும் போது, ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்கு முரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது தவறில்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும், பரக்கத் செய்யட்டும், மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் தவறு இல்லை.

உண்மையில் ஈத் முபாரக், ஜும்மா முபாரக் என்ற வாசகத்தை சொல்வதன் நோக்கம் இந் நன்நாளில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் கூறி நட்புகளின் நலனுக்காகப் பிராத்திப்பதாகும். மேலும் இந்நன்னாளில் அதிகம் ஸலவாத்தை ஓதி அண்ணலாரின் அன்பை பெற்றுக்கொள்ள வேண்டும் அதுவே மிகச் சிறந்தது. அந்த அடிப்படையில் நல்லதையே நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.


​​சித்தத்தைக் குழப்புகின்றவர்களின் ஆராய்ச்சியை நிராகரிப்போம். பெருநாள் தினம் மற்றும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தினம் வந்தால் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்வதும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதும் வழக்கம். அதிலும் மேலே குறிப்பிட்டது போன்று குறிப்பாக வாழ்த்துக்கள் என்று சொல்லும்போது “ஈத் முபாரக்”, "ஜூம்ஆ முபாரக்” என்ற வாசகத்தை கூறி வாழ்த்து சொல்வதை நாம் பரவலாக பார்க்கிறோம்.

இந்த வார்த்தையின் பொருள் “பாக்கியம் பெற்ற திருநாள்” என்பதாகும். பாக்கியம் பெற்ற திருநாளாக இந்த நாளை உங்களுக்கு அல்லாஹ் ஆக்குவானாக என்ற கருத்தில் மக்கள் இதை வாழ்த்தாக மற்றவருக்கு சொல்லி வருகிறார்கள். வாழ்த்து என்று சொல்வதை விட இதை ஒரு பிரார்த்தனை என்று சொல்லலாம். இந்த வார்த்தையை பயன்படுத்தி வாழ்த்து சொல்லவேண்டும் என்று அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு கற்றுத்தரவில்லை. எனினும், ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிம்களின் நலனுக்காக துஆ செய்வது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்ற அடிப்படையில் இவ்வாறு பெருநாட்களில், இன்ன பிற தினங்களில் சொல்வது மார்கத்தில் தவறு இல்லை.

♦ குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்: உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 4:86)


♦மேலும் அல்லாஹ் அல் குர்ஆனில்: “இத்தகையோர் (பல நல்ல காரியங்கள் செய்து கஷ்டங்களை) சகித்துக்கொண்டதின் காரணமாக (சொர்க்கத்தில்) உயர்ந்த மாளிகைகள் அவர்களுக்கு வழங்கப்படும். மேலும், அவர்கள் சலாமும், வாழ்த்தும் கொண்டு அதில் வரவேற்கப்படுவார்கள்.” (சூரா : புர்கான் வசனம் 75)


இந்த வசனத்தில் ஸலாத்துடன் வாழ்த்தும் சொர்கவாசிகளுக்கு சொல்லப்படும் என்றும், வாழ்த்துக்கள் சொல்வது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும், அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம், வாழ்த்துக்கள் சொல்லலாம் என்பதையும். ஸலாமுடன் வாழ்த்து சொல்லப்படுவது தவறில்லை என்பதையும் இந்த வசனத்தின் மூலம் நாம் விளங்கிக்கொள்ளலாம்.


​​

♣ நபி ﷺ அவர்களின் காலத்தில் ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக் வாழ்த்து சொல்லப்பட்டுள்ளதா?

சிலர்கள் 'நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக் வாழ்த்து சொன்னார்களா?' என்று கேட்பார்கள். ஆகவே உலக விடயங்கள், சர்வ சாதாரன விடயங்கள், எமது மக்கள் மத்தியில் உள்ள சில ஆகுமாக்கப்பட்ட நடைமுறைகளை மார்க்கதுடன் இணைக்க வேண்டாம் அந்த அடிப்படையில் வழிகெட்ட முட்டாள் வஹ்ஹாபிகள் சில விடயங்களை மார்க்கமாக்கி மார்க்கதுடன் இணைத்து பார்ப்பதால்தான் இப்படியான முட்டாள் தனமான கேள்வி எழுகின்றன.

அந்த அடிப்படையில் நாம் யாருமே ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக் என்ற வார்த்தை மூலம் வாழ்ந்து சொல்வது பல நன்மைகள் கிடைக்கும், வாழ்த்து சொல்வது கட்டாயம் என்றோ சொல்லவில்லை. நாம் தெளிவாக உள்ளோம் வஹ்ஹாபிகள் மார்க்கத்தில் தெளிவு இல்லை அதான் இப்படியான அறியாமையின் முட்டாள் கேள்விகள்.


​​எது எப்படி இருந்தாலும் ஈத் முபாரக் ஜும்ஆ முபாரக் சொல்வது கூடுமா? கூடாதா? என்று பார்க்கும் போது தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்கு முரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் வாழ்த்துவது கூடும் என்பதே சரியான கருத்தாகும்.


​​

♣ இரு பெருநாள் தினங்களிலும் “தகப்பலல்லாஹு மின்னா வ மின்க” என்ற துஆவை சொல்வதே மிகச் சிறந்த பொருத்தமான ஒன்றாகும்

இரு பெருநாள் தினங்களிலும் சந்தோஷத்தின் வெளிப்பாட்டின் காரணத்தினால் ஒருத்தருக்கு ஒருத்தர் வாழ்த்து சொல்வது சுன்னத் இந்த அடிப்படையில் பெருநாள் வாழ்த்து என்று பிரத்தியோகமான ஒரு துஆவை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காட்டி தந்துள்ளார்கள். ஹதீஸில் பார்க்கலாம் ஆகவே பெருநாள் தினங்களில் அப்படியான துஆக்களை ஒருத்தருக்கு ஒருத்தர் சந்திக்கும்போது சொல்வது மிகச் சிறந்த பொருத்தமான ஒன்றாகும்.

சஹாபாக்கள் தங்களுக்கு மத்தியில் இது போன்று பெருநாட்களில் ஒருவரை சந்திக்கும்போது துஆக்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சில ஹதீது கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


♦ ராஷித் பின் சஃது ரஹ்மதுல்லாஹி அவர்கள் அறிவிக்கிறார்கள் “அபூ உமாமா அல் பாஹிலி மற்றும் வாசிலா பின் அல் அஸ்கஃ ஆகிய இரு (நபித்தோழர்களும்) என்னை பெருநாள் தினத்தில் சந்தித்தார்கள். அப்போது அவ்விருவரும் (எனக்கு) “தகப்பலல்லாஹு மின்னா வ மின்க” என்று கூறினார்கள். 


நூல் : தப்ரானி எண் 928

தகப்பலல்லாஹு மின்னா வ மின்க என்பதன் பொருள் “அல்லாஹ் எங்களிடமிருந்து உம்மிடமிருந்தும் (நற்செயல்களை) ஏற்றுகொள்வானாக.

இந்த வாசகம் துஆ என்ற அமைப்பில் இருந்தாலும் இதை மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு வார்த்தையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ​​அரபியில் பொதுவாக நற்செய்தி , வாழ்த்துக்கள் அனைத்தும் துஆவின் வாசகத்தை போன்று தான் இருக்கும்.

♦ அலி பின் ஸாபித் ரஹ்மதுல்லாஹி அவர்கள் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் “மக்கள் பெருநாளில் “தகப்பலல்லாஹு மின்னா வ மின்க” என்று சொல்லிக்கொள்கிறார்களே” என்று கேட்டார்கள். அதற்கு மாலிக் ரஹிமஹுல்லாஹு அவர்கள். “இவ்வாறு தான் எங்களிடம் இந்த வழமை இருந்துகொண்டிருந்தது. இது குற்றம் இல்லை என்று கருதுகிறோம்.” என்று கூறினார்கள்.


​​நூல்: இப்னு ஹிப்பான் 15348

ஆனால் நம்மில் சிலர் ஈத் முபாரக் என்று கூறி வாழ்த்து சொல்லவில்லை என்றாலே அது மிகப்பெரிய குற்றத்தை போன்றும், ஒரு முக்கிய ஈத் பெருநாளின் கடமைகளை விட்டதை போன்றும் நினைக்கிறார்கள். சிலர் ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக் என்று நமக்கு சொல்லி நாம் அவர்களுக்கு ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக் என்று சொல்லவில்லை என்றால் அதை மரியாதை இல்லாத செயலாகவும், அநாகரீகமான நடைமுறையாகவும் பார்க்கிறார்கள். இது தவறான சிந்தனையாகும். மார்க்கத்தில் சலாமிற்கு பதில் சலாம் சொல்லவேண்டும் என்பது போன்று இந்த ஈத் முபாரக்கையும், ஜூம்ஆ முபாரக்கையும் பதிலாக சொல்லவேண்டும் என்று நினைப்பது தவறாகும்.

சில வீடுகளில் பெரியவர்களும் கூட இதன் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் இதை சொல்லாததற்கு சண்டை போடுவதும் மனம் சங்கடம் கொள்வதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது. ஒரு சாதாரண விஷயத்தை புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கவன கு​றைவால் மகிழ்ச்சியான பெருநாள் துக்கமான நாளாக மாறிவிடுகிறது.


​​எனவே ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக் என்று சொல்லுவது நமக்குள் மகிழ்ச்சியை பரிமார்க்கொள்ள சொல்லப்படும் ஒரு பிரார்த்தனையாக பார்க்க வேண்டுமே தவிர அதை சொல்வது கட்டாய கடமை என்றும், அதற்கு பதில் சொல்வதுதான் வலியுறுத்தப்பட்டது என்றும் நினைப்பது தவறாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே எது எப்படி இருந்தாலும் இரு பெருநாள் தினங்களிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிரத்தியோகமாக ஹதீஸ் நூல்களில் வந்துள்ள “தகப்பலல்லாஹு மின்னா வ மின்க” என்ற துஆவை சொல்வதே மிகச் சிறந்த பொருத்தமான ஒன்றாகும், ஆனாலும் ஒருவர் தனது தாய் மொழியில் தனக்கு விருப்பமான சொற்களைப் பயன்படுத்தி குர்ஆன் ஹதீசுக்கு முரணில்லாத வகையில் துஆச் செய்யும் வகையில் "ஈத் முபாரக், ஜும்ஆ முபாரக்" வாழ்த்துவதிலும் தவறில்லை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும், பரக்கத் செய்யட்டும், மகிழ்ச்சியைத் தரட்டும் என்றெல்லாம் கூறுவதில் தவறு இல்லை என்பதே சரியான கருத்தாகும்.


♣ ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளை "பக்ரீத் திருநாள்" என்று அழைக்காதீர்கள்

மாற்று மத சகோதரர்கள் (காபிர்கள்) ஹஜ் பெருநாள் தினத்தை "பக்ரீத்" திருநாள் அல்லது "பக்ரீத் பெருநாள்" என்று இச்சொற்றொடரைக் கொண்டு பரவலாக பிரயோகிப்பதை நாம் செவியேற்கின்றோம். அதுமட்டுமல்லாமல் நம்மில் குறிப்பாக சில தமிழக முஸ்லிம்கள் மத்தியிலும் பக்ரீத் எனும் இச்சொற்றொடர் பிரயோகிக்கப்படுவதை கவனிக்கின்றோம். அந்த அடிப்படையில் பக்ரீத் என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால் அச்சொற்றொடரை இதன் பிறகு யாருமே பிரயோகிக்க மாட்டோம்.

காரணம் "பக்ரீத் - பகரா + ஈத்" என்றால் மாட்டுப்பெருநாள் என்று பொருள் (அரபியில் பகரா என்றால் மாடு, ஈத் என்றால் பெருநாள்) இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது போல் அழைப்பது நம்முடைய நாட்டிலும் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவி வழக்கமாக ஆகிவிட்டது. இது ஒரு சூழ்ச்சியாக கூட இருக்கலாம். காரணம் முஸ்லிம்களின் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும், உண்மையான ஆன்மீக காரணத்தை மறக்கடிக்கவும் செய்து இருக்கலாம்.


​​நபி இப்ராஹிம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுவதே "தியாக திருநாள் - ﻋﻴﺪ ﺍﻵﺿﺤﻰ - ஈதுல் அழ்ஹா" என்றே அழைக்க வேண்டும். ஈத் என்றால் பெருநாள். அழ்ஹா என்றால் தியாகமாகும்.

​​