MAIL OF ISLAM

Knowledge & Wisdom



கப்றுகளை முத்தமிடலாமா?

**************************************

எழுதியவர்: மௌலவி  S.L.அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள, ஷூஹதாக்கள், வலிமார்களின் கப்றுகளை முத்தமிடலாமா?

♣ புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு:-

நபிமார்கள, ஷூஹதாக்கள், வலிமார்களின் கப்றுகளை முத்தமிடுவது கூடாது, ஷிர்க் என்றும் அதனை செய்பவர்கள் முஷ்ரிகீன்கள் என்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்யாமலும் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்து கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள். வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

♦நல்லடியார்களின் கப்ருகளை முத்தமிட்டால் "கப்று வணங்கி என்று கூறும் வஹ்ஹாபிகளே!!!

மனைவியை முத்தமிட்டால் மனைவி வணங்கி, குழந்தைகளை முத்தமிட்டால் குழந்தை வணங்கி, பூக்களை முத்தமிட்டால் பூ வணங்கி, ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டால் கல் வணங்கி, மரணித்த பெற்றோர்களின் (மையத்திற்க்கு) முத்தமிட்டால் பிணம் வணங்கி என்று சொல்வீர்களா???

♦இன்னும் சில வஹ்ஹாபிகள் நல்லடியார்களில் கப்றுகளை முத்தமிட்டால் கப்ருகளுக்கு சுஜூது செய்கிறார்கள் என்று  சுன்னத் வல் ஜமாஅத் நண்பர்களைப் பார்த்து விமர்சனம் செய்வார்கள். எனவே சுன்னத் வல் ஜமாஆத் உலமாக்கள் அன்று தொட்டு இன்றுவரை கூறி வரும் விடயம்தான் இறைவனை தவிர வேறு எந்த ஒருவருக்கும் அல்லது எந்த ஒன்றுக்கும் அது நல்லடியார்களின் கப்றுகளாக இருக்கட்டும், பெரியோர்களாக இருக்கட்டும் இன்னும் சிறப்புக்குறிய வஸ்துக்களாக இருக்கட்டும் அவர்களுக்கு அல்லது அவைகளுக்கு இபாதத் என்ற அடிப்படையில் சுஜூது செய்வது ஷிர்க் என்றும் கண்ணியம், மரியாதை இதுபோன்ற அடிப்படையில் சுஜூது செய்வதும் ஹராம் என்றுதான் சொல்லி வருகின்றோம்.

♦மேலும் கப்றுகளுக்கு, ஷைகுமார்களுக்கு சுஜூது செய்யலாம், கூடும் என்று சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க அறிஞர்கள் எங்கேயாவது கூறியுள்ளார்களா? அப்படி எந்த இமாம்கள்,அறிஞர்கள் எந்த கிதாபில் கூறியுள்ளார்கள் என்பதை வஹ்ஹாபிகளால் நிறுபிக்க முடியுமா? கியாமத் நாள் வரைக்கும் நிறுபிக்க முடியாது. ஏனெனில் சுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் அறிஞர்கள் யாரும் கப்ருகளுக்கு சுஜூது செய்யலாம்,ஷைகுமார்களுக்கு ஸுஜூது செய்யுங்கள் என்று கூறவே இல்லை மாறாக வஹ்ஹாபிகள் பாமர மக்களை வழிகெடுக்க இப்படி கூறிவருவது ஓர் ஆயுத வார்த்தைகள் என்பதுதான் உண்மை.

அந்த அடிப்படையில் சுன்னத் வல் ஜமாஆத் ஈமானிய சொந்தங்கள் கப்றுகளுக்கு சுஜூது செய்யவில்லை மாறாக கப்ருகளை குனிந்து முத்தமிடுகிறார்கள் இதுதான் உண்மை எனவே இந்த வஹ்ஹாபிகளுக்கு சுஜூதுக்கும், குனிந்து முத்தமிடுவதற்க்கும் வித்தியாசம் தெரியாமல் கப்ருகளை சுஜூது செய்கிறார்கள் என்று ஈமானிய சொந்தங்களாகிய சுன்னத் வல் ஜமாஆத்தினர்களைப் பார்த்து விமர்சனம் செய்து மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். சுஜூது என்றால் என்ன? சுஜூதுடைய நிபந்தனைகள் என்ன? சுஜூதுடைய உருப்புக்கள் என்ன? என்பதற்குறிய விளக்கங்களை வஹ்ஹாபிகள் தெரிந்திருப்பார்கள் என்றால் நிச்சயமாக கப்ருகளை முத்தமிடுபவர்களைப் பார்த்து கப்றுகளுக்கு சுஜூது செய்கிறார்கள் என்று ஒரு போதும் கூறமாட்டார்கள். 


​​அந்த அடிப்படையில் “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது" என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: என உமர்(ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். (ஷஹீஹ் புகாரி 54)

ஒருவர் தரையில் தூங்கிக்கொண்டு இருக்கும் சிறு குழந்தையை முத்தமிடுவதாக இருந்தால் குனிந்து தான் முத்தமிட வேண்டும் அப்படி குனிந்து முத்தமிடுபவரைப் பார்த்து அவர் குழந்தைக்கு  சுஜூது செய்கிறார் என்று சொல்ல முடியுமா? இந்த வஹ்ஹாபிகள் சொன்னாலும் சொல்வார்கள் எனவே அந்த அடிப்படையில் குனிந்து முத்தமிடுவது சுஜூது அல்ல மேலும் குனிந்து முத்தமிடுவது கூடாது என்றால் அதற்கு ஆதாரங்களை முன்வையுங்கள் எப்படி எந்த முறையில் முத்தமிட வேண்டும் என்று.

♣  நல்லடியார்களின் கப்றுகளை முத்தமிடலாம்  ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்று ஷரீபை முத்தமிட்டுள்ளார்கள் என்பதற்குறிய ஆதாரங்கள்

1. ஒரு முறை மர்வான் அவர்கள் ஒரு மனிதர் தனது முகத்தைக் கப்ரில் வைத்திருப்பதைக் கண்டு அவரது கழுத்தைப் பிடித்து "நீர் என்ன செய்கிறீர்" என்று தெரியுமா? எனக் கேட்டார். அவர் ஆம் எனக் கூறி திரும்பிய போது பார்த்தால் அவர்தான் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்.. அவர் "நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம்தான் வந்துள்ளேனே அல்லாமல் கல்லிடத்தில் வரவில்லை" என்றார். மேலும்.உரியவர் பதவிக்கு வந்தால் மார்க்கம் பாழாகிவிடும் என அழாதீர்கள் உரியவர் அல்லாதவர் வந்தால் அவ்வாறு அழுங்கள் என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூற நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.

(இந்த செய்தி இமாம் இப்னு அபீ ஹைதமா (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களின் தாரீஹ் என்ற‌ நூலிலும், இப்னு அஸாகிர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களின் தாரீகு திமிஸ்க் என்ற கிரந்தத்திலும், இமாம் தபறானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களது முஃஜமுல் கபீர் மற்றும் அவ்ஸத் என்ற இரு நூற்களிலும், முஸ்னத் அஹ்மத் (பாகம் 48, பக்கம்77) நூலிலும், இமாம் ஹாகிம் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள‌து முஸ்தத்ரக் என்ற நூலிலும், மஜ்மவுஸ் ஸவாயித், பா-4,ப-2)இடம் பெற்றுள்ளது, இமாம் தஹபீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் ஹதீஸ் ஸஹீஹ் என்றும் கூறியுள்ளார்கள்)

2. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்குப் பின் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கலீபா அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து"ஒரு விசுவாசியின் சிறந்த நற்செயல் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதே" என நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்" எனக் கூறினார்கள். அதற்கு அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கேட்க "நான் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் பிரிய விரும்புகிறேன்" என பதிலளித்தார்கள்.அதற்கு அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களோ "பிலாலே நீங்கள் சென்றுவிட்டால் யார் அதான் சொல்வது? எனவே நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள் " எனக் கூறினார்கள்.பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களோ "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் நான் யாருக்கும் அதான் சொல்ல மாட்டேன்; நீங்கள் அடிமையாக இருந்த என்னை உங்களுக்காகவே உரிமை விட்டிருந்தால் நான் இங்கேயே தங்கியிருக்கிறேன். இல்லை அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் உரிமைவிட்டிருந்தால் என்னை அவனுக்காகவே விட்டுவிடுங்கள்" எனக் கூறினார்கள்.

அதற்கு அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் " நான் உங்களை அல்லாஹ்வுக் காகவே உரிமை விட்டேன்" எனக் கூற பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷாம் தேசம் புறப்பட்டு அங்கே அல்லாஹ்வின் பாதையில் போராடினார்கள்.சில வருடங்கள் சென்றதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது கனவில் வந்து "பிலாலே! எம்மீது என்ன கோபம்?எம்மை தரிசிக்க வரமாட்டீரோ" எனக் கேட்டார்கள்.கவலையுடன் விழித்தெழுந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவுக்கு வந்து நபியவர்களின் கப்ரடிக்குச் சென்று அங்கே அழுது தனது முகத்தினை நபிகள்  நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ஷரீபின் மீது வைத்து புரட்டி புரட்டி எடுத்தார்கள் (முத்தமிட்டார்கள்) அப்போது அங்கே வந்த ஹஸன் ,ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹூமா) அவர்கள் இருவரையும் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கட்டியணைத்து முத்தமிட்டார்கள். அவ்விருவரும் ஸஹர் வேளையில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அதான் சொல்லும் படி வேண்டிக் கொண்டார்கள்.உடனே பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பள்ளிவாயிலின் கூரை மீதேறி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என அதான் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது மதீனா நகரமே அதிர்ந்தது. அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்றதும் இன்னும் அதிர்ந்தது.அஷ்ஹது அன்ன முஹம்மது ரஸூலுல்லாஹ் என்றதும் வீடுகளில் இருந்த பெண்கள் எல்லாம் வெளியே வந்து அழலானார்கள். என்றுமேயில்லாதவாறு அன்று அவர்கள் அழுதார்கள். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எல்லோரையும் விட அதிகம் அழுதவ்ராக இருந்தார்கள். 


​ஆதாரம் : தாரகுத்னீ, முவத்தா, பஸ்சார், இப்னு அஸாகிர் (ரலியல்லாஹு அன்ஹு)

தாரீகு திமிஸ்க் (பாகம்-7,பக்கம்- 137)என்ற கிரந்தத்தில் அழகிய இஸ்னாத் ஸஹீகானது என்றும் கூறியுள்ளார்கள்)

சில புதுமை விரும்பிகள் மேலே  கூறப்பட்ட எல்லாம் சரிதான் ஆனால் தர்ஹாக்களில் சில மாற்றுமதத்தவர்களின் கலாசாரம் பின்பற்றப்படுகிறதே என்று விமர்சனம் செய்து ஸியாரம் கூடாது என்று பாமரமக்களை பொய்யான கருத்துக்களை உள்ளத்தில் விதைத்து அவர்களை வழிகெடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அல்லாஹ் போதுமானவன் இன்று எத்தனையோ பேர் இந்த  வஹ்ஹாபிகளின் நச்சுக்கருத்துக்களை கேட்டு ஈமானை இழந்து நஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள் அனைவர்களுக்கும் இறைவன் நேர்வழி காட்டுவானாக!

♦ யூதர்களின் வழிமுறை :

ஆடைகள் அணிவார்கள்,திருமணம் முடிப்பார்கள்,ஒரு நாளைக்கு மூன்று தடவை உணவு சாப்பிடுவார்கள்,விகாரைக்கு செல்லும்போது வெள்ளை ஆடை அணிவார்கள்,தொழில் செய்வார்கள்,திருப்பதி சென்று மொட்டை அடிப்பார்கள், கங்கை நீரை மதிப்பார்கள்.

♦ இஸ்லாமியர்களின் வழிமுறை :

ஆடைகள் அணிவார்கள், திருமணம் முடிப்பார்கள், ஒரு நாளைக்கு மூன்று தடவை உணவு சாப்பிடுவார்கள், ஹஜ்ஜூக்கு செல்லும்போது வெள்ளை ஆடை  அணிவார்கள், தொழில் செய்வார்கள், மக்கா சென்று மொட்டை அடிப்பார்கள், ஸம் ஸம் தண்ணீரை மதிப்பார்கள்.

 எனவே மேலே கூறப்பட்ட அனைத்து விடயங்களிலும் மாற்றுக்கொள்கையிலுள்ள கூட்டத்திற்க்கு நாம்  ஒப்ப நடக்கின்றோம் என்று சாப்பிடாமல், ஆடை அணியாமல்,திருமணம் செய்யாமல்,தொழில் செய்யாமல் ஹஜ் செய்யாமல், ஸம் ஸம் தண்ணீரை மதிக்காமல் இருக்கலாமா? எனவே இதனை எவ்வாறு புரிந்து  கொள்ளவேண்டும் என்பதை இறைவன் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான் "உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்." (அல்குர்ஆன் : 109:6)எனவே நபிமார்கள், வலிமார்கள், ஷூஹதாக்களின் கப்றுகளை முத்தமிடலாம் என்பது நபிமொழிகள் அடிப்படையில் தெளிவாகின்றது.