MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
கப்றுகளை உயர்த்தி கட்டலாமா?
********************************************
எழுதியவர்: மௌலவி S.L அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
இஸ்லாத்தின் பார்வையில் நபிமார்கள்,வலிமார்கள், ஷூஹதாக்களின் கப்றுகளை உயர்த்தி கட்டலாமா?
♣ புதுமை விரும்பிகளாகிய வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு:-
நபிமார்கள், ஷூஹதாக்கள், வலிமார்களின் கப்றுகளை உயர்த்தி கட்டுவது கூடாது, ஷிர்க் என்று ஹதீஸ்களை ஆய்வு செய்யாமலும் சில நபிமொழிகளை மறைத்து இருட்டடிப்பு செய்தும் கிருக்கு பிடித்தவர்களாக வழிகேட்டில் சென்று கொண்டு இருக்கிறார்கள். வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
♦ “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவன் வழிகெட்ட இப்னு தைமியா என்பவன்தான் (ஸாதுல் மஆத் – பக்கம் 661)
இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன், அல்ஹதீஸ், அல் இஜ்மாஉ, அல்கியாஸ் ஆகிய நான்கு மூலாதாரங்களின் அடிப்டையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல. இந்த தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு படித்த முட்டாள் வஹ்ஹாபிகளும் மேலும் சில பாமரர்களும் கப்றுகளை உடைத்தெறியவேண்டும் என கோஷமிடுகின்றனர்.
♣ நல்லடியார்கள் மரணித்து கப்ரில் அடக்கம் செய்த பின் அந்த கப்ரை அடையாளம் காட்டுவதற்காக உயர்த்தி கட்டுவதற்க்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டு.
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலும், ஸஹாபாக்களின் காலத்திலும் மிக மிக உயரமில்லாததாகவும் தரையோடு தரைமட்டமில்லாமலும் நடுநிலையான அளவில் கப்றுகள் கட்டப்பட்டுள்ளது, நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் என்பதற்குறிய ஆதாரங்களை பின்வருமாறு பார்க்கலாம், அதுமட்டுமல்லாமல் நபிமார்கள்,வலிமார்கள், ஷூஹதாக்களின் கப்று ஷரீபுகள் ஸஹீகான ஹதீஸ்களின் அடிப்படையில்தான் கட்டப்பட்டு பல நூற்றாண்டுகளை கடந்துவிட்டது. இதற்கு பிறகு புதுமை விரும்பிகள் கப்ருகளை தரைமட்டமாக்குதல் பற்றி குறைமதியில் கூட பார்க்க கூடாது.காரணம் இன்று உலகளவில் கண்ணியத்திற்க்கு சவாலாக இருக்கின்றது. இன்றுவரை எத்தனையோ நல்லடியார்களின் கப்றுகள் புதுமை விரும்பிகளின் சூல்ச்சியிலிருந்து பாதுகாக்கப்பட்டுவந்ததே பெரும் ஆதாரமாக இருக்கின்றது.
வஹ்ஹாபிகள் பாமர மக்களிடம் அசத்தியத்தை கூறி தூய மார்க்கத்தை அசிங்கப்படுத்துவதர்காக ஒரு ஆய்யுதம் வைத்திருக்கின்றார்கள். அதுதான் சுன்னத் வல் ஐமாத்தினர்கள் நபிவழி ஸியாரம் செய்தால் "கப்று வணங்கி,அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய சுஜூதை கப்றுகளுக்கு செய்கிறார்கள் என்று விமர்சனங்கள் செய்வார்கள். இதன் விளக்கம் தெரியாத எத்தனையோ பாமரமக்கள் அந்த வஹ்ஹாபிகளின் மாயவலையில் சிக்கி ஈமானை இழந்து நஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.
♦வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டும்தான் ஆனால் மரியாதை, கண்ணியம் என்பது இறைவனின் இறைநேசர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை அல்லாஹ் குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான். எனவே சுன்னத் வல் ஐமாத்தினர்கள் யாருமே கப்றுகளை வணங்கவுமில்லை, கப்றுகளுக்கு சுஜூது செய்யவுமில்லை. அப்படி யாராவது செய்தால் அது கூடாது என்று தடுப்பதே எங்களது கொள்கையாகும்.
♦ முதலில் வஹ்ஹாபிகளுக்கு வணக்கம் என்றால் என்ன? கண்ணியம் என்றால் என்ன? என்பதற்குறிய விளக்கம், அடிப்படை அறிவே இல்லாத விளைவே இதற்குறிய காரணமாகும். இப்லீசும் அல்லாஹ்வைதான் வணங்கினான் மலக்குமார்களும் அல்லாஹ்வைதான் வணங்கினார்கள் இப்லீஸ் ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்த மறுத்தான் எனவே இறைவனால் சபிக்கப்பட்டான், மலக்குமார்கள் ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்தினார்கள் எனவே இறைவனால் புகழப்பட்டார்கள்.
இன்று அசத்தியத்தை கூறும் புதுமை விரும்பிகள் இப்லீஸ் கொள்கையை விட்டு ஒதுங்கி தவ்பாச் செய்து ஈமானை புதுபித்துக் கொள்ளுங்கள்.
♣ கப்றுகளை உடைத்து தரைமட்டமாக்க வேண்டும் என்று வஹ்ஹாபிகள் காட்டும் போலி ஆதாரங்களுக்கு தக்க பதில்கள்
♦ஹதீஸ் (وَلَا قَبْرًا مُشرِفًا إِلَّا سَوَّيْتَهُ)
நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.எந்த ஒரு கப்ரையும் உயரமாக இருப்பதை கண்டால் அதை தரைமட்டமாக்குங்கள் என்று கூறியுள்ளார்கள் எனவே இந்த ஹதீஸ் பிரகாரம் இஸ்லாம் மார்கத்திற்கு எதிராகதான் தர்ஹாக்களில் கப்ருகளை கண்டியுள்ளார்கள் என்று சுன்னத் வல் ஜமாஅத்தினர்களுக்கு எதிரான வஹ்ஹாபிகள் கூறுகிறார்கள்.
குறிப்பு : வஹ்ஹாபிகள் எத்தனையோ ஸஹீகான ஹதீஸ் கிதாபுகளை தப்பான அர்த்தங்களை கொடுத்து, தமது அசத்திய கொள்கைக்கு சார்பாக ஹதீஸ்களை வலைத்து இருட்டடிப்பு செய்து மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள். அந்த அடிப்படையில்தான் மேலே கூறப்பட்ட ஹதீஸூம் தப்பான அர்த்தம் வைத்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் உண்மைதான் ஆனால் ஹதீஸின் மொழிபெயர்ப்பினை வஹ்ஹாபிகள் தவரான தப்பாக கொடுத்துள்ளார்கள்.
♣ 'சவ்வா' என்றால் என்ன அர்த்தம்?
மேலே கூறப்பட்ட ஹதீஸில் "சவ்வா" என்ற அரபு இபாரத் வார்த்தை இடம்பெற்றுள்ளது அதற்கு வஹ்ஹாபிகள் தரைமட்டமாக்குதல் என்று பொருள் கூறுவது தவறாகவும். ஏனெனில் "சவ்வா" என்றால் ஒழுங்கு படுத்துதல், சரிசெய்தல், சீர்செய்தல் என்பதுதான் பொருளாகும். இதனை நாங்கள் கூறவில்லை. குர்ஆனில் சவ்வா என்பதற்கு அப்படிதான் பொருள் கூறப்பட்டு வந்துள்ளது. ஆனால் சவ்வா என்றால் தரைமட்டமாக்குதல் என்று பொருள் கூறப்படும் ஒரே ஒரு குர்ஆன் வசனத்தை வஹ்ஹாபிகளால் கொண்டுவர முடியுமா? கியாமத் நாள் வரைக்கும் கொண்டுவர முடியாது. ஏனெனில் சவ்வா என்றால் தரைமட்டமாக்குதல் என்பது தவரான அர்த்தமேயாகும்.
1) ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ
பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும். (அல்குர்ஆன் : 32:9)
2) فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! (அல்குர்ஆன் : 15:29)
3) هُوَ الَّذِي خَلَقَ لَكُم مَّا فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ اسْتَوَىٰ إِلَى السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:29)
♦ மேலே கூறப்பட்ட ஹதீஸில் "தரை மட்டமாக்குதல்" என்று வஹ்ஹாபிகள் பொருள் கொண்ட இடத்தில் "ஸவ்வைத்தஹு" என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. மேலும் 'சவ்வா' என்றால் என்ன அர்த்தம் என்பதற்குறிய சில ஆதாரங்களும் மேலே குர்ஆன் வசனங்களிலிருந்து பார்த்தோம். வானங்களை ஒழுங்கு படுத்தினான் என்று பல வசனங்களில் இதே 'ஸவ்வா' என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வஹ்ஹாபிகளே! "இறைவன் வானத்தைத் தரை மட்டமாக்கினான்" என்று பொருள் கொள்வீர்களா? எனவே 'ஸவ்வா' என்பதன் சரியான பொருள் ஒழுங்கு படுத்துதல், சீர்படுத்துவதேயாகும்.
♦ கப்ருகளை தரைமட்டமாக்குதல் என்று அர்த்தம் வைத்தால் எப்படி ஸஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை உயரமாக வைத்திருந்திருப்பார்கள்?
நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அடக்கம் செய்யப்பட்ட பின் அலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களும் இருந்தார்கள்தானே! எனவே அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிருப்பார்கள் அல்லவா! என்னிடமே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள் கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் என்று அப்படி கூறிவிட்டுச் சென்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரை ஏன் உயரமாக வைத்திருக்கின்றீர்கள் என்று கூறியிருக்கனுமே! அப்படி கூறவில்லையே...!
♦ எனவே இதிலிருந்து என்ன விளங்குகின்றது அலி ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஸஹாபாக்களை பார்த்து நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் என்று கூறவில்லை. மாறாக மிக மிக உயரமாக கப்ருகள் இருந்தால் அந்த கப்ருகளை ஒழுங்கு படுத்துங்கள் சீர்படுத்துங்கள் என்றுதான் கூறினார்கள். அந்த அடிப்படையில் சவ்வா என்றால் ஒழுங்கு படுத்துதல், சீர்படுத்துதல் அதாவது மிக மிக உயரமாக கப்ருகளை தரையோடு தரைமட்டமில்லாமல் நடுநிலையான அளவில் ஒழுங்கு படுத்துதலாகும்.
♣ நல்லடியார்களின் கப்றுகளை உயர்த்தி கட்டுவதற்கான ஆதாரங்கள்:
♦ அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் என்னிடம், ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த ஒரு விக்ரகங்களை நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் ஒழுங்கு படுத்தாமல் விட்டு விடாதீர்!”என்று கூறினார்கள். (நூல் முஸ்லிம் : 1764)
ஹதீஸ் விளக்கம் :
'ஸவ்வா' என்பதன் பொருள் ஒழுங்கு படுத்துதல், சீர்படுத்துவது தான் எனவே அடிப்படை அரபு வார்த்தையினை அறியாததே இந்த வஹ்ஹாபிகளின் தவரான தப்பான விளக்கத்திற்க்கு காரணம்.எனவே கப்ருகள் மிக மிக உயரமாக இல்லாமலும், தரையோடு தரைமட்டமில்லாமலும் நடுநிலையாக இருக்கவேண்டும் என்பதைதான் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
♦ காரிஜத் இப்னு ஸைத் ரலியல்லாஹூ அன்ஹூ அறிவிக்கிறார்கள்
"எங்களில் யார் உஸ்மான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் கப்ரை (அகலத்தால்) கடந்து உயரம் பாய்கின்றார்களோ அவர்கள்தான் நல்ல உயரம் பாய்யும் வீரர் என்று கருதப்படுவார்" ஆதாரம் : புஹாரி - பாகம் 5, பக்கம் - 147
ஹதீஸ் விளக்கம் :
ஒருவர் அகலத்தால் உயரம் பாய்யும் அளவுக்கு உஸ்மான் இப்னு மல்ஊன் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களின் கப்ரு உயரமாக கட்டப்பட்டுள்ளது. இந்த ஸஹாபியின் கப்று அலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் காலத்திலயே கட்டப்பட்டது. இந்த கப்று உயரமாக கட்டப்பட்டிருந்தது அலி (ரலியல்லாஹு அன்ஹு)அவர்களுக்கு தெரியாமல் போய்வி ட்டதா?
♦ وَفِي الْأَحْكَامِ عَنْ جَامِعِ الْفَتَاوَى: وَقِيلَ لَا يُكْرَهُ الْبِنَاءُ إذَا كَانَ الْمَيِّتُ مِنْ الْمَشَايِخِ وَالْعُلَمَاءِ وَالسَّادَاتِ اهـ
ஷைக்குமார்கள், ரப்பானிகலாகிய உலமாக்கள்,ஸாதாத்மார்களின் கப்றுகளை கட்டுவதில் எவ்வித தடையும் கிடையாது.
♦ இமாம் காளி இயாள் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் மற்றுமுள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பாண்மையோர் '' நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர். (இத்திஹாப் 4: 416,417)
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் கப்ரு ஒட்டகத்தின் திமில் போன்று உயரமாக இருந்ததைத் தாம் பார்த்ததாக சுஃப்யான் அத் தம்மார் ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.(ஆதாரம் : புஹாரி - 1390)
♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்று ஷரீப் தரைமட்டமில்லாமலும் மிக மிக உயரமில்லாமலும் கப்ரின் மேல்பகுதி அழகான சிவந்த பொடிக்கற்கலால் பதிக்கப்பட்டிருந்தது. ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் இருந்த அறையிலே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அடக்கப்பட்டார்கள்.
எனவே ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் அந்த அறையின் குறுக்கே மண்ணினால் ஒரு மதிலை எழுப்பி,நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீஃப் ஒரு புறமிருக்க ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) மறுபுறம் இருந்து கொண்டார்கள். அடிக்கடி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை ஜியாரத்துக்கு வருவதற்கு அதே மதிலில் ஒரு வாசலை வைத்துக் கொண்டார்கள். அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டின் மேற்கூறை பழுதுப்பட்டு இருந்ததால் காலப்போக்கில் இந்த மண்மதில் மழையால் கரைந்துவிட்டது.
இதன் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் (ஹிஜ்ரி 23 வரை) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு ஷரீஃபை சுற்றி முக்கோணவடிவில் அழகிய கருங்கற்கலால் மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெறியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும் எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரை சுற்றி பெரும் பள்ளம் ஏற்பட்டு, புனிதமிகு ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனப்பயந்த ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன. இம்மதில்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்ரு தெரியும்படி துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஜன்னல் போன்ற துவாரமும் அடைக்கப்பட்டது. (வஃபாவுல் வஃபா 2:544)
♦நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன். பின்பு அன்னையே! எனக்கு நபி நாயகத்தின் மற்றும் அவர்களின் இரு தோழர்களின்(அபூபக்கர்,உமர்)ரலியல்லாஹூ அன்ஹும் கப்றுகளை திறந்து காட்டுங்கள் என்றேன். அவர்கள் எனக்கு மூன்று கப்றுகளையும் திறந்து காட்டினார்கள். அவைகள் மிகவும் உயரமில்லாமலும் தரை மட்டமாக இல்லாமலும் சிகப்பு கற்கலால் பதிக்கப்பட்டு இருந்தன . என காஸிம் இப்னு முஹம்மத் இப்னு அபீபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நூல் : அபூதாவூத், மிர்காத் 167,379,380 பாகம் 2
♦ ஹழ்ரத் அபூ பக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ , ஹழ்ரத் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ ஆகியோரின் கப்ருகள் ஒட்டகத்தின் திமிலைப் போன்று உயரமாக இருந்ததை தாம் கண்டதாக அபூ நயீம் அவர்கள் தமது முஸ்தக்ரஜ் என்னும் நூலில் குறிபிட்டுள்ளார்கள்.
♦ உமையாக்களின் ஆட்சிகாலத்தில் உமர் பின் அப்துல் அஜீஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவின் கவனர்னராக இருந்தார்கள் அப்போது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் புனிதமிகு கப்ரு ஷரீபை சுற்றியிருந்து மதிகள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு, சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம் செய்ய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது. இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மினிதமிகு ரவ்ளா ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்பு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன.
♦ அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், அபூபக்கர் (ரழியல்லாஹு அன்ஹு), உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து விட்டது. இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது. இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கால்தான் என பதறித்துடித்து ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த உர்வா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கால் அல்ல. இது நிச்சயமாக உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரை துடைத்தார். இந்நிகழ்ச்சி உமர் பின் அப்துல் அஜீஜ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் முன்னிலையிலே நடந்தது. மீண்டும் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு கப்ருகள் கட்டப்பட்டன.
ஐனீ 4:251, பத்ஹுல் பாரி 3:165, ஹயாதுஸ் ஸஹாபா 22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477
♦ ஒரு முறை மர்வான் அவர்கள் ஒரு மனிதர் தனது முகத்தைக் கப்ரில் வைத்திருப்பதைக் கண்டு அவரது கழுத்தைப் பிடித்து "நீர் என்ன செய்கிறீர்" என்று தெரியுமா? எனக் கேட்டார். அவர் ஆம் எனக் கூறி திரும்பிய போது பார்த்தால் அவர்தான் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்.. அவர் "நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம்தான் வந்துள்ளேனே அல்லாமல் கல்லிடத்தில் வரவில்லை" என்றார். மேலும்.உரியவர் பதவிக்கு வந்தால் மார்க்கம் பாழாகிவிடும் என அழாதீர்கள் உரியவர் அல்லாதவர் வந்தால் அவ்வாறு அழுங்கள் என நபியவர்கள் கூற நான் கேட்டேன் எனக் கூறினார்
(இந்த செய்தி இமாம் இப்னு அபீ ஹைதமா (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களின் தாரீஹ் என்ற நூலிலும், இப்னு அஸாகிர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களின் தாரீகு திமிஸ்க் என்ற கிரந்தத்திலும், இமாம் தபறானி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களது முஃஜமுல் கபீர் மற்றும் அவ்ஸத் என்ற இரு நூற்களிலும், முஸ்னத் அஹ்மத் (பாகம் 48, பக்கம்77) நூலிலும், இமாம் ஹாகிம் (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களது முஸ்தத்ரக் என்ற நூலிலும், மஜ்மவுஸ் ஸவாயித், பா-4,ப-2)இடம் பெற்றுள்ளது, இமாம் தஹபீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் ஹதீஸ் ஸஹீஹ் என்றும் கூறியுள்ளார்கள்)
♦ ஒரு சமயம் அம்ரு இப்னு ஹஸூம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு கப்ரின் மீது சாய்ந்து கொண்டு இருந்ததை கண்ட நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அம்ரே!! இந்த கப்ருக்குள்ளே இருப்பவருக்கு நோய்வினை கொடுக்காதிங்க என எச்சரித்தார்கள். ஆதாரம் : முஸ்னத் அஹ்மத் - 28425
ஹதீஸ் விளக்கம் : ஒரு ஸஹாபி கப்ரின் மீது சாய்ந்துகொண்டு இருந்தார்கள் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள் என்றாலே என்ன விளங்குகின்றது? சாகின்ற அளவிர்க்கு உயரமாக கப்று கட்டப்பட்டு இருந்தது என்று விளங்குகின்றது. வஹ்ஹாபிகள் கூறுவார்கள் கப்ருகளை தரைமட்டமாக்க வேண்டும் என்று அப்ப எப்படி அந்த ஸஹாபி கப்றின் மீது சாய்ந்துகொண்டு இருக்க முடியும்? இந்த கப்று ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலயே உள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் என்று கூறியிருந்தால் அந்த கப்று எப்படி உயரமாக இருந்திருக்கும்? எப்படி அம்ரு இப்னு ஹஸூம் என்ற ஸஹாபி சாய்ந்துகொண்டு இருந்திருப்பார்கள்? எனவே கப்ருகள் மீது சாய்ந்து உட்காருவது அவமரியாதை அதனால்தான் அம்ரே! (ரலியல்லாஹு அன்ஹு) கப்றின் மீது சாய்ந்து அந்த கப்றாலிக்கு நோய்வினை கொடுக்காதீர்கள் என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
வஹ்ஹாபிகள் கூறுவது போன்று கப்றுகளை தரைமட்டமாக்க வேண்டும் என்றிருந்தால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் "அம்ரே! (ரலியல்லாஹு அன்ஹு) அந்த கப்ரு இஸ்லாம் மார்க்கத்திற்கு முரனாக கட்டப்பட்டுள்ளது அதனை தரைமட்டமாக்குங்கள் என்று கூறிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு கூறவில்லயே? அல்லது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இதைச் சொல்வதற்கு மறந்து விட்டார்களா? எனவே கப்றுகளை கட்டலாம் அதற்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகாரம் அழித்துள்ளார்கள் என்பது தெளிவாகின்றது.
♦மேலும் இந்த ஹதீஸினை நோக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்திலயே கப்ருகள் கட்டப்பட்டதாகவே இருந்துள்ளது. எந்தலவு என்றால் ஒருவர் சாய்ந்து உட்காரும் அளவிர்க்கு உள்ளது வஹ்ஹாபிகள் தப்பான அர்த்தம் வைப்பதுபோல் கப்ருகளை தரைமட்டமாக்க வேண்டும் என்று இருந்தால் தரைமட்டமான கப்ரின் மீது எப்படி சாயமுடியும் எனவே மிக மிக உயரமாக இல்லாமல் ஒருவர் சாய்ந்து உட்காரும் அளவுக்கு கப்ருகளை கட்டலாம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் அப்படி கப்ருகள் கட்டப்பட்டுள்ளது என்பது நபிமொழிகள் அடிப்படையில் தெளிவாகின்றது.