MAIL OF ISLAM

Knowledge & Wisdom



மீலாத் விழா கொண்டாடுவது கூடுமா?


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் உத்தம நபியின் ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் உதய தின விழாவைக் (பிறந்தநாளை) கொன்டாடுவது கூடுமா?


​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு 

மீலாது விழா, ஊர்வலம் இதுவெல்லாம் (ஷிர்க் - பித்அத்) தீமைத்யாகவே அமைந்துவிடும், மீலாது விழா கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அங்கீகாரம் இல்லவே இல்லை என குர்ஆன், ஹதீஸ்களை சரியான முறையில் ஆய்வு செய்யாமலும் மீலாது நபி விழா என்பது ஷிர்க்-பித்அத் என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்களையும் முன் வைக்காமலும் வாயால் மாத்திரம் வட்டியோட்டிக் கொண்டு கிருக்கு பிடித்தவர்களாக அசத்தியத்தை நிறுவ முயன்றுள்ளனர்.


​​எனவே இவர்கள் மேலே முன்வைத்துள்ள அனைத்து விமர்சனங்களுக்கும் கீழ்காணும் ஆதாரங்கள் மூலம் உடைத்தெரியப்படுகின்றன.

வழிகெட்ட வஹ்ஹாபிகளே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.


​​

♣ மீலாது விழாவும், அதன் அடிப்படை நோக்கமும் என்ன?

''வந்தது வசந்தம்'' ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது பரிபூரணமாக நேசம், மஹப்பத் கொண்ட உண்மை முஸ்லீம்கள் மாத்திரம் பெருமானார் பிறந்த தினத்தில் மீலாது விழாவிற்காக ஏற்பாடுகளைச் செய்யும் அதே வேளையில் மீலாது கொண்டாடக்கூடாது சுப்ஹான மெளலிது ஷரீபு ஓதுவது ஷிர்க் - பித்அத் என முஸ்லீம் பெயர் கொண்ட ஒரு கூட்டம் நாடி நரம்புகள் வெடிக்க கூக்குரலிடத் தொடங்கி விடுவார்கள்.

ஆகவே மீலாது விழாவின் அடிப்படை நோக்கமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் அன்றைய தினத்தில் கூட்டம் கூட்டமாக ஊர்வலமாக சென்று நன்றியை வெளிப்படுத்துவதாகும். இவ்வாறு எங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஒரு முஸ்தஹப்பான அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அள்ளித்தரக்கூடிய காரியமாகும்.

இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும். "எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை.


​​

♣  மீலாது விழா கொண்டாடுவது கூடாது, (ஷிர்க்-பித்அத்) என்று குர்ஆன்,ஹதீஸ்களில் வந்துள்ளதா?

மீலாது விழா சம்பந்தமாக ஆராய்ந்து பார்த்தால் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை கௌரவிக்கக் கூடாது என்று வாசகமாகவோ, சூசகமாகவோ, நேரடியாகவோ, அல்லது சாடையாகவோ, சைக்கினையாகவோ கூட குர்ஆனிலிருந்தோ அல்லது ஹதீஸிலிருந்தோ அல்லது ஸஹாபாக்கள், தாபிஈன்கள் கூடாது ஷிர்க் என்று சொன்னதாக காணக்கிடைக்கவில்லை.


​​மாறாக மீலாது விழா கொண்டாடலாம் என்பதற்குதான் எத்தனையோ ஆதாரங்கள் உள்ளன அந்த அடிப்படையில் வழிகெட்ட வஹாபிகள் மீலாதுன் நபி விழா கொண்டாடுவது ஷிர்க் என்று கூறி அதனை நினைவுப்படுத்த விழாக்கள் தேவையா? என்ற கேள்விகளுக்கு நாம் கூறும் பதில் இதுதான்' இந்த பாங்கை, இந்த தொழுகையை, இஸ்லாமியர்களின் நெறிவாழ்வைப் பெற்றுத் தந்த பெருமானார் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் இவற்றை எப்படி பெற்றார்கள்? இவற்றைச் செயல்படுத்த- சீர்படுத்த அவர்கள் எத்தகைய தியாகங்கள் புரிந்தார்கள் ? இந்த சமுதாயத்தை நிறுவ முற்பட்டபோது அவர்களிடமிருந்து என்னென்ன அருமையான அற்புதமான நற்குனங்கள் உலகுக்கு கிடைத்தன? அந்த அரிய அற வாழ்வை - அற்புதமான வரலாற்றை நாம் தெரிய வேன்டாமா? அதனை உலகுக்கு தெரியச் செய்ய வேன்டாமா? இறைவா' நீ உன் அருமைத் தூதரை அனுப்பிய மகிழ்சியை கொண்டாட என் நேரத்தை செலவழித்தேன். உன் இறுதித் தூதரின் விழாவைக் கொண்டாட என் ஹலாலான வருமானத்தைச் செலவு செய்தேன் என்று கூறும்போது.... இறைவன தண்டனையா கொடுப்பான்? பாராட்டி பரிசு மழையையல்லவா பொழிவான்!


​​

♣ மீலாது விழா கொண்டாடலாம் என்பதற்கான ஆதாரங்கள் குர்ஆனில் இருந்து பின்வருமாறு.

நிச்சயமாக அல்லாஹுதஆலா உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காகவே ரஸுல்மார்களின் சரித்திரங்களில் இருந்து ஒவ்வொன்றாக நாம் உமக்குக் கூறுகிறோம். இவைகளில் உண்மையும், நல்லுபதேசமும் விசுவாசிகளுக்கு நினைவூட்டலும் இருக்கின்றன. (ஸுரத்து ஹுத் 121)

♦ (நிச்சயமாக) நபிமார்களின் சரித்திரங்களில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் : 12:111)

♦மேலும், நாம் உமக்காக உம்முடைய (கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) புகழை மேலோங்கச் செய்தோம்.(அல்குர்ஆன் : 94:4)

♦ (மனிதர்களே) அல்லாஹ் உங்களுக்கு செய்திருக்கும் அருட் கொடைகளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணிவிட முடியாது! (அல்குர்ஆன் : 16:18)

♦ அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைவு கூறுங்கள், மற்றுமொரு ஆயத்தில் அல்லாஹ் குறிப்பிடும் போது "உங்களுடைய அல்லாஹ் அளித்த நிஹ்மத்துகளைப் பற்றி (பிறருக்கு) சொல்லிக்காட்டுங்கள்.(அல்குர்ஆன் : 93:11)

இவ்வசனங்களின் அடிப்படையில் அல்லாஹ் எங்களுக்கு அளித்த எத்தனையோ விதமான அருட்கொடைகளை நாங்கள் சொல்லி காட்டுகிறோம். எனவே அருட்கொடைகளில் மிகவும் சிறந்த அருட்கொடை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வருகையை. எனவே அவர்களின் வருகையை, அந்த வருகை கிடைத்த தினத்தினை கொண்டாடுவது எவ்வாறு விலக்கப்பட்ட விடயம் என்று கூற முடியும்?

♦மற்றொரு ஆயத்தில் அல்லாஹுதஆலா குறிப்பிடுகின்றான். "அல்லாஹு த ஆலா முஹ்மின்களின் மீது மாபெரும் உபகாரத்தை செய்துள்ளான். எப்பொழுதெனில் அவர்களில் ஒரு ரசூலை அனுப்பிய போது." இவ்வாயத்தும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது.

இன்னொரு இடத்திலே கூறுகின்றான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே மக்களுக்கு கூறுங்கள் இறைவனுடைய அருளும் அருட்கொடையும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது அவர்களுக்கு கிடைத்த அந்த ரகுமத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும், அந்த அடிப்படையில் நபிமார்களுடைய பிறப்பு பற்றி எடுத்து சொல்லுவது என்பது இறை வழிமுறையில் நின்றும் உள்ளது என்பது தெளிவாகின்றது. அது மட்டும் இன்றி அல்லாஹுதஆலா குர் ஆனிலே பல இடங்களில் நபிமார்களுடைய பிறப்புகளை பற்றி கூறுகிறான்.

உதாரணமாக: நபி யஹ்யா அலைஹி ஸலாம் அவர்களுடைய பிறப்பையும் அச்சமயம் ஏற்பட்ட அற்புதங்களையும், அவர்களுடைய வாழ்கையில் நடந்த சம்பவங்களையும் அதே போன்று நபி ஈஸா அலைஹி ஸலாம் அவர்களுடைய பிறப்பின் சிறப்பு, வளர்ந்த முறை, நபித்துவம் பெறல் போன்ற அனைத்தையும் அல்லாஹு சிறப்பான முறையில் குறிப்பிடுகின்றான்.  (அல்குர்ஆன், மர்யம் 15,33)

ஆகவே இதே அமலைதான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் இது இறை வழிமுறை, இறை வழிமுறையை ஏற்று நடப்பது தான் நல்லடியார்களின் பண்புகள் அது மட்டுமன்றி நபி ஈஸா அலைஹி வஸல்லம், நபி மூசா அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய பிறப்பை எடுத்து சொல்வதே மிக உன்னதமான செயலாயின் நபிமார்களிலே இறுதியானவரும், மிக உயர்வானவருமாகிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பை எடுத்துக் கூறும் வகையில் மீலாது விழா மிகவும் சிறப்பானதாகும்.


​​

♣ மீலாது விழா கொண்டாடலாம் என்பதற்கான ஆதாரங்கள் ஹதீஸ்களில் இருந்து பின்வருமாறு.

நபிமார்களை நினைவு கூர்வது வணக்கமாகும், ஸாலிஹீன்களை நினைவு கூர்தல் பாவப்பரிகாரமாகும். என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


​​நூல்: அல்ஜாமிவுஸ்ஸகீர் 4331

♦ நபிகள் நாயகமும் ஸஹாபா பெருமக்களும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பின் நிகழ்வுகளை ஒன்று கூடி பேசிக் கொண்டு இருப்பார்கள். அவ்வேளையில் யா ரசூலல்லாஹ்! உங்களைப் பற்றி எங்களுக்கு கூறுங்கள். என சஹாபாக்கள் கூறுவார்கள். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவார்கள்.  


​​இமாம் ஹாகிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கிறார்கள் (நூல் ஹாக்கிம் பாகம் 2 பக்கம் 600, அகீததுஸ்ஸூன்னா பக்கம் 349)

♦ ஸெய்யதுனா இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ, ஆமிர் அல் அன்ஸாரி ரலியல்லாஹு அன்ஹு போன்ற ஸஹாபாக்கள் தமது வீடுகளில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நிகழ்ச்சியைப் (மீலாதுன் நபி) பற்றி தனது குடும்பத்தாருக்கு கூறிக்கொண்டிருப்பார்கள் இதனை கண்ணுற்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் ரஹ்மதுடைய வாசல்களை திறந்து விட்டான் என்று கூறி துஆ செய்வார்கள்.

​ 

நூல்: அகீததுஸ்ஸூன்னா பக்கம் 349

♦ நிச்சயமாக அல்லாஹ் என்னை அகிலத்தாருக்கு ரஹ்மத்தாகவும் (அருட்கொடையாகவும்) நேர்வழி காட்டியாகவும் அனுப்பி இருக்கிறான் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


நூல்கள் முஸ்னத் அஹ்மத் பாகம் 5 பக்கம் 228, மிஷ்காத் 3654

♦ நிச்சயமாக நான் அல்லாஹ்வினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.


நூல்கள்: மிஷ்காத் 5800, தாரமீ 15, பைஹகீ 1446

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் (அவர்களின் பிறந்த தினத்தில்) அவர்களுக்காக சில மிருகங்களை அறுத்து பங்கிட்டார்கள்.


​​நூல்கள்: பைஹகி 43, தபரானி, பத்ஹுல் பாரி

ஹதீஸ் விளக்கம்: நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் பிறந்தபோதே அவர்களுக்காக அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அகீகா கொடுத்துவிட்டார்கள். ஏற்கனவே செய்து முடித்த ஷரியத்துடைய அமல் ஒன்றை திரும்ப செய்ய முடியாது. எனவே, இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும், அத்தினத்தில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இந்த மிருகங்களை அறுத்து உணவு சமைத்து மக்களுக்கு பங்கிட்டுள்ளார்கள்.


​​எனவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது முஸ்தஹப் (விரும்பத்தக்க நற்செயல்) ஆகும் என மாபெரும் ஹதீஸ் கலைவல்லுநர், இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள்.


​​நூல்: ஹுஸ்ன் மக்ஸித் பி அமல் இல் மௌலித் 64-6

♦ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.


​​நூல்கள்: முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045


​​

♣ மீலாதைக் கொண்டாடி மறுமையில் மாண்படைவோம்

அபூலஹ் மரணித்து விட்ட சில தினங்களில் அவர் மோசமான நிலையில் இருப்பதை கனவில் கண்ட அவரின் சகோதரரான அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் உமது மறுமை நிலைமை எப்படி இருக்கிறது என்று வினவினார்கள் அதற்கு அவர் எனது தம்பி மகன் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்து விட்டார்கள் என்று நற்செய்தி சொன்ன எனது அடிமை பெண் ஸூவைபாவை எனது ஆட்காட்டி விரரால் சுட்டிக் காட்டி நீ எனக்கு இந்த நற்செய்தியை சொன்ன சந்தோஷத்தினால் இன்றிலிருந்து உன்னை நான் உரிமை விட்டுவிட்டேன் என்று கூறினேன் அப்படி உரிமை விட்ட காரணத்தினால் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் என்னுடைய அந்த விரலிருந்து மதுரமான பானம் புகட்டப்படுகிறேன் என்று கூறினார்.


​​நூல்: புகாரி 5101

இதைக் கொண்டு இமாம் நாஸிருத்தீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் "உரூதுஸ்ஸாதி" என்ற தமது நூலில் நரகத்திலே நிரந்தரமாக்கப்பட்ட ஒரு காபிருக்கு நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் (மீலாத் பிறப்பைக்) கொண்டு மகிழ்ந்த காரணத்தினால் திங்கட்கிழமை தோறும் வேதனை இலேசாக்கப்படுகிறது இன்று இருக்குமானால் ஆயுள் பூராகவும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைக் கொண்டு மகிழ்ச்சியடைந்து ஈமானுடன் மரணித்த ஒரு முஃமினுக்கு எவ்வளவு பாக்கியம் கிடைக்கும் என்று எழுதுகிறார்.

​ 

நூல்: அகீததுஸ்ஸூன்னா பக்கம் 359

இப்போது மேலே கூறப்பட்ட இவ்வதாாதாரங்களையும் ஒன்று சேர்த்துப் பார்த்தால் நபிமார்களின் வாழ்க்கை வரலாறுகளை எடுத்துக் கூறுவதும் அதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அதை ஞாபகம் பண்ணுவதும் மன தைரியத்தையும், படிப்பினையையும், மறுமையைப் பற்றிய நினைவையும் ஏற்படுத்தக் கூறியதாக இருக்கின்றது என்று மிகத் தெளிவாக விளங்க முடிகிறது. அப்படியானால் நபிமார்கள் யாவரிலும் எல்லா வகையிலும் ஏற்றம் பெற்றவர்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தில் அவர்களின் சிறப்புக்களை எடுத்துக் சொல்வதில்லை என்ன தவறு உள்ளது? ஆகவே இந்த உண்மைகள் விளங்காத சிலர் மீலாத் விழாவை சிலை வணக்கம் போல் சித்தரித்து, அதை செயல்படுத்தும் முஸ்லிம்களை தடுத்து வருவது சகிக்க முடியாத தவறாகும்.

"எங்களை விட அறிஞர்கள் இல்லை" என்ற கர்வ நிலையில் உள்ள தற்கால வழி கெட்ட அறிஞர்களை விட பல்லாயிரம் படித்தரத்தால் அறிவாலும், இறையச்சத்தாலும் மென்மையான நேர்வழி பெற்ற இமாம்கள் அனைவரும் அனுமதித்துள்ள மீலாதுன் நபி விழாவை வழிகேடவர்களின் விசமகருத்திட்காக தவிர்க்க வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இல்லை. மேலே கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாளை ஞாபகம் செய்யும் பொருட்டு மீலாது விழா அன்று பல நற்காரியங்களைச் செய்து அந்த நாளை கௌரவிப்பது எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்.


​​

♣ மீலாது நபி விழாவை பெரு மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதே அல்லாஹ்வின் விருப்பமாகும்.

எப்படி என்றால் 'அல்லாஹ்வுடைய "பள்ல்" எனும் ரஹ்மத்தைக் கொண்டு அவர்கள் (முஹ்மீன்கள்) மகிழ்ச்சி கொண்டாடட்டும்' என நபியே! நீங்கள் கூறுங்கள் அது அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகளை விட மிக சிறந்ததாகும். (அல்குர்ஆன் 10 - 58)

மேற்கூறிய மறை வசனத்தில் கூறப்பட்டுள்ள "பள்ல்" எனும் ரஹ்மத் என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் என பல தப்சீர் கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பிறப்பையும், அதனுள் பொதிந்துள்ள சிறப்புகளையும் எடுத்து கூறுவது குர் ஆன், ஹதீசுக்கு மாற்றமில்லாத சுன்னத்தான நல்ல அமலாகும்.

♦ மேலும் (நிஃமத்களை) அருள் கொடைகளை நினைத்துப் பாருங்கள், மற்றவருக்கு எடுத்துக் கூறுங்கள், ரகுமத்தை எண்ணிப்பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தட்டும் இவைகளை கூறிய இறைவன் அந்த ரஹ்மத்து எது என்று தெளிவாகவே கூறிவிட்டான் (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107) அந்த அடிப்படையில் மீதுலாத் கொண்டாடுவதற்கு அல்லாஹ் அனுமதி தந்திருக்கும்போது அதை தடுக்க நினைப்பவன் ஷைத்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே ஒவ்வொரு இல்லங்களிலும் மெளலிது ஷரிபு ஓதும் ஓசை ஒலிக்கச்செய்வோம், ஒவ்வோர் ஊரிலும்- மஹல்லாக்களிலும் மீலாது நடத்தி உத்தம நபியின் உதய தின விழாவைக் கொன்டாடுவோம் நம் உயிரிலும் மேலான உயிருக்கு உயிரான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்த மீலாதின் அருள் அந்த மாதம் முழுவதிலும் உண்டு என்பதை புரிந்து ரபிஉல் அவ்வல் மாதத்தை முஃமீன்கலாகிய நாங்கள் நன்றி உணர்வோடு கொண்டாடி நற்பேறு பெறுவோமாக!