MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நபிகள் நாயகத்தை ﷺ கனவில் காணலாமா?

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


உயிருக்கு உயிரான உயிரிலும் மேலாக கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இவ்வுலகில் கனவில் நாம் காண முடியுமா?

♣ இது பற்றி வழிகெட்ட வஹாபிகளின் நிலைப்பாடு 

நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இவ்வுலகில் யாரும் கனவில் காணமுடியாது என குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாகவும், அவர்களது சொந்த கருத்துக்களை பாமர மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நாம் காண்கின்றோம்.



​​​​அந்த அடிப்படையில் இது தொடர்பில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை இவ்வுலகில் கனவில் காணலாம் என்ற தலைப்பில் இந்த தொகுப்பினை எழுதுகின்றேன்.



​​♣ கனவு என்றால் என்ன?

இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்” நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.


ஹழ்ரத் ​​அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6983

♦ அல்குர்ஆன் தலைமை விரிவுரையாளர் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பு தோழர் ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் குர்ஆனின் (39:42) ஆவது வசனத்திற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்கள். ‘ஒவ்வொரு மனிதனுக்கும் நஃப்ஸ் (ஆத்மா)-வும், ரூஹ் (உயிர்)-ம் உள்ளன. நஃப்ஸில் உணரும் தன்மையும் அறிவும் உள்ளன. ரூஹில் அசையும் தன்மையும் மூச்சு வாங்கும் தன்மையும் உள்ளன. மனிதன் தூங்கும் போது அல்லாஹ் நஃப்ஸை மட்டுமே கைப்பற்றுகிறான். ரூஹை கைப்பற்றுவதில்லை. ரூஹ் தனது அசையும் தன்மையால் அந்நேரத்தில் சுற்றித் திரிகிறது. அப்பொழுது அந்த ரூஹிற்கு மற்ற ரூஹ்களுடன் நடைபெறும் சம்பாஷனைகள் மற்றும் நிகழ்ச்சிகளே கனவுகளாகும்.

நூல் : குர்துபி

ஆகவே கனவிற்கும் அர்த்தமுண்டு எல்லோருக்குமே சகஜமாக கனவு வரத்தானே செய்கிறது என்று கனவை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. கனவிற்கும் பலவிதமான அர்த்தங்கள் உண்டு. இஸ்லாத்தின் மிக முக்கிய அடையாளமான பாங்கு சொல்லும் முறை ஸஹாபாக்களுக்கு கனவின் மூலம்தான் அறிவிக்கப்பட்டது. இன்னும் பல முக்கிய நபர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கும் கனவு காரணமாக அமைந்துள்ளது.


​​

♣ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணமுடியும்.

♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்“ என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என்னுடைய (“அபுல் காசிம்“ எனும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளாதீர்கள். என்னைக் கனவில் கண்டவர் உண்மையில் என்னைத்தான் கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்க முடியாது. என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும்.


ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி 6197, 6994, 6996, 6997, முஸ்லிம் 4559, 4561,4562

♦ ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ”உறக்கத்தில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். என்ன விஷயம் என்றால், என் உருவில் காட்சியளிக்க ஷைத்தானுக்குத் தகுதியில்லை” என்றும், ”உங்களில் ஒருவர் தீய கனவொன்றைக் கண்டால் உறக்கத்தில் தம்முடன் ஷைத்தான் விளையாடியது குறித்து எவரிடமும் தெரிவிக்க வேண்டாம்” என்றும் கூறினார்கள்.


​​நூல் :முஸ்லிம் 4561

♦ ”கனவில் என்னை காண்கிறவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.” என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.”  


ஹழ்ரத் ​​அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 6993, முஸ்லிம் 4560

♦  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மரணத்திற்குப் பின் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கலீபா அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து"ஒரு விசுவாசியின் சிறந்த நற்செயல் அல்லாஹ்வின் பாதையில் போராடுவதே" என நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்" எனக் கூறினார்கள். அதற்கு அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் "நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனக் கேட்க "நான் மரணிக்கும் வரை அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் பிரிய விரும்புகிறேன்" என பதிலளித்தார்கள். அதற்கு அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களோ "பிலாலே நீங்கள் சென்றுவிட்டால் யார் அதான் சொல்வது? எனவே நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள் " எனக் கூறினார்கள். பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களோ "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பின் நான் யாருக்கும் அதான் சொல்ல மாட்டேன்; நீங்கள் அடிமையாக இருந்த என்னை உங்களுக்காகவே உரிமை விட்டிருந்தால் நான் இங்கேயே தங்கியிருக்கிறேன். இல்லை அல்லாஹ்வுக்காக என்னை நீங்கள் உரிமைவிட்டிருந்தால் என்னை அவனுக்காகவே விட்டுவிடுங்கள்" எனக் கூறினார்கள்.

அதற்கு அபூ பக்கர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் " நான் உங்களை அல்லாஹ்வுக் காகவே உரிமை விட்டேன்" எனக் கூற பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷாம் தேசம் புறப்பட்டு அங்கே அல்லாஹ்வின் பாதையில் போராடினார்கள்.சில வருடங்கள் சென்றதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது கனவில் வந்து "பிலாலே! எம்மீது என்ன கோபம்? எம்மை தரிசிக்க வரமாட்டீரோ" எனக் கேட்டார்கள். கவலையுடன் விழித்தெழுந்த பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மதீனாவுக்கு வந்து நபியவர்களின் கப்ரடிக்குச் சென்று அங்கே அழுது தனது முகத்தினை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ரு ஷரீபின் மீது வைத்து புரட்டி புரட்டி எடுத்தார்கள் (முத்தமிட்டார்கள்) அப்போது அங்கே வந்த ஹஸன் ,ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் இருவரையும் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கட்டியணைத்து முத்தமிட்டார்கள்.


​​அவ்விருவரும் ஸஹர் வேளையில் பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அதான் சொல்லும் படி வேண்டிக் கொண்டார்கள்.உடனே பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பள்ளிவாயிலின் கூரை மீதேறி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என அதான் சொல்ல ஆரம்பித்தார்கள். அப்போது மதீனா நகரமே அதிர்ந்தது. அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹ் என்றதும் இன்னும் அதிர்ந்தது.அஷ்ஹது அன்ன முஹம்மது ரஸூலுல்லாஹ் என்றதும் வீடுகளில் இருந்த பெண்கள் எல்லாம் வெளியே வந்து அழலானார்கள். என்றுமேயில்லாதவாறு அன்று அவர்கள் அழுதார்கள். உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எல்லோரையும் விட அதிகம் அழுதவ்ராக இருந்தார்கள்.

நூல்கள்: தாரகுத்னீ, முவத்தா, பஸ்சார், இப்னு அஸாகிர் (ரஹ்மதுல்லஹி அலைஹி) தாரீகு திமிஸ்க் (பாகம்-7,பக்கம்- 137) என்ற கிரந்தத்தில் அழகிய இஸ்னாத் ஸஹீகானது என்றும் கூறியுள்ளார்கள்)

♦ குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்கள் நிறைந்த 'புர்தா ஷரீப்'என்ற கிதாபில் உள்ள கவிதைகளை இமாம் பூசிரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாடி எழுதினான். அவர்கள் தனது கவிதையில் ஒரு இடத்தில் தடுமாறிய போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர்களுடைய கனவில் தோன்றி அடுத்த அடியை எடுத்துக் கொடுத்தார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தியினை 'புர்தா ஷரீப்' விளக்க நூல்கள் (கிதாப்)பில் பார்க்கலாம் ஆனால் அறிவு சிறிதும் இல்லாத வழிகெட்ட வஹ்ஹாபி முட்டாள்கள் இறை நேசரான இமாம் பூசரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களையும், அவர்கள் இயற்றிய புர்தாவையும் அவமதித்து வரும் வழிகெட்ட வஹாபிகள் நிறைந்து காணப்படுகிறார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வுலகில் கனவில் காட்சியளிப்பார்கள் என்பது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.

♦ குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் ஆண்டகை ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பிறந்தபோது பல்வேறு அற்புதங்கள் நிகழ்ந்தேறின. இவர்கள் பிறந்த தினத்தன்று அவர் தந்தையின் கனவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி, அபூசாலிஹே! உமக்கு அல்லாஹுத் தஆலா அருந்தவப்புதல்வரை அளித்திருக்கிறான். அவர் எனக்கும் அல்லாஹ்வுக்கும் மிகப் பிரியமானவர். வலிகள், குதுபுகள் ஆகியோரிடையே அந்தஸ்து மிக்கவர்' என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.

♦ முக்கிய குறிப்பு:- இது பற்றி ஹாபிழ் ஜலாலுத்தீன் ஸுயூத்தி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தனியொரு நூலையே எழுதியுள்ளார்கள். இப்படி பல நூறு மாபெரும் ஹதீஸ், தப்ஸீர் வரலாற்று அறிஞர்கள் கூறியவைகளையெல்லாம் கைறுல் பஷர், அற்பத்தனமான கூற்றுக்கள் என்று நாகூசாமலும் அற்பளவு ஈமானிய ஈரமில்லாமலும் உளறிக் கொட்டியிருக்கின்றார். இப்படி நபிகள் நாயகத்தின் மீது காழ்ப்புணர்வு கொள்வதற்கு என்ன காரணம்? காபீர் கூட வாய் திறந்து கூறுவதற்கு கூச்சப்படும் விடயங்களை முஸ்லிம் பெயர் தாங்கிகளான இவர்கள் கூச்சமில்லாமல் கூறுவதற்கு பிரதான காரணம் இஸ்லாத்தின் விரோதிகளின் கைக்கூலியாக இவர் ஆனது தான்.


​​நிபாக் தனம் நெஞ்சை நிறைத்துள்ளது. அதனால், நபிகள் நாயகத்தை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படியாவது தரம் தாழ்த்தி நம்மைப் போன்று சாதாரணமாகவர்கள், அவர்களை கனவில் காண முடியாது என்று கூறி சாதித்து காட்டுவதன் மூலம் தனது யஹூதி நஸாறா ஏஜென்டுகளின் மனதை குளிர வைத்து அதிக லாபம் பெறலாமல்லவா? நபிகள் நாயகத்தின் சிறப்பம்சங்களை உயர்த்திக் கூறுவதால் அந்நிய அறிஞர்களும் முஸ்லிம் புத்திஜீவிகளும் நபிகள் நாயகத்தை குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிகோலுமாம். பார்த்தீர்களா? நயவஞ்சகத்தனத்தின் சுய வெளிப்பாட்டை!


இஸ்லாமிய அனைத்து அறிஞர்களும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் சிறப்பை உயர்த்திக் காட்டுவதற்காக மேற்படி விடயங்களை விளக்கிக் கூறும்போது இந்த கைறுல் பஷருக்கும் அவர்களின் வழிவந்தவர்களுக்கும் எதிர்மாறாகத் தோன்றுவது ஏனோ? கல்பு குருடானால் இப்படிப்பட்ட அற்பத்தனமான வார்த்தைகள் கூச்சமில்லாமல் வெளிவரத்தான் செய்யும். வழிகேடர்களின் நச்சுக்கருத்துக்கள் நம்மை வந்தடையாமல் அல்லாஹ் காப்பானாக!


எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்ட எத்தனையோ ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஅத்தாபிஈன்கள், இமாம்கள், வலிமார்கள், ஷூஹதாக்கள், காமிலான ஷெய்குமார்கள், நல்லடியார்கள் உள்ளார்கள், இன்றும் சில நல்லடியார்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்கின்றார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மை என்பதை புரிந்து கொண்டு வழிகெட்ட வஹாபிகளின் நச்சு கருத்துக்களிலிருந்து நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக!