MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நற்பலன் தரும் ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள் 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


♦ ஒருவருக்கு ஒரு நல்ல ஸாலிஹான மனைவி கிடைப்பது அவருக்கு வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக தான் இருக்கும் என்பது ஒரு துளிக் கூட சந்தேகம் இல்லை.


​​கணவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில் மனைவிக்கு என்ன சிரமம் இருக்க போகிறது? அப்படி கட்டுப்பட்டு நடக்காமல் இருக்கும் பெண்கள் அவர்கள் ஆணவம் கொண்ட பெண்களாக தான் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.


​​இப்படியான மனைவிமார்கள் கணவருக்கு வாழ்நாள் முழுதும் நரக வாழ்க்கைதான் இருப்பார்கள் என்று சொல்ல வேண்டும். ஆணவம் உள்ளவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்பது இவர்கள் யோசிக்கவில்லையா? மறுமையின் நிலைகளைப் பற்றி எந்த அச்சமும் இல்லையா?

♣ ஸாலிஹான மனைவியைப் பற்றிய ஹதீஸ்கள் :

♦ உலகம் , நற்பலனை அடைவதற்கான ஒரு சாதனமாயிருக்கிறது. அந்த நற்பலன், நல்ல குணவதியான மனைவியைக் கொண்டு தான் கிடைக்கும். (நூல்: முஸ்லிம் , நசயீ)

♦நல்ல பொக்கிஷம் நற்செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, அண்ணல் நபி [ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்] அவர்கள், ''எல்லாவற்றையும் விட ஒரு நல்ல பொக்கிஷம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு,  ''அதுதான் நல்ல மனைவி அவளுடைய கணவன் அவள் பக்கம் பார்க்கும் பொழுது, அவள் அவனைச் சந்தொஷப்படுத்துகிறாள், அவன் என்ன வேளை சொன்னாலும் உடனே அதனைச் செய்து முடிக்கிறாள், அவன் வெளியில் சென்றிருக்கும் பொழுது, அவள் அவனுடைய வீட்டையும், தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறாள்,'' என்று கூறினார்கள். (நூல் அபூதாவூத்)

நல்ல மனைவியைக் கொண்டுதான் , குடும்பத்தில் சந்தோஷம் நிலவுகிறது,, அடங்காத மனைவியால் குடும்பமே நாசமாகிவிடுகிறது. சில குடும்பத்தில் எப்பொழுதும் சண்டையும் ,சச்சரவுமாக தான் இருக்கிறது. காரணம் சில அடங்காத மனைவிகளின்  பிரச்சனைகள் தான்.

♦ ஒரு பெண்ணை, அவளது நான்கு வகையான காரணங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகிறது.

1. அவளுடைய செல்வம் ,,

2. அவளது குடும்பம் அல்லது தகுதி.

3. அவளுடைய அழகு,  

4. அவளது மார்க்கப் பேணுதல்.


எனவே மார்க்கப் பேணுதலுள்ள  பெண்ணை மணமுடித்துக் கொள்ளவும். [இல்லாவிடில்] உன் கரங்களில் மண்தான்! என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்கள் புகாரீ, முஸ்லிம், நசயீ , அபூதாவூத்)

இன்று சில ஆண்கள் மார்க்கப்  பேணுதல் உள்ள பெண்களைத்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்களா?  நிச்சயமாக இல்லை. அவளின் அழகைப் பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு அவள் அழகாக இருந்தால், திருமணம் ஆன  பிறகு சில காலம் கழித்து . அவனுக்கு அவளை பிடிக்காமல் போய்விட்டது.  


​​அவன் விரும்பியது அவளின் அழகை மட்டும் தான். அழகு போய்விட்டது, அவனுக்கு அவளின் மீது ஆசையும் போய்விட்டது. ஒரு மனைவியிடத்தில்  உடல் சுகத்தை மட்டும் தேடும் சில ஆண்கள் உண்டு . அன்பு , நேசம் , பாசம்  இவைகளைப் பற்றி அவர்களுக்கு  அக்கறை இல்லை . சிந்திக்க வேண்டும்!


​​

♣ ஸாலிஹான மனைவியின் அடையாளங்கள் :

♦ தீனுடய விஷயத்தில் கணவருக்கு உதவி செய்தல்

♦ கணவன் மனைவியை பார்தால் அவர்களுடய குணங்களால் பார்வையால் சந்தோஷப்படுவார்கள்

♦ கணவனுக்கு கட்டுபடுவாள்

♦ தனது மானத்தையும், மரியாதையும் , கணவருடைய பொருள்களையும் பாதுகாப்பாள்

♦ அல்லாஹ்வை புகழ்ந்த வண்ணமாக சமைப்பாள்

♦ வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக்கொள்வாள்

♦ மற்ற பெண்களை பற்றி (நல்லதும், கெட்டதும்) கணவரிடம் சொல்லமாட்டாள்

♦ கணவரை வீட்டின் வாசல் வரை வந்து (பர்தாவுடன், துஆவுடன் வழியனுப்புவாள்)

♦ கணவர் வீட்டிற்கு வருவதற்கு முன் தன்னையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பாள்

♦ உறவினர் வீட்டிற்கும், மற்ற வெளி இடங்களுக்கு செல்லுகையில் பர்தாவை பேணுவாள்

♦ நல்ல விஷயங்களை செய்வதற்கு முன் சதகா கொடுப்பதற்கு கணவருக்கு ஆர்வமூட்டுவாள்

♦ வீட்டில் தொழுகைக்காக ஒரு இடத்தை ஓதுக்கிவைப்பாள்

♦ கணவருடய பார்வையில் தனது மதிப்பை தாழ்த்தி விடமாட்டாள்

♦ குழந்தைகளின் விஷயத்தில் ஒவ்வொன்றையும் கணவரிடம் ஆலோசனை செய்வாள்

♦ கணவருடய தேவையை பூர்த்தி செய்வதில் தாமதிக்கமாட்டாள்

♦ கணவரின் கஷ்டமான நேரத்தில் ஆறுதலாக இருப்பாள்

♦ தன்னுடய தப்பை ஓப்புக்கொள்வாள்.

♦ கணவருடய உறவினர் இடத்தில் நல்ல முறையில் நடந்துகொள்வாள்

♦ அல்லாஹ்வுக்கு மாற்றமான விஷயத்தில் யாருக்கும் கட்டுபடமாட்டாள்

♦ கணவரை கண்ணியமான வார்த்தைகளை கொண்டு அழைப்பாள்

♦ எந்த கஷ்டத்திலும், சிரமத்திலும் அல்லாஹ்வுக்காக பொறுமையாக இருப்பாள்

♦ போதும் என்ற வார்த்தையை அதிகமாக பயன்படுத்துவாள்

♦ ஒவ்வொரு நிலையிலும் கணவருக்கு உதவியாக இருப்பாள்

♦ கணவர் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து நடப்பாள்

♦ எப்போதும் முகம் சுழிக்கமாட்டாள்

♦ கணவர் எந்த பொருளை (மட்டமானதும்) கொடுத்தாலும் அதை மதிப்பாள்

♦ கணவனின் முன்னால் எப்போதும் Fresh ஆக இருப்பாள்

♦ கணவரை தீனுடய விஷயத்தில் ஆர்வமூட்டுவாள்

♦ கணவரிடத்தில் மட்டும் தன்னை அலங்கரித்துகொள்வாள்

♦ கணவருடய குறைகளை பார்க்காமல் நிறைகளை மட்டுமே பேசுவாள்

♦ கணவரின் உத்தரவு இல்லாமல் எங்கும் செல்லமாட்டாள்

♦ கணவரின் வருமானத்திற்கு ஏற்ற படி தனது வாழ்கையை சிக்கனமான முறையில் நடத்தாட்டுவாள்

♦ எபொழுதும் தன்னுடய குணத்தாலும் உடல் மற்றும் உடையில் சுத்தமாக இருப்பாள்

♦ கணவரை விட எவ்வகையிலும் தன்னை சிறப்பாக , உயர்வாக நினைக்கமாட்டாள்

♦ கெட்ட நடத்தை உள்ள பெண்களிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளமாட்டாள்

♦ இல்லம் எப்பொழுதும் சந்தோஷத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பாள்



​​ஆகவே அல்லாஹ்வின் அருள் வேண்டும், பெற்றோர்களின் துஆ வேண்டும் இவை இரண்டும் இல்லாத திருமணமும், மனைவியும் நறுமணம் இல்லாத வாழ்வுதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒரு நல்ல ஸாலிஹான மனைவிக் கிடைக்க அல்லாஹ்விடம் எப்பொழுதும் துஆச் செய்ய வேண்டும்.


​​அதே போல ஒரு பெண்ணுக்கு  ஒரு நல்ல கணவர் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனைச் செய்ய வேண்டும்.  மார்க்கப்பெணுதல் உள்ள மனைவி அமைய வேண்டும். மார்க்க பேணுதல் உள்ள கணவர் அமைய வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ள விஷயத்தில் சரியான முறையில் இருக்கிரோமா என்று சிந்தித்து நாமும் ஸாலிஹானவர்களாக மாறுவதற்கு எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.