MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பெண்களுக்கு கத்னா (விருத்த சேதனம்) செய்ய வேண்டுமா?

​எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான்  (கௌஸி)  கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் ஆண்களுக்கு கத்னா செய்வது போல் பெண்களுக்கு கத்னா (விருத்த சேதனம்) செய்ய வேண்டுமா?

♦இஸ்லாமிய மார்க்கத்தில் சுத்தம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. மனிதனுடைய பாலுறுப்பை சுத்தமாகவைத்திருப்பதற்கும், இல்லற வாழ்க்கையில் மனிதன் இன்பமடைவதற்கும் விருத்தசேதம் எனப்படும் கத்னா செய்வது இன்றியமையாத ஒன்றாக விளங்குகின்றது.

♦ பெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத் என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும். இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை. முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.


​​'எவர் இஸ்லாத்தை தழுவுகிறாரோ அவர் கத்னா செய்து கொள்ளவும். அவர் பெரியவராக இருந்தாலும் சரியே என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

♦ மேலும், உடம்புக்கு பாதிப்பில்லாத முறையில் கவனமாக இலகுவான முறையில் கத்னா செய்யுங்கள். ஏனெனில் கத்னா செய்வது முகத்தை மிகவும் செழிப்படையச் செய்யக் கூடியதாகவும், திருமணத்தின் போது மிகவும் இன்பமளிப்பதாகவும் இருக்கும்' என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

♦ புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும் அறிவிக்கும் ஹதீஸில், ' ஆண் குறியில் கத்னா செய்யப்பட்ட (மொட்டுப் பகுதி) பெண் குறியில் கத்னா செய்யப்பட்ட பகுதியோடு இணைந்து விட்டால் குளிப்பு கடமையாகிவிடும் என்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.


​​அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல் : முஸ்லிம் 579

இதில் 'கிதான்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பித்ரத் - இயற்கை விசயமாகும் என்பதும் இதனை ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. கத்னா என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு கடமையாகும்.'ஐந்து விசயங்கள் பித்ரத் இயற்கையைச் சேர்ந்தது. அவைகளாவன: கத்னா செய்வது, மர்மஸ்தான முடியை நீக்குவது, மேல் மீசையை கத்தரிப்பது, நகம் வெட்டுவது, கக்கத்து (அக்குள்) முடியைப் பிடுங்குவது ஆகிய ஐந்துமாகும்.

♦உம்மு அதிய்யா  (ரலியல்லாஹு அன்ஹா)  அவர்கள் பெண்களுக்கு  கத்னா செய்பவர்களாக இருந்தார்கள் அவர்களுடம் ஒட்ட  நறுக்கிவிடாதே!  மேலோட்டமாக நறுக்குவாயாக என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)  கூறினார்கள்.


நூல்: ​​அபூதாவூத் 4587

♣  பெண்களுக்கு கத்னா செய்வதின் அவசியம்:

கத்னா செய்வது நிச்சயமாக முகத்தை செழிப்புறச் செய்யும். திருமணத்தின் போது இன்பமாக இருக்கும் ''நிச்சயமாக கத்னா செய்வது பெண்களுக்கு சங்கையானதாகும்' என்று ஹதீதுகளில் வந்திருக்கிறது.

ஆணுக்குரிய கத்னாவை பகிரங்கமாகவும், பெண்களுக்குரிய கத்னாவை பகிரங்கப்படுத்தாமல் மறைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பது ஹதீதில் கூறப்பட்டிருக்கும் விசயமாகும்.

அத்துடன் ஆண் பிள்ளைக்கு பால் அருந்தக்கூடிய காலத்தில், பிள்ளை பிறந்து முதல் வாரத்தில் அல்லது அதற்கு பின்னால் செய்ய முடியும். பெண் பிள்ளைகளுக்கு பருவ வயதை அடைவதற்கு முன்பாக கத்னா செய்வது ஏற்றமானதாகும்.

1994 அக்டோபர் மாதத்தில் எகிப்திலிருந்து வெளிவரும் 'அல் அஸ்ஹர்' என்ற பத்திரிகையில் அல் கிதான்' என்ற தலைப்பில் ஓர் ஆராய்ச்சி கட்டுரை அஷ்ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் அவர்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும்  கத்னா செய்வது இஸ்லாமிய இயற்கை விசயத்தில் உள்ளதாகும் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.

எகிப்து தாருல் இப்தாவின் தலைவரான முஹம்மத் ஸெய்யித் தன்தாவி அவர்கள் கத்னா பற்றிய தெளிவான ஷரீஅத் சட்டங்களை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். இதில் மத்ஹப்களின் புகஹாக்களான சட்ட மேதைகளின் கூற்றுக்கள் ஒன்று பட்டதாகவே காணப்படுகின்றன.

♣  கத்னா செய்வது வாஜிபா - கட்டாய கடமையா? அல்லது ஸுன்னத்தா என்பதில்தான் கருத்து வேறுபாடு இமாம்கள் மத்தியில் நிலவுகிறது.

இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் ஆண், பெண் இருபாலரும்  கத்னா செய்வது சுன்னத்தாகும். பர்ளு – கட்டாய கடமையைப் போன்று அது கடமையாகாது என்றாலும் அதை விடுவதனால் அவன் பாவியாகி விடுகிறான் என்கிறார்கள்.

இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கத்னா செய்வது ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறார்கள்.

'ஆண்கள் விசயத்தில்  கத்னா வாஜிபாகும் என்பதாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் கத்னா விசயமாக இமாம் ஹன்பல் அவர்களிடமிருந்து இரு அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான கூற்று பெண்களுக்கும் கத்னா 'வாஜிப்' கடமை என்பதாகும்.

இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்: ‘விருத்தசேதம் செய்வது எமது (ஷாபிஈ) மஃத்ஹபில் ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் வாஜிபாகும், இக்கருத்தையே இமாம் அஹ்மத் (ரஹிமஹுல்லாஹ்) உட்பட முன்னோர்களில் அதிகமானவர்கள் கூறியுள்ளனர். மேலும் இது அனைவர் மீதும் ஸுன்னத் என இமாம் மாலிக், இமாம் அபூ ஹனீபா (ரஹிமஹுமல்லாஹ்) கூறியுள்ளார்கள்.’


 அல் மஜ்மூஃ – பாகம்: 01, பக்கம்: 164


​​

♣ கத்னா செய்வதால் கிடைக்கும் சுகாதார பயன்கள்:

1. பெண்களுக்கு கத்னா செய்வது அலங்காரப்படுத்தும் ஒரு செயலாகும். இயற்கையான அளவை விட மேலதிகமாக காணப்படும் பகுதிகளை மாத்திரமே கத்னாவின் மூலம் நீக்கப்படுகிறது.

2. இந்த கத்னா மேற்கொள்ளும் வேலை எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. எனினும் விஷேட வைத்தியர்களின் அறிவுரையின் பேரில் ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப கத்னா செய்ய வேண்டும்.

3. கத்னா செய்யப்படாமல் மேலதிகமாக இருக்கும் பகுதியினால் சில பெண்களிடம் சுகாதாரத்திற்குப் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கும் உடல் நலத்திற்கு கேட்டை உண்டாக்கும் நோய்கள் உண்டாகுவதற்கும் இடமுண்டு.

4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் கத்னாவின் போது மென்மையாக நடந்து கொள்வீராக என்று சொன்னதன் மூலம் அறிவுப்பூர்வமான கத்னா முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.