MAIL OF ISLAM

Knowledge & Wisdom



பொறுமையின் சிகரம் நபிகள் நாயகம் ﷺ

எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


பொறுமையின் சிகரம் அண்ணல் முஸ்தபா நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் தான்.

♦ நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (அல் குர்ஆன் 2:153)

♦ இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8:46)

♦ ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.(அல்  குர்ஆன் 11:11)

♦ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் நாகரீகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அனஸ் இப்னு மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள் ஒரு கிராமவாசி பள்ளிவாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர்.  அப்போது இறைத்தூதர்(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ”(அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்” என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரக் கூறினார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.


​​நூல்: புகாரி 6025, முஸ்லிம் 480

♦ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நாகரீகம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். தர்மம் கேட்கும் போது கூடக் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களின் இந்நிலைக் கண்டு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்தார்களே தவிர கண்டிக்கவில்லை.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன்.

அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய தோன் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, முஹம்மதே! உங்கடமிருக்கும் இறைவனின் செல்வத்திருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 5809

♦ நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில கட்டளைகளைப் பிறப்பித்து, நபித்தோழர்களை அனுப்பிய போது சிலர் தவறாகப் புரிந்து கொண்டு நடந்தார்கள். அதை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டிக்காமல் விட்டுவிட்டார்கள்.நபிகளாரின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையில் தவறு செய்தவர்கள் அகழ்ப் போரிருந்து திரும்பிய போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கடம், பனூகுறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்கல்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம் என்று கூறினார்கள். வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் அடைந்தனர்.

அப்போது சிலர், பனூகுறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையை தொழ வேண்டாம் என்று கூறினர். மற்ற சிலர், (தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவே, நாம் தொழுவோம் என்று கூறினர். நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம்  இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்கல் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 946

♦ ஒருவர் தர்மம் கேட்கும் போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முள் மரத்தில் தள்ளி விட்டு, அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்கள், ஹுனைன் போரிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர்.

அப்போது (கிராம) மக்கள் நாயகத்தை சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; சமுரா என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சால்வை முள் மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சற்று நின்று, என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்கள் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்கடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காணமாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காணமாட்டீர்கள் என்று கூறினார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் ஜுபைர் பின் முத்இம் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி 2821

♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் யுத்தத்தில் கிடைத்த கனிமத் பொருட்களை நேர்மையாகப் பங்கிடவில்லை என்று சிலர் கடுமையான வாசகத்தை கூறிய போது கோபப்பட்ட நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நபி மூஸா (அலைஹிவஸல்லம்) அவர்களின் சமூகத்தை நினைத்துப் பார்த்து, பொறுமையாக இருந்து கொண்டார்கள்.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும் என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சொல்வேன் என்று கூறிவிட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் சென்றேன்.

அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் தோழர்கடையே இருந்தார்கள். நபி (ஸல்லலாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு மனவருத்தத்தை அத்தது. அவர்களுடைய முகமே மாறி விட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்கடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் (இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக் கொண்டார் என்று சொன் னார்கள்.


​​அறிவிப்பவர்: ஹழ்ரத் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹூ அன்ஹூ)

நூல்: புகாரி 6100

♦ நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், "ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களது முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே?'' என்று கேட்டேன். அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா?'' என்று கேட்டார்கள். (தம் வாழ்நாள் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். "ருகூஉ' செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, "ருகூஉ' செய்வார்கள்.


​​அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)

​நூல்: புகாரி 4837