MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ஸலவாத்தின் நற்பலன்கள்

​எழுதியவர்: அப்துல் ரஹீம் முஹம்மத் ஜௌபர்


​​இன்று நாம் பல்வேறுபட்ட துன்பங்களினாலும் சிக்கல்களினாலும் சூழப்பட்டுள்ளோம். இச்சைகளுக்கு அடிமைப்பட்டு போய்விட்டோம்.


​ பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களலிருந்து தூரமாகிக் கொண்டே உள்ளோம்.  அன்னவர்களை நாம் நெருங்க வேண்டுமானால் அன்னவர்கள் மீது ஏராளமான ஸலவாத்தை அன்போடு ஆசையோடு எண்ணிக்கையின்றி சொல்ல வேண்டும்.

1) ஸலவாத் ஷரீபை ஓதி வருபவர்களுக்கு ஏராளமான நற்கூலிகள் வழங்கப்படுகின்றன.

2) ஸலவாத் ஷரீபை வழமையாக ஓதி வருபவர்களின் இம்மை மறுமை தொடர்பான அத்தனை பொறுப்புக்களையும் அல்லாஹ்عزوجلவே ஏற்றுக் கொள்கிறான்.

3) ஸலவாத் ஷரீபை ஓதிவருவது அடிமைகளை விடுதலை செய்வதைவிட மேன்மையானது.

4) ஸலவாத் ஷரீபை ஓதி வருபவர்களின் அனைத்து அச்சங்களும் அகற்றப்படுன்றன.

5) ஸலவாத் ஷரீபை ஓதி வருபவரின் ஈமான் நன்நம்பிக்கைக்கு பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களே சாட்சியாக இருப்பார்கள்.

6) நாம் எங்கிருந்து ஸலவாத் ஷரீபை ஓதினாலும் அது அன்னவர்களை சென்றடைகிறது.

7) "என் மீது அழகாக (அழகான வார்த்தைகளால்) ஸலவாத் ஷரீபை ஓதுங்கள் அவை உங்களின் பெயர் அடையாளங்களோடு என்னிடம் சமர்ப்பிக்கப்படுகின்றது." என்று பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் கூறி உள்ளார்கள்.

8) அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நற்செய்தி கூறும் முக செழிப்போடு வருகை தந்து கூறினார்கள், "ஜிப்ரீல் (அலை ஹிஸ்ஸலாம்) கூறுகிறார்கள், 'முஹம்மதே (ஸல்லல்லாஹு அஅலைஹிவஸல்லம்) நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாமா, உங்கள் மீது உங்கள் உம்மத்தில் ஒருவர் (அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் என்று) ஒரு ஸலவாத் சொல்வாரேயானால் அல்லாஹ் அவர்மீது 10 முறை ஸலவாத் சொல்லி வாழ்த்துகிறான். உங்கள் மீது உங்கள் உம்மத்தில் ஒருவர் (அல்லாஹும்ம சல்லி அலைஹிவ சல்லிம் என்று) ஒரு சலாம் சொல்லும் போது அவர்மீது அல்லாஹ் 10 ஸலாம் சொல்லி வாழ்த்துகிறான்.'

9) குறுகிய நேரமாகட்டும் அல்லது நீண்ட நேரமாகட்டும் எவ்வளவு நேரம் ஒருவர் ஸலவாத் ஷரீபை ஓதுவாரோ அவ்வளவு நேரம் வானவர்களும் அவர் மீது பிரார்த்தனை புரிந்தவர்களாகவே இருப்பார்கள்.

10) ஒவ்வொரு நாளும் 70,000 வானவர்கள் பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் சங்கையான மண்ணறைக்கு புதிது புதிதாக வருகை தந்து ஸலவாத் ஷரீபை ஓதுகிறார்கள்.