MAIL OF ISLAM

Knowledge & Wisdom





சாம்பிராணி புகை பிடிப்பது கூடுமா? 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


சாம்பிராணி புகை என்பது ஒரு மணமான பொருள் மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மணமான பொருட்களை பாவிப்பது, போடுவது சுன்னத்தான விடயமாகும்.

♦ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் மஸ்ஜிதுன்னபவியில் சாம்பிராணி புகை பிடிப்பதற்காக ஒரு ஸஹாபியை நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நியமித்துள்ளார்கள்.  


​​ஆதாரம்: இப்னு மாஜா

நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அதான் சொல்வதற்காக "முஅத்தின்" என ஒரு ஸஹாபியினை நியமித்தது போல மஸ்ஜிதுன்னபவியில் சாம்பிராணி புகை போடுவதற்காக ("முஜம்மிர்" - சாம்புரானி புகை போடுபவர்) என ஒரு ஸஹாபியினை நியமித்துள்ளார்கள்.


அவர்களின் பெயர் (நுஅயீம் இப்னு அப்தில்லாஹ்) ரலியல்லாஹூ அன்ஹு அவர்களை அந்த காலத்தில் மக்கள் நுஅயீம் இப்னு அப்தில்லாஹ் என்று அவர்களின் பெயரைச் சொல்லி அழைக்க மாட்டார்கள். மாறாக "முஜம்மிர்" சாம்பிராணி புகை போடுபவரே என்று சிறப்பு பெயர் கொண்டு அழைக்கும் அளவிற்கு காணப்பட்டார்கள்.

இன்று வலிமார்கள் அடங்கியுள்ள புனிதமான இடங்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமையன்று சாம்பிராணி போடும் காரணம் அன்றைய தினத்தில் மக்கள் அதிகமானவர்கள் ஒன்று கூடுவார்கள், திக்ர் மஜ்லிஸ் செய்வார்கள். அனைவரும் மணமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான்.


​​எனவே இஸ்லாத்தில் கொடி ஏற்றுவது, சந்தனம் பூசுவது, சாம்பிராணி புகை பிடிப்பது இவைகள் அனைத்தும் மார்க்கத்தில் கூடும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. ஆனால் கூடாது என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது.

உரை: அஸ்சையித் மௌலவி அலவி மௌலானா (முர்ஸி)