MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
தர்ஹாக்களில் சந்தனம் பூசுவது, சந்தனக்கூடு விழா கூடுமா?
எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.
♣ வலிமார்களின் தர்ஹாக்களில் சந்தனம் பாவிப்பது, பூசுவது மார்க்கத்தில் கூடுமா?
சந்தனம் என்பது ஒரு மணமான பொருள் மக்கள் ஒன்று கூடுகின்ற இடத்தில் மனமான பொருட்களை பாவிப்பது, பூசுவது சுன்னத்தான விடயம் எனவே சந்தனம் பூசுவது "கூடும்" என்பதெல்ல மாறாக "சுன்னத்"என்பதுதான் சரியான கருத்தாகும்.
♦ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் இந்த உலகத்தில் எனக்கு பிடித்தது மூன்று விடயங்கள் உள்ளன. அவைகளில் ஒன்று நறுமணம் என்றார்கள்.
ஆதாரம்: நஸாயீ 3939, ஹாகிம் 2/174
எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிடித்த ஒன்றை நாம் செய்வது சுன்னத்தான காரியமாகும். அந்த அடிப்படையில் மக்கள் ஒன்று கூடும் இடத்தில் சந்தனம் பாவிப்பது, மனம் பூசுவது சுன்னத்தான காரியமாகும்.
♣ சந்தனக்கூடு விழா கூடுமா?
சந்தனக்கூடு விழா என்பது ஆங்காங்கே அடங்கி இருக்கும் ஷூஹதாக்கள் / வலிமார்களின் தியாகத்தை நினைவுப்படுத்தும் விதமாக ஆரம்பிக்கப்பட்டும் நல்ல விடயமாகும். சந்தனக்கூடு என்பது அந்த இடத்தில் கந்தூரி விழா வைபவம் நடைபெறுகின்றது என்பதை அடையாளப்படுத்துகின்ற ஒரு அடையாள சின்னமாகும்.
மேலும் அடையாள சின்னங்களுக்காக செலவழிப்பது மார்க்கத்தில் கூடுமான நல்ல காரியமாகும். அது வீண்விரயம் அல்ல. உதாரணமாக நமது வீட்டில் திருமணம் (நிகாஹ்) விழா நடைபெறுகின்றது என்றால் அதற்காக நாம் வீட்டை அலகரிப்பது, திருமண அழைப்பிதல், அலங்கார விடயங்கள் இதுபோன்ற செலவுகளை செய்வது வீண்விரயம் அல்ல. காரணம் நமது வீட்டில் திருமண விழா நடைபெற உள்ளது என்று அடையாளப்படுத்தும் அடையாள சின்னங்களாகும்.
இது போன்று நிறைய விடயங்களை நமது நடைமுறைகளிலிருந்து பார்க்கலாம். அந்த அடிப்படையில் சந்தனக்கூடு விழா எடுப்பது அவ்விடத்தில் கந்தூரி வைபவம் நடைபெறுகின்றது என்று அடையாளப்படுத்தும் காரியம் மார்க்கத்தில் கூடும்.
ஆனால் மற்ற வீண்விரயங்கள் (மேலதாளம், ஆட்டம் பாட்டம், டான்ஸ்) இதுவெல்லாம் கூடாது.
எனவே மார்க்கத்திற்க்கு முரணான செயல்கள் கூடாது அப்படிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சில இடங்களில் சந்தனக்கூடு விழா அனைத்து சமுதாயத்தினரும் சேர்ந்து சமூக நல்லிணக்க விழாவாக நடந்தப்படுகிறது. இதில் ஷரியத்திற்கு மாற்றமான ஹராமான விஷயம் ஏதும் இல்லை. அதனால் கூடும்.