MAIL OF ISLAM

Knowledge & Wisdomஷீஆக்களும் அவர்களின் வழிகெட்ட கொள்கைகளும் 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


♦ அன்புக்குரியவர்களே! உங்கள் ஈமானிய பிரச்சனைப் பற்றி இங்கு பேசுகிறோம். தயது செய்து இக்கட்டுரையை நிதானமாக வாசித்து விட்டு உங்களை உங்களைப் போன்ற ஈமான் உள்ள முஸ்லீம்களை காப்பாற்ற முன்வாருங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!


​​ஆம், காலத்திற்கு காலம் முஸ்லிம் சமுதாயத்திற்க்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுருவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஈரானிய ஷீஆவின் வழிகெட்ட கொள்கைகள் நமது நாடுகளிலும் பரவுகின்ற அபாயத்தைக் காண்கின்றோம்.


​​நம் நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்துகள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்க ரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்பதில் எக்கருத்து வேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரந்தங்கள் ஒன்றே என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் மற்றும் சஹாபாக்கள் சுவனவாதிகள் என்பதிலும் சந்தேகங்கள் இல்லை. ஆனால் ராபிளா என்னும் ஷீஆவை பொறுத்தவரை இக்கோட்பாடுகளை மொத்தமாகவே நிராகரித்து விட்டு ஷீஆ என்ற மதப்பிரிவை உண்டு பன்னினர்.


​​ராபிளா ஷீஆவை ஏற்றுக் கொள்ளாத உலக முஸ்லீம்கள் முஸ்லீம்கள் அல்ல என்றும் கூறுகின்றனர். ஷீஆ பற்றி தெளிவு இல்லாத அப்பாவி மக்களும் படித்தவர்களும் ஊடகவியலாளர்களும் இஸ்லாமிய அகீதா பற்றிய அடிப்படை அறிவு இல்லாத உலமாக்களும் ஈரானுக்கு சுற்றுலா சென்று வருகின்றவர்களும் இந்த அபாயகத்திலிருந்து இப்படியான மக்களை காப்பாற்றும் நோக்குடனே இக்கட்டுரையை எழுதுகின்றேன்.

♦ஷீஆ என்ற பிரிவனர் எங்கே எப்போது எப்படி தோற்றம் பெற்றனர் இவர்களுடைய கொள்கை கோட்பாடுகள் என்ன? உலக முஸ்லிம்களிலிருந்து இவர்கள் வேறுப்பட்டு நிற்பது ஏன்? என்பதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது அவசியம் என்ற அடிப்படையில் இந்த பதிவை தருகிறேன்.

♣ ஷீஆவின் தோற்றம்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் யூதர்கள் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் சிதைப்பதற்காக எடுத்த பல்வேறு முயற்சிகளில் தோல்வி கண்டனர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வபாத்தாகி சுமார் 35 வருடங்களுக்குப்பின் 'சன்ஆ' எனும்பகுதியில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறி முஸ்லிம்களுக்குள் ஊடுருவினான்.

உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களது தலைமையின் கீழ் ஒன்று பட்டிருந்த இஸ்லாமிய சமூகத்தை பிளவு படுத்தி கலவரத்தை உண்டுபண்ணி இரத்தத்தை ஓட்டி பிரித்தாளும் சூழ்ச்சியினை நடைமுறைப்படுத்திய சாபம் இவனைச்சாரும். இறுதியில் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அன்று உருவாக்கிய இரத்தக்களரிதான் இன்றுவரை ஷீஆ சுன்னி முஸ்லிம் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. இவனால் தோற்று விக்கப்பட்ட பிரிவுதான் ஷீஆ எனும் மதப்பிரிவாகும். இவர்கள் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை புரகனித்து அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை நபியாக நம்பி இறைவனின் தூதர் அலி ரஸூலுல்லாஹி என்று கூறுபவர்கள்,ஷீஆக்களின் இப்பிரச்சாரத்திற்கும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எச்சம்பந்தமும் இருக்கவில்லை.


​​

♣ புதிய மார்க்கம் 

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் போதித்த மார்க்கத்தின் அத்திவாரத்தையே பிடுங்கி எறிந்துவிட்டு புதிய மார்க்கத்தை தோற்றுவிப்பது என்ற ஷீஆவின் நோக்கத்தை பின் வருமாறு முன்வைத்தார்கள்.அல்குர்ஆனை(வஹீயை) அலிக்கு கொடுக்குமாறு அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பிவைத்தான். அலியும் முஹம்மத் நபியும் தோற்றத்தில் ஒன்றாக இருந்ததனால் அலிக்கு கொடுக்க வேண்டிய வஹியை முஹம்மதுக்கு ஜிப்ரீல் கொடுத்து விட்டுப்போனார் என்கிறார்கள்.(நூல்: அல்மனீய்யா வல்அமல்.பக்கம்.30) ஷீஆவின் இக்கொள்கை "குராபிய்யா" எனப்படும். அல்லாஹ்வும் ஜிப்ரீலும் அலிக்கு நபித்துவத்தை கொடுக்காது துரோகமிழைத்தது மட்டுமன்றி நபியவர்கள்கூட நடந்த தவறைச் சரிசெய்யாமல் போய்விட்டார்கள் என்று கண்டிக்கிறார்கள்.


​​

♣ புதிய கலிமா 

கலிமா, தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் என்ற ஐந்து தூண்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என்பது முஸ்லிம்களின் அடிப்படை கொள்கை. இவ்வடிப்படையை அப்படியே மாற்றிவிட்டு புதிய கலிமாவை உருவாக்கினர். தொழுகை,நோன்பு, ஸகாத், ஹஜ், விலாயத்து அலி.

(அலியின் தலைமைத் துவம்) இந்த ஐந்தில் விலாயத்து அலியே மிகச்சிறந்தது என போதித்தார்கள். (நூல்: அல்காபி)


​​

♣ சஹாபாக்களை திட்டுவார்கள், மதம் மாரியவர்கள் என்றும் கூட கூறுவார்கள் 

ஷீஆ கொள்கையை நிலைநாட்டு வதற்காக வேண்டி நபித்தோழர்களான சஹாபாக்களை தீயவர்களாக கெட்ட மனிதர்களாக முர்தத்களாக காண்பித்து அதன் மூலம் இஸ்லாத்தின் நம்பகத்தன்மையை மழுங்கடித்து குர்ஆன் ஹதீஸை போலியானதாக மாற்றிவிடவேண்டும். அதன் பின் ஷீஆவுக்கென பிரத்தியேகமான குர்ஆன் ஹதீஸை அலி (ரலியல்லாஹு அன்ஹு) பெயரிலும் ஷீஆவின் பெரியார்களின் பெயரிலும் உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கினார்கள் நபித்தோழர்களில் அலி ஹஸன் ஹுஸைன், மிக்தாத் அம்மார் பின் யாஸிர் ஸல்மானுல் பாரிஸீ சுஹைப் பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுடன் மற்றும் சில நபித்தோழர்கள் போக ஏனைய அனைவர்களும் இஸ்லாத்தை விட்டும் மதம் மாறியவர்கள்; என்று அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். (நூல்:ஹக்குல் யகீன் பக்கம்.519)


​​

♣ நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் மோசமானவர்கள்

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்களான ஆயிஷாவும் ஹப்ஸாவும் மோசமான நடத்தைக் கெட்ட பெண்களாவர். (நூல்:தப்ஸருல்கும்மி பாகம் 2, பக்கம்.377).

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமார்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுடன் இணைந்ததற்காக நபியின் அபம் நரகம் நுழையும் (நூல்:கஷ்புல்அஸ்ரார் பக்கம்24) நஊதுபில்லாஹ்!


​​இந்த வானங்களும் பூமியும் ஏற்றுக் கொள்ளாத அபாண்டத்தை சுமத்தி இந்த உம்மத்தின் தாய்மார்கள் உம்மஹாதுல் முஃமினீன் என கூறப்படும் நபியவர்களின் மனைவிமார்களையும் சஹாபாக்களையும் எதிரிகளாகவும் நரகவாதிகளாகவும் ஆக்கி விட்டார்கள் இந்தப் பாவிகள். சஹாபாக்கள் மீது அபாண்டங்களை சுமத்தி அவநம்பிக்கையினை ஏற்படுத்தினால் தான் இஸ்லாத்தின் அடிப்படைகளை முழுமையாக தகர்த்து விட முடியும் என்ற நோக்கிலேயே பிரச்சாரத்தினை கட்டவிழ்த்து விட்டார்கள். இவர்கள் உண்மையான முஸ்லிமாக இருக்க மாட்டார்கள் . ஒருதுளி ஈமானுள்ளவர் கூட ஷீஆவுடன் தொடர்பு வைக்கமாட்டார்.


​​

♣ புதியதோர் குர்ஆனை கொண்டுவருதல் 

உலக முஸ்லிம்களிடம் காணப்படும் அல்குர்ஆனில் உண்மை இல்லை என்றும் அதில் சஹாபாக்கள் கூட்டல் குறைவுகள் செய்து திரிபுபடுத்தி விட்டனர் என்றும் ஷீஆக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நபித்தோழர்கள் அல்குர்ஆனை ஒன்று திரட்டிய போது அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சியை அறிவுறுத்தி இறங்கி இருந்த அத்தியாயங்களான ‘அல்விலாயா’, ‘அந்நூரைன்’ என்ற இரு அத்தியாயங்களையும் திட்டமிட்டே மறைத்துள்ளனர். மாத்திரமின்றி, ‘அலம் நஷ்ரஹ்’ அத்தியாயத்தில் (وجعلنا عليًّا صهرك) ‘வஜஅல்னா அலிய்யன் லக்க ஸிஹ்ரக்’ ‘அலியை உமது மருமனாக ஆக்கினோம்) என்ற வசனத்தையும், இன்னும் ஏராளமான வசனங்களையும் இருட்டடிப்புச் செய்துள்ளனர் என்றும் கூறுகின்றனர். (ஷீஆ) நம்மிடம் முஸ்ஹஃப் பாதிமா என்ற குர்ஆன் இருக்கின்றது. அது உங்களின் குர்ஆனைவிட மூன்று மடங்குடையது. அதில் உங்கள் குர்ஆனில் உள்ள ஒரு எழுத்து கூட இல்லை என்கிறார்கள்.

அக்குர்ஆன் 17,000 வசனங்களை கொண்டதாக இருப்பதாகவும் அதனை அவர்களுடைய 12வது இமாம் வரும் போது கொண்டு வருவார் என கூறுகிறார்கள். இந்த இமாம் பிறந்து 5ம் வயதில் ஈராக்கிலுள்ள குகையொன்றில் மறைந்து விட்டாராம். அவருடைய வருகையை விரைவுப்படுத்த வேண்டும் என்பதற்காக அஜ்ஜலல்லாஹூ பர்ஜஹூ என்பார்கள். (நூல்: அல்காபி பாகம் 2 பக்கம் 597)


​​

♣ ஹதீஸ்களை நிராகரித்தல்

சஹாபாக்கள் அறிவித்த ஹதீஸ்களையும் இமாம்கள் தொகுத்த ஹதீஸ் நூற்களான சஹீஹூல் புகாரி முஸ்லிம் இப்னுமாஜா திர்மிதி அபூதாவுத் நஸாயீ முஅத்தா முஸ்னத் அஹ்மத் போன்ற கிதாபுகளையும் ஷீஆக்கள் முற்றிலுமாக நிராகரித்துவிட்டு ஷீஆவின் பரம்பரையில வந்த பெரியார்களை இமாம்களாகவும் அவர்கள் சொன்ன செய்திகளையே ஹதீஸ்களாகவும் ஏற்று பின்பற்றுவார்கள்.முஸ்லிம்கள் மதிக்கின்ற அஹ்லுல் பைத்கள் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை மட்டும் எமது ஹதீஸ் நூற்களிலிருந்து எடுத்துக் காட்டி அலி (ரலியல்லாஹு அன்ஹு) பாதிமா (ரலியல்லாஹு அன்ஹா) ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) ஹூசைன் (ரலியல்லாஹு அன்ஹு) ஆகியோரை நாமும் மதிக்கிறோம் ஷீஆவும் சுன்னியும் ஒரே விடயத்தைத்தான் பேசிவருகிறோம் என மழுப்புவார்கள். ஆனால் அந்த ஹதீஸ்களை அறிவித்த இமாம்களை சஹாபாக்களை ரலியல்லாஹூ அன்ஹூ என கூறமாட்டார்கள். தங்களது நூற்களிலும் சஞ்சிகைகளிலும் எழுதமாட்டார்கள்.


​​

♣ 12 இமாம்களை மட்டுமே நம்புதல்

அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பரம்பரையில் வந்ததாக கூறப்படும் ஷீஆவின்12 பேர்களை மட்டுமே இமாம்களாக மதிப்பர். இந்த இமாம்கள் பாவத்தை விட்டும் பரிசுத்த மானவர்கள் தவறுகள் மறதிகளை விட்டும் அப்பாற்பட்டவர்கள். இந்த உலகில் நடந்து முடிந்தவை நடந்து கொண்டிருப்பவை இனி நடக்கப் போகின்றவை பற்றிய அறிவு பெற்றவர்கள். அவர்களது மரணம் எங்கு எப்போது வரும் எந்த இடத்தில் மரணிப்பது என்ற தெரிவும் அவர்களாலே மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். உலகில் நடை பெறுகின்ற எந்தவொரு நிகழ்வும் நடைப்பெற்ற பின்புதான் அல்லாஹ்வுக்கு தெரியவருமே தவிர அது நிகழ்வுதற்கு முன்பு தெரியாது என்றும் (அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனல்ல என்றும்) கூறுகின்றனர். இதனை அல்பதா என அழைக்கிறார்கள். (நூல் :உகூமதுல் இஸ்லாமிய்யா பக்கம்52) ஷீஆக்களின் இமாம்கள் மலக்குகளை விட நபிமார்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்தவர்கள் என்று கூறுவார்கள் சிறுவருவயதில் மரணமடைந்ததாகக் கூறும் ஷீஆக்களின் இமாம் இவர் இன்றுவரை மறைந்து வாழ்கிறார் என்று நம்புகிறார்கள்.


​​

♣ இமாம்களின் மறு பிறப்பு

இந்த உலகத்தில் மரணிக்கின்ற எவரும் திரும்பி வரப்போவதில்லை என்பது இஸ்லாத்தின் கொள்கை. ஆனால் ஷீஆவின் மறைந்து வாழும் 12வது இமாமாக கருதும் முஹம்மத் இப்னு ஹஸன் அல் அஸ்கரி என்பவர் ஹிஜ்ரி 256ல் பிறந்து ஐந்தாம் வயதில் (இராக்கில்) குகையொன்றில் மறைந்து விட்டாராம். இவர் திரும்பிவரும் போது முஸ்ஹப் பாதிமா எனும் குர்ஆனை கொண்டு வந்து நீதியை நிலை நாட்டுவதுடன் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) உமர்(ரலியல்லாஹு அன்ஹு) ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) ஆகியோரை கப்றுகளிலிருந்து எழுப்பி சிலுவையில் அறைவார் என்று கூறுகிறார்கள். (நூல்: இய்காலுமினல் ஹஜ்இதி). இந்த இமாமைத்தான் ‘‘இமாம் மஹ்தி” என ஷீஆக்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் குறிப்பிடும் இமாம் மஹ்தி இவரல்ல அத்துடன் தங்களது 12வது இமாமின் மூலம் சஹாபாக்களின் ஜனாஸாக்களை கப்றுகளிலிருந்து எடுத்து கீறிக்கிழித்து கூறுபோடுவதைப் பார்ப்பதற்கு ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த குள்ளநரிகள்.


​​

♣ முத்ஆ எனும் விபச்சாரம் 

முத்ஆ (விபச்சாரம்) தவறான கொள்கையிலும் தவறான செயற்பாட்டிலும் தங்களது மக்களை தக்க வைத்துக்கொள்ள முத்ஆ எனும் விபச்சாரத்தை அனுமதித்துள்ளார்கள். ஒரு பெண்ணை தற்காலிக திருமணம் எனும் பெயரில் குறிப்பிட்ட காலம் வாடகைக்கு அமர்த்தி இன்பம் அனுபவித்து விட்டு கழற்றிவிடுவதை முத்ஆ எனப்படும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கைபர் யுத்தத்தின் போது அல்லது பத்ஹூ மக்காவின் போது இந்த முத்ஆவை தடைசெய்தார்கள். (நூல்: முஸ்லிம்) ஆனால் வாழ்க்கையில் ஒரு முறையேனும் முத்ஆ (விபச்சாரத்தை) செய்தாக வேண்டும் என ஷீஆக்கள் ஊக்குவிக்கிறார்கள். இதில் சின்ன பெண்பிள்ளைகளையும் இவர்கள் விட்டுவைக்க வில்லை.‘நமது 12வது இமாமின் மறுபிரவேசத்தை நம்பாதவரும், நாம் கடைப்பிடிக்கும் ‘முத்ஆ’ தற்காலிக திருமணத்தையும் நம்பாதவரும் நம்மைச் சார்ந்தவரல்ல’ என ‘அல்ஆமிலி’ என்ற ஷீஆ மத அறிஞர் தனது ‘வஸாயிலுஸ் ஷீஆ, இலா தஹ்ஸீலி மஸாயிஸ் ஷரீஆ’ என்ற நூலில் 438 வது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


​​முத்ஆ செய்தவன் குளிக்கும் போது அவனுடைய உடலிலிருந்து சொட்டுகின்ற ஒவ்வொரு நீர் துளிக்கும் 70மலக்குகள் பாவமன்னிப்புக் கோருவதுடன் முத்ஆ செய்யாதவனுக்கு மறுமைநாள் வரை சபிக்கிறார்கள்; என்கின்றனர். (நூல்: முன்தஹல் ஆமால்:பாகம் 2பக்கம்341). இந்த சாபத்திற்கு பயந்தும் சல்லாபத்திற்கு ஆசை கொண்டும்தான் சிலர் ஷீஆவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ என்று நமக்கு சந்தேகமாக இருக்கிறது.


​​

♣ தனிமனித வழிபாடும் வணக்க வழிபாடும் 

குமைனியுடைய கப்ரை புனித கஃபதுல்லாஹ் போன்று கட்டி புனிதப்படுத்தி வணங்கி பூஜிப்பதும் கர்பலா எனும் பகுதியில் ஹூசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மண்ணை புனிதமாகக் கருதி அந்த மண்ணால் செய்யப்பட்ட உருண்டையின் மீது சுஜூது செய்து தொழுவதும் இவர்களது பிரதான வழிபாடாகும் (இபாதத்தாகும்). மூன்று வக்துகள் மட்டும் தொழுவார்கள். முஸ்லிம்களுடைய தொழுகைகளை விட வித்தியாசமான அமைப்புடையது. ஸலாம் கொடுக்கும் போது 3முறை தொடையில் கைகளால் அடித்து அலி (ரலியல்லாஹு அன்ஹு)க்கு வஹியை கொடுக்காமல் ஜிப்ரீல் மோசடி செய்துவிட்டார் என திட்டி விட்டு ஸலாம் கொடுப்பார்கள்.அதான் (பாங்கு) கூறுகின்ற போது அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் எனக் கூறிய பின் அஷ்ஹது அன்ன அலிய்யன் வலியுல்லாஹ் (அலி ஆட்சிக்கு தகுதியானவர் என சாட்சி சொல்கின்றேன்) என அதிகப்படுத்திக் கூறுதல். நோன்பு துறக்கின்ற போது நட்சத்திரங்கள் வானில் தோன்ற ஆரம்பிக்கின்ற போது யூதர்களைப் போன்று துறத்தல். சுபஹ் தொழுகையில் இரு பெரும் கலீபாக்களைச் சபித்து பிரார்த்னை செய்தல். இதற்கு ‘துஆவு ஸனமை குரைஷ்’ என்ற பெயர்.12வது இமாம் வரும் வரை ஜூம்ஆ கடமை இல்லை எனக் கூறி இன்று வரை ஜூம்ஆ தொழுவதில்லை.


​​

♣ ஷீஆக்களின் பிரிவுகள்

ஷீஆக்களில் ராபிழாக்கள், இமாமிய்யா, இஸ்னை அஷரிய்யா, அலவிய்யா, பாதிமிய்யா, உபைதிய்யா, உபைதிய்யூன், ஸைதிய்யாக்கள் என பல பிரிவுகள் உள்ளன. அன்புக்குரியவர்களே! ஷீஆக்கள் தங்களுடைய ஷீஆ கொள்கையை வெளிக்காட்டாது மறைத்துக்கொண்டுக் முஸ்லிம்களை கண்டால் நாங்களும் உங்களைப் போன்ற முஸ்லிம்தான் என கூறிக்கொண்டு நயவஞ்சகத்தனமாக நடிக்கும் குள்ளநரிகள்.

♦ இன்று இலங்கையில் வாழைச்சேனை, அக்குறனை, பொலன்னறுவ, மன்னார், போல தெஹிவள கொழும்பு போன்ற பகுதிகளில் ஷீஆக்கள் ஊடுருவி அஹ்லுல் பைத்களின் சிறப்புக்கள் எனும் பெயரில் நோட்டீஸ்கள் விநியோகித்து வருகின்றார்கள். பாதிமா (ரழியல்லாஹு அன்ஹா) பெயரில் பெண்கள்தினம் கொண்டாடி வருகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் இவர்கள் அனைவரும் இஸ்லாத்தின் எதிரிகள். இவர்களது பித்தலாட்டங்களில் கவனமாக இருந்து ஈமானிய உணர்வுடன் உசாராக இருங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.