MAIL OF ISLAM

Knowledge & Wisdom



சுன்னத் வல் ஜமாஅத்தின் (அகீதா) கொள்கைகள்

*****************************************************************

எழுதியவர்:  பேராசிரியர் கலாநிதி முஜீப் ரஹ்மான் Phd.


1. நபிமார்கள் அனைவரும் பாவங்களை விட்டும் பரிசுத்த (மஃஸூ) மானவர்கள். வலிமார்கள் பாவங்களிருந்து பாதுகாக்கப்பட்ட (மஹ்ஃபூள்) ஆனவர்கள்.


2. ரஸூல்மார்களின் தலைவரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் ஷஃபாஅத் எனும் பரிந்துரை மற்றும் எல்லா வலிமார்கள் ஸாலிஹீன்களின் ஷஃபாஅத்தும் உண்மையானதாகும். திருக்குர்ஆன் ஷரீஃபும் ரமலானும் கூட ஷஃபாஅத் செய்யக் கூடியவைகளாக இருக்கின்றன.


3. ஸையிதுல் முர்ஸலீன் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மற்றும் எல்லா நபிமார்களும் ஷுஹதாக்களும் தங்களின் (கப்ர்) மண்ணறையில் உயிரோடு இருக்கிறார்கள்.


4. நபிமார்களின் முஃஜிஸாத்துகளும் வலிமார்களின் கராமாத்துகளும் உண்மையானவை.


5. நபிமார்களைக் கொண்டும் வலிமார்களைக் கொண்டும் அவர்களின் வாழ்க்கையிலும் மறைவிற்குப் பின்பும் வஸீலா தேடலாம். ஸாலிஹான அமல்களைக் கொண்டும் வஸீலா தேடுவது ஜாயிஸாக இருக்கிறது.


6. நபிமார்களும் வலிமார்களும் சுயமாக தாங்களே லாபமோ நஷ்டமோ அளிக்க வல்லவர்கள் அல்லர் என்ற நம்பிக்கை இருக்கும் நிலையில் நபிமார்கள் வலிமார்களிடம் உதவி தேடுவதும், யா என்ற சொல்லைச் சேர்த்து அவர்களை கண்ணியமாக நினைவு கூர்வதும் ஜாயிஸாக இருக்கிறது. அவர்கள் தூரத்தில் இருந்தாலும் சமீபத்தில் இருந்தாலும் சரியே.


7. உம்மத்தில் எந்த நபரும் அனுஷ்டானத்தில், ஞானத்தில், அல்லது எந்த ஒரு தனிச் சிறப்பிலும் நபியின் சம அந்தஸ்தைக் கூட அடைய முடியாது.


8. நபிமார்களை கண்ணியப்படுத்தி உயர் மரியாதை செய்வது பர்ளாகும். அஹ்லுல் பைத்துக்களையும், ஸஹாபாக்களையும் மற்றும் வலிமார்களையும் கண்ணியம் செய்வது வாஜிபாகும். ஏனெனில் பொதுவாக முஸ்லிம்களை சங்கை செய்வதே அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட  நற்காரியமாக  இருக்கிறது.


9. ரஸூலை அவமதிப்பது குஃப்ராகும்.


10. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேசிப்பது ஈமானின் பகுதியாகும்.


11. சர்வ சிருஷ்டிகளைக் காண நபிமார்கள் உயர்ந்தவர்கள். நபிமார்களில் உயர்ந்தவர்களாக முஹம்மது ஸல்லலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறார்கள்.


12. தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் நினைவு ஏற்படுவதால் தொழுகை முறிந்து விடாது.


13. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்போன்ற மனிதத் தன்மை உடையவர்களாக இருக்கவில்லை.


14. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் -காத்தமுன்னபி- இறுதி நபியாக இருக்கிறார்கள். அதாவது அவர்களுக்குப்பின் எத்தன்மையைக் கொண்டும் எந்த வகையான புதிய நபியும் வரமாட்டார்கள்.


15. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் (புனித உரோமங்கள் போன்ற) ஆஸாரே முபாரக்குகளை கண்ணியப்படுத்துவது வாஜிபாகும்.


16. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மிஃராஜ் யாத்திரை விழித்த நிலையில் சரீரம் ரூஹ் கொண்டே நிகழ்ந்தது.


17. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்முல் கைப் மறைவானவற்றை அறிந்து கொள்ளும் ஞானம் அருளப்பட்டிருந்தது.


18. ஸஹாபாக்கள் அனைவரும் தீனின் உண்மையான நிலைக்கு உரை கல்லாக இருக்கிறார்கள். மேலும் அவர்கள் உம்மத்தினர் அனைவரிலும் மேலானவர்களாகும்.


19. ஸஹாபாக்கள் அனைவர் மீதும் அன்பு கொள்ளுதலும் அவர்களில் ஒவ்வொருவரையும் நலவுகளைக் கொண்டே நினைவு கூர்வதும் அவர்களின் நிலைகளைக் குறைகாணும் முறையில் ஆட்சேபணைக்கு உள்ளாக்காமல் இருப்பதும் கடமையாகும்.


20. நபிமார்களுக்குப் பின் மனிதர்களில் மேலானவர்கள் ஹள்ரத் அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹு) ஆவார்கள். அவர்களுக்குப் பின் ஹள்ரத் உமர் ஃபாரூக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவர்களுக்குப் பின் ஹள்ரத் உஸ்மான் கனி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவர்களுக்குப்பின் ஹள்ரத் அலி முர்தளா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.


21. ரமளான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் தராவீஹ் தொழுகை 20 ரகஅத்துகள் தொழுவது சுன்னத் முஅக்கதாவாகும்.


22. ஈஸால் தவாப் எனும் நன்மையை பிறருக்கு எத்திவைக்கும் முறை கூடும். அதை நாள் குறிப்பிட்டு செய்தாலும் சரியே.


23. கப்ருகளை ஜியாரத் செய்வது சுன்னத்தாக்கப்பட்டதாகும்.


24. மரணமானவர்கள் (உயிருடனிருப்பவர்களின்) பேச்சுக்களைக் கேட்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பது மார்க்கத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்


25. ஃபிக்ஹு சட்ட இமாம்கள் நால்வரில் ஒருவரை தக்லீது செய்து பின்பற்றி செயல்படுவது வாஜிபாகும்.


26. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின விழாவான மீலாத் விழா கொண்டாடுவது, அவர்களின் மீது ஸலாம் ஓதுவது, அதுசமயம் எழுந்து நிற்பது கூடும்.


27. கப்ருகளின் மீது பூக்களை பரத்துவது கூடும்.


28. உரூஸ் எனும் வருட நினைவு தினத்தில் ஃபாத்திஹா நடத்துவது கூடும்.