MAIL OF ISLAM

Knowledge & Wisdomதப்லீக்  ஜமாஅத்  வழிகேட்டின்  மொத்த  உருவம் 

​எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் 'தப்லீக் ஜமாஅத்' வழிகேட்டின் மொத்த உருவம்.

♣ தப்லீக் ஜமாஅத் என்பவர்கள் யார்?

இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் பரவலாகப் பலராலும் பேசப்படுகின்ற ஒரு இயக்கம் தப்லீக் ஜமாஅத் ஆகும் . நபிமார்கள் செய்த வேலையை வழி காட்டும் ஒரே வழிகாட்டி தப்லீக் ஜமாஅத் என அவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள் மக்களிடத்தில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள் .


​​பலரும் இதன் பெயரினைக் கேட்டு அதன் வெளிவேஷத்தைக் கண்டு மயங்கி அதனை உண்மையான நேர்வழி பெற்ற இயக்கம் எனக் கருதி அதன் பின்னே செல்ல முற்படுகின்றனர். பெரும்பாலும் வழிகெட்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பினர் வெள்ளை நிற ஜுப்பாவும், தலையில் தொப்பியுடனும், நீண்ட தாடியுடனும் கையில் தஸ்பீஹ் மணியும், மிஸ்வாக் குச்சிகள் போன்றவைகளைக் கொண்டு காணப்படுவர். ​​ஆகவே வெளித் தோற்றத்தை கண்டு ஏமாந்து ஈமானை இழந்து வழி தவறிவிட வேண்டாம்.

கோடி வருடங்கள் நாம் இரவு பகலாக அமல் செய்தாலும் நபிமார்களுடைய அந்தஸ்தை அடையலாமா? இது இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கு மாறல்லவா? இந்த வஹ்ஹாபி கொள்கையைப் பரப்பும் தப்லீக் ஜமாஅத் அமீர்சாபுகள் குறிப்பாக அகில இலங்கை தப்லீக் ஜமாஅத் அமீர் அல் ஹாஜ் எம்.டி.எம். ஹனீபா சொல்கிறார்  'தப்லீக் ஜமாஅத் வேலை செய்பவர்களுக்கு நபிமார்களின் அந்தஸ்து உண்டு' (1981 - 2 - 27 தினகரன் பக்கம் 4)

♣  மூன்று நாட்கள், நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று ஜமாஅத் செல்வது சரிதானா?

தங்கள் வழிகெட்ட போதனைகளை மக்களிடத்தில் எத்திவைப்பதற்காக வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்ததும் மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கொண்டு மாதத்தில் மூன்று நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து அவர்களை பசியில் விட்டுவிட்டு இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செல்கின்றோம் என்று 'சுற்றுளா எனும் பயணம் மேற்கொள்வார்கள்' தப்லீக் ஜமாஅத்தில் மூளைச் சலவை செய்யப்படுகிறது, இப்படித்தான் இந்த ஜமாஅத்தில் பங்கேற்கும் இளம் வாலிபர்களை மூளைச் சலவை செய்து அவர்களை குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்துகிறார்கள்.

மூன்று நாள் நாற்பது நாட்கள், அல்லது நான்கு மாதங்கள் என்று ஜமாஅத் வர இயலாதவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள், நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது; தொழில், குடும்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது; எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு வர இயலாது' என்று கூறுவர். ஆனால் தப்லீக் ஜமாஅத் அமீர்சாபுகள் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்றுவிடுகின்றனர்.


​​இவர்களின் இத்தகைய வழிகெட்ட பிரச்சாரத்தால் பலர் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும். தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.


​​தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் இறைவன் மீது பழி போடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டுவிடுவதில்லை.

மேலும் மக்களுக்கு போதனைகளை எத்திவைப்பதற்காக ஒரு குழுவாக பயணிப்பார்கள், தங்களுக்கு கண்களில் ஒரு சிறிய ஊர் அல்லது கிராமம் தென்பட்டவுடன் அங்குள்ள பள்ளிவாசலில் முதலில் தொழுவார்கள் பின்னர் நைசாக அந்த பள்ளிக்கு வரும் தொழுகையாளிகளின் வசிப்பிடங்களை நோட்டமிடுவார்கள். தெருவில் செல்வச்செழிப்பும், வசதியும்படைத்த முஸ்லிம் யார் என்பதை கேள்விப்பட்டு அவரிடம் தங்கள் பிரச்சாரத்தை எத்திவைப்பார்கள். அந்த செல்வந்தனும் தங்களை நாடிவந்த இந்த பிரச்சாரகர்களிடம் தன் செல்வச் செழிப்பை காட்டி தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தெருவில் உள்ளவர்களுக்கு மத்தில் தன் செல்வ பெருமையாக காட்டுவதற்காக இந்த ஜமாஅத்தாரை கவுரவித்து விருந்து கொடுப்பார்! பின்னர் முஸ்லிம்கள் வாழும் தெருக்களை அவர் அடையாளம் காட்டி தன்னுடைய சகாக்களை துணைக்கு அணுப்புவார்.


​​பின்னர் இந்த தப்லீக் ஜமாஅத்தினர் தங்களுக்குள் நான்கு ஜந்து குழுக்களாக பிரிந்து விடுவார்கள். முஸ்லிம்களின் தெருக்களில் உள்ள முஸ்லிம்களின் வீடுகளின் கதவுகளை தைரியமாக தட்டி பெண்களிடம் தப்லீக் ஜமாஅத் வந்துள்ளது உங்கள் வீடுகளில் ஆண்கள் இருந்தால் அணுப்புங்கள் நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்று அழைப்பு விடுப்பார்கள். இப்படி மார்க்கத்தை எத்தி வைக்கின்றோம் என்ற பெயரில் மூன்று நாட்கள் அல்லது நாற்பது நாட்கள் அல்லது நான்கு மாதங்கள் என்று குடும்பத்தை மறந்து ஊர் சுத்தும் அமைப்பே தப்லீக் ஜமாஅத் ஆகும்.

♣ பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பெற்றோர் ஜாக்கிரதை

மார்க்கம் என்ற பெயரில் பல்வேறு இயக்கங்கள் வாலிபர்களை பிடிப்பதற்கு வலை விரித்து வைத்திருக்கின்றனர். இந்த இயக்கங்களில் சரியான இயக்கத்தைப் பெற்றோர்கள் தேர்வு செய்து தங்களது குழந்தைகளை அனுப்ப வேண்டும். படிக்கின்ற பிள்ளைகளை பிடிக்கின்ற இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தும் ஒன்று! இந்த தப்லீக் ஜமாஅத்தினர் பிள்ளைகளை நாற்பது நாட்களுக்கு ஊர் ஊராக அழைத்துச் செல்கின்றனர்.


​​பிள்ளைகள் இந்த தப்லீக் ஜமாஅத்திற்குப் போய் விட்டு வந்தால் மார்க்கப் பற்றுடனும் பயபக்தியுடனும் தலையெடுப்பான் என்று பெற்றோர்கள் அப்பாவித்தனமாக நம்புகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கையாகும். தப்லீக் ஜமாஅத்தில் செல்கின்ற பிள்ளைகள் உண்மையான மார்க்கத்தைத் தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றி நடந்தால் சரி என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் தப்லீக் ஜமாஅத்தினரோ மார்க்கத்தைத் தவறாக விளங்கி வைத்துக் கொண்டு மற்றவர்களையும் தவறான பாதையில் வழிகெடுக்கின்றனர்.


​​

♣ ஏன் தப்லீக் ஜமாஅத்தில் சேரக்கூடாது?

பொதுவாக ஒரு விடயம் கூடும், கூடாது என்பதற்கு அடிப்படை மூலாதரம் குர்ஆன், ஹதீஸ் ஆகும். மனிதர்களின் சொந்த அபிப்ராயம் கிடையாது இறைவன் குர்ஆனில், இன்னும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகளிலும் 'கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எப்படி மதிக்க வேண்டும்' என்று பார்க்கும் போது 'உயிரை விட மேலாக மதிக்க வேண்டும்' ஆனால் தப்லீக் ஜமாஅத் முன்னோடிகள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமரியாதை செய்து, பேசி, எழுதி இருக்கிறார்கள்.


​​இவர்கள் உண்மையான முஃமின்களா? சிந்திக்க வேண்டும். ஆகவே தப்லீக் ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்ட நோக்கமே, அதனை ஆரம்பித்த அனைவருமே பாமர அப்பாவி மக்களை வழிகெடுக்க வந்தவர்கள். தப்லீக் ஜமாஅத்தில் இன்றுள்ள அனைத்து மக்களும் வழிகேடர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. வழிகேட்டின் மொத்த உருவம் தப்லீக் ஜமாஅத் என்று விளக்கம் தெரியாத நமது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையினைச் சார்ந்த சிலரும் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர வழிகெடுக்க உருவெடுத்து வந்த தப்லீக் வஜமாஅத அனைத்து முன்னோடிகள், மௌலவிமார்கள், அமீர்சாபுகள், லீடர்கள் தான் வழிகேடர்கள்,வழிகெடுக்க வந்தவர்கள்.


​​

♣ தப்லீக் ஜமாஅத் என்பது வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பின் ஒரு பிரிவாகும்

வஹ்ஹாபிகள் என்று வரும்போது இவர்கள் எல்லோரும் வழிகெட்ட கூட்டத்தினர் என்று நாம் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் தப்லீக் ஜமாஅத் பற்றி பொதுமக்கள் புரியாமல் இருக்கிறார்கள். தப்லீக் ஜமாஅத் அவர்களும் கூட வஹ்ஹாபிகளின் சாயல்தான், அவர்களின் ஒரு பிரிவுதான், வஹ்ஹாபிகளின் கொள்கை இவர்களிடமும் இருக்கின்றது. இதனை பொதுமக்கள் புரியாமல் இருக்கிறார்கள்.


​​தப்லீக் ஜமாஅத் மற்றும் வஹ்ஹாபிகளுக்கு மத்தியில் உள்ள வேறுபாடு 'தப்லீக் ஜமாஅத்தினர் மத்ஹபை, இமாம்களை ஏற்றுக்கொள்வோம் என கூறுவார்கள். ஆனால் வஹ்ஹாபிகள் மத்ஹபை, இமாம்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறுவார்கள்' இதுதான் வெளிப்படையான வேறுபாடு வித்தியாசம். ஆனால் ஹகீகத் உண்மை எதார்தத்தை பார்த்தால் தப்லீக் ஜமாஅத் அமைப்பினர்களும் பேரளவில்தான் இமாம்களை, மத்ஹபுகளை பின்பற்றுகின்றோம் என்று கூறுகிறார்கள் ஆனால் வஹ்ஹாபிகளிடம் இருக்கும் வழிகெட்ட அனைத்து கொள்கைகளும் தப்லீக் ஜமாஅத் அமைப்பினர்களிடமும் இருக்கின்றது. இதுதான் உண்மை.


​​தப்லீக் ஜமாஅத் ஒரு வழிகெட்ட வஹ்ஹாபி அமைப்பு என்று புரியாமல் தொழுகைக்குதானே அழைக்கின்றார்கள், நல்ல விடயம்தானே செய்கிறார்கள் என்று விபரம் இல்லாமல் அது வஹ்ஹாபி அமைப்பு என்று புரியாமல் சில அப்பாவி மக்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் தப்லீக் ஜமாஅத் அமீர்சாபுகள், லீடர்கள். மௌலவிமார்கள் மௌலித்,கந்தூரி,வஸீலா மறைவான ஞானம், மீலாது நபி இதுவெல்லாம் இஸ்லாத்தில் கிடையாது ஷிர்க் - பித்அத் என்று கூறியுள்ளார்கள். இது தெரியாமல் அதில் சிக்கியுள்ள அப்பாவி அத்தனை பாமர மக்களையும் நாம் விடுவிக்க வேண்டும்.


​​

♣ தப்லீக் ஜமாஅத்தார் அப்படி என்னத்தான் போதிக்கிறார்கள்?

முஹம்மது இலியாஸ் என்பவரால் 1926 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள மீவாட் என்னும் நகரில் தப்லிக் என்ற அமைப்பு அமைக்கப்பட்டது. பாமர அப்பாவி மக்களை, வாலிபர்களை (பணம் , ஊர் சுத்துதல், சாப்பாடு) இதுபோன்ற ஆசைகளை தூண்டி வரவழைத்து வெளியூர் செல்வார்கள் தெருவின் முச்சந்தியில் நின்று அவரிடம் தொழுகை பற்றி விரிவான போதனை நடைபெறும். ஆனால் இந்த தொழுகை பற்றிய போதனையில் இவர்கள் குர்ஆன் ஹதீஸ்களை ஆரம்பத்தில் சுருக்கமாக பயன்படுத்துவார்கள்.


​​பின்னர் குர்ஆன் ஹதீஸ்களை ஓரங்கட்டிவிட்டு தங்களுடைய அமல்களின் சிறப்பு என்ற பெயரில் வழிகெட்ட பித்தலாட்டங்கள் நிறைந்த புத்தகத்தின் வசனங்களை அள்ளி வீசுவார்கள் இதனால் அந்த போதனைகளை கேட்கும் முஸ்லிம் சகோதரன் பயந்துவிடுவான் அந்த அளவுக்கு கப்ருவேதனை பற்றிய மிரட்டல்கள் காணப்படும்.


​​

♣ தப்லீக் ஜமாஅத்தின் உண்மையான நிலை என்ன?

உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன? மக்களை நேர்வழி படுத்த வந்தார்களா? இல்லை மக்களை வழிகேடுக்க வந்தார்களா ? என்றால் நமக்கு அதிர்ச்சியான விஷயம் தான் காத்துருக்கிறது. முதல் முதலில் இந்தியாவில் வஹ்ஹாபி கொள்கையை பரப்புவதற்க்கு உருவாக்கப்பட்ட இயக்கமே தப்லீக் ஜமாஅத் தான்.


​​ஏனென்றால்? இவ்வியக்கத்தை உருவாக்கிய தலைவர் இல்யாஸ், அவரது ஆசிரியர்கள், பேசிய பேச்சுகளும், எழுதிய எழுத்துகளும், இவ்வியக்கத்தின் அசல் நோக்கம், வஹ்ஹாபிசத்தை பரப்புவது தான் என்பதை தெளிவுபடுத்துகிறது . தப்லீக் ஜமாஅத் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவதற்காக தப்லீக் ஜமாஅத் குறித்து மறுக்க இயலாத உண்மைகளை அந்த இயக்கத்தை உருவாக்கிய தலைவர்களின் நூல்களில் இருந்தே எடுத்து காட்டி மக்களுக்கு அது ஒரு மோசமான இயக்கம் தான். அதனைவிட்டு விளகி நடப்பது நம்மின்மீது கடமையாகும்.


​​தப்லீக் ஜமாஅத் சுன்னத் ஜமாஅத் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் அன்புக்குரியவர்களே! தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாஸ் இவருடைய ஞான ஆசிரியரான ரஷீத் அஹ்மத் கொங்கோஹி ரஷீதின் மறைவுக்குப் பின் கலீல் அஹமத் அம்பேத்டி, அஷ்ரப் அலி தானவி, முஹம்மது காஸிம் நானோத்வி ஆகியோர் ஞான ஆசிரியர்களாய் பெற்றார். இவர்கள் எல்லோரும் எனது ஊரிலும் உடலிலும் குடி கொண்டவர்கள் என்றும் நாங்கள் எல்லோரும் சரியென்று நல்லது என்றும் கண்ட கொள்கை முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை என்றும் கூறுகின்றார்.

பஹிஷ்தி ஜேவர், தப்சீர் பயானுல் குரான் போன்ற பல நூற்களின் ஆசிரியர் மௌலவி அஷ்ரப் அலி தானவி. இவரின் கொள்கைகள் தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி இல்யாசை பெரிதும் கவர்ந்தன. மௌலவி இல்யாஸ் தப்லீக் ஜமாத்தினரால் ஹழ்ரத்ஜி என்று அழைக்கப்பட்டார் (மறைவு 1944). இவர்தான் தப்லீக் ஜமாத்தின் ஸ்தாபஹரும் முதல் அமீரும் ஆவார். இவர் கலீல் அஹ்மத் ஸஹரான்பூரியின் கலீபா ஆவார். அவர் ரஷீத் அஹமத் கங்கோஹியின் கலீபா ஆவார்.

(இர்ஷாதுல் முலூக் , ஆங்கில மொழிபெயர்ப்பு ,பக்கம் 12) மேலும் மௌலவி இல்யாஸின் மறைவைத் தொடர்ந்து தப்லீக் ஜமாத்தின் அடுத்த அமீராக அவரது மகன் மௌலவி முஹமது யூசுப் (மறைவு 1965) ஆனார். அவரைத் தொடர்ந்து இனாமுல் ஹசன் அடுத்த அமீரானார். தற்சமயம் தப்லீக் ஜமாத்திற்கு அமீர் யாரும் இல்லை , அதன் நடவடிக்கைகள் ஒரு ஷூரா (குழுவைக்) கொண்டு இயங்குகிறது.

இந்தியாவில் முதலில் வஹ்ஹாபி கொள்கையை பரப்பியது யார்? பதிமூன்றாவது நூற்றண்டில் மிக பிறப்பலம் பெற்ற டில்லி மாநகரில் கல்வியில் பேரும் புகழும் வாய்ந்த அஜிஸிய்யாக் குடுப்பத்தில் (ஷெய்க் ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திது திஹ்லவிய்யி அவர்களின் குடும்பத்தில் ) முஹம்மது இஸ்மாயீல் என்றொருவர் பிறந்தார் இவர் அதிக புத்திக் கூர்மையானவர் சில சமயம் புத்திக்கூர்மை ஈமானையும் , மார்க்கத்தையும் நாசப்படுத்தும் என்பதை நாம் விளங்க முடிகிறது.


​​உலத்தில் உள்ள வழிகேடர்கள் எல்லாம் பெறும்பாலும் புத்தி சாலியாக தான் இருப்பார்கள். என்று இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள். "மா தல்ல மன் தல்ல இல்லா பி இஹ்திமாமில் அகல் '' வழிகேட்டவர்களை எல்லாம் பாருங்கள் பெறும்பாலும் அறிவுடையவர்களாக இருப்பார்கள்.

உதாரணம் : காதியானி ஒரு நல்ல திரமைசாலி  ஆனால் கடைசியாக நான் தான் நபி என்று வாதிட்டன் காரணம் அவனுடைய அறிவுதிறன் தான், மௌலவி இஸ்மாயீல் என்பவர் ஹஜ்ஜூக்கு செல்ல நினைத்தார் .அப்போது ஹிஜாஸிக்கு போனார்கள், மொளலவி இஸ்மாயீலுக்கு அங்குதான் வஹ்ஹாபிகளுடைய பிறபல்யமான 'கிதாபு தவ்ஹீத்' என்ற நூல் கிடைத்தது. மௌலவி இஸ்மாயீல் தான் 'கிதாபு தவ்ஹீத் ' என்னும் நூலை 'தக்வியத்துல் ஈமான்' என்னும் பெயரில் ஃபார்சியிலும் அதன் மொழிபெயர்ப்பை உருதுவிலும் எழுதி இந்தியாவில் வஹ்ஹாபிஸ விஷத்தை தூவினார்.


​​மேலும் மௌலவி இஸ்மாயீல், அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றி மக்கா முஷ்ரிக்கீன்கள் விஷயத்தில் இறங்கிய ஆயத்துகளை எல்லாம் முஸ்லிம்கள் பேயரில் சுமத்தி ஷிர்க்கைப் போட்டு எல்லா முஸ்லிம்களையும் முஷ்ரிக்குகள் என்று முடிவு செய்தார். நபிமார்கள் , இறைநேசர்கள், சன்மார்கப் பெரியோர்கள், எல்லோரையும் பற்றி கடுமையாக, கேவலமாக பேசினார். கடைசியாக செருப்புக்கேற்ற ஜோடிச் செருப்பு வாய்ந்தது என்பதற்கொப்ப முந்தின வஹ்ஹாபியான அப்துல் வஹ்ஹாப் நஜ்தி உடைய கிதாபு தவ்ஹிதில் எவவெற்றை எல்லாம் எழுதியிருந்தாரோ அவையனைத்தையும் - இல்லை இல்லை அதற்கு மேலும் இந்த மௌலவி இஸ்மாயீல் தன்னுடைய தக்வியத்துல் ஈமானில் எழுதிவிட்டார்.

மேலும் வஹ்ஹாபிக் கொள்கையைப் பரப்புவதில் மௌலவி இஸ்மாயீல் போக்கு முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கையாண்ட வழியாகவே இருந்தது. முஸ்லிம்களில் சிலர் மௌலவி இஸ்மாயீலால ஏமாற்றமடைந்தார்கள். சுன்னத் ஜமாஅத்து உலமாக்கள் மௌலவி இஸ்மாயீலின் கொள்கைகளை வெளிப்படுத்தி கொள்கையில் இவரும் வஹஹாபிகளேதான் என்பதை முஸ்லிம் மக்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டினார்கள். உண்மையை உணர்ந்த முஸ்லிம்கள் இவர்களை விட்டு வெரண்டோடினார்கள்.


​​முடிவாக வஹ்ஹாபிக் கொள்கையினை உண்மை முஸ்லிம்களால் ஒப்புக்கொள்ளப்படாமல் போய்விட்டது . இவ்வாறாக ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டாகியும் இந்தியாவில் வஹ்ஹாபிய்யாக்களுடைய முயற்சிக்ளெல்லாம் பலனற்றுப் போய்விட்டது. இதைபார்த்த வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்கள் எப்படி நாம் மக்களுக்கு மத்தியில் நம்முடைய கொள்கையை பரப்புவது, எந்த வேடத்தில் போனால் நம்முடைய கொள்கையை பறப்பமுடியும், என்று சிந்திக்க ஆரம்பித்தார்கள். வஹ்ஹாபிய்யாக் கூட்டத்தார்களில் மௌலவி இல்யாஸ் என்ற பெயருடையவர் ஒரு கூட்டத்தை உற்பத்தி செய்து அந்த கூட்டத்திற்க்கு 'தப்லீக் ஜமாஅத்' என்று பெயர் சூட்டினார்.


​​வஹ்ஹாபி உலமாக்களையும், பிரசங்கிகளையும், ஒன்று கூட்டினார். வஹ்ஹாபிக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதற்கு தடங்கல் ஏற்படாதவாறு, பொது ஜனங்கள் இக்கொள்கைகளைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளக்கூடியவாறும் சில திட்டங்களை ஏற்படுத்தினார். ஆகவே தப்லீக் ஜமாஅத் மற்றும் போலி தவ்ஹீத் ஜமாஅத் (வஹ்ஹாபி) இரண்டும் பேரில் வித்தியாசமாக இருந்தாலும் இஸ்லாம் மார்க்கத்திற்கு முறனான, எதிரான வழிகெட்ட கொள்கையாகும்.

♣ தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் முன்னோடிகள் :

இஸ்மாயில் திஹ்லவி ( மறைவு 1246 ஹிஜ்ரி - 1830 )

காசிம் நானுத்வி (மறைவு 1297 ஹிஜ்ரி - 1879)

ரஷீத் அஹ்மத் கங்கோஹி ( மறைவு 1323 ஹிஜ்ரி - 1905 )

கலீல் அஹமத் அம்பேத்வி ( மறைவு 1852 ஹிஜ்ரி - 1927 )

அஷ்ரப் அலி தானவி ( மறைவு 1392 ஹிஜ்ரி - 1943 )


​​

♣ தேவ்பந்த் தப்லீக் ஜமாத்தின் வழிகெட்ட ஆசிரியர்கள் & நூல்கள் :

ஹிப்ளுள் ஈமான், ஈளாஹூல் ஹக்

அஷ்ரப் அலி தான்வி

பதாவா ரஷீதியா, பதாவா இம்தியா

ரஷீத் அஹ்மத் கங்கோஹி

ஆபே ஹயாத்

முஹம்மத் காஸிம் நானோத்வி

தக்தீரூன் னாஸ்

முஹம்மத் காஸிம் நானோத்வி

பராஹீனே காதியாஹ்

கலீல் அஹமத் அம்பேத்வி

தக்வியத்துல் ஈமான்

ஷாஹ் இஸ்மாயில் தெஹல்வி

ஸிராதே முஸ்தகீம், தக்வியத்துல் ஈமான், ஏக்ரோஜி

ஷாஹ் இஸ்மாயில் தெஹல்வி

தப்சீர் புல்காதுள் ஹைரான்

ஹுசைன் அலி வண் பச்ரனி

தஸ்பி யாதுள் அகாயித்

முஹம்மத் காஸிம் நானோத்வி

ரிஸாலா அல் இம்தாத்

அஷ்ரப் அலி தானவி

தீனிதாவது, மக்தூபாத்

மௌலவி இல்யாஸ்


​​

♣ தப்லிக் ஜமாஅத்தை ஏன் வழிகேடு என்கிறோம் :(தப்லீக் ஜமாத்தின் வஹ்ஹாபிக் கொள்கைகள்)

இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை ஒழுங்காக பேணி நடந்தால் எந்த ஒரு அமைப்பையும் நாம் தரக்குறைவாக பேசக்கூடாது ஆனால் இந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பு அந்த சட்டதிட்டங்களை மீறி நடப்பதால்தான் அதை நாம் வழிகேடு என்று விமர்சிக்கிறோம். அதற்கான ஆதாரங்கள் இதோ! அழகிய அழைப்பு என்று தப்லீக் ஜமாஅத்தை விரும்பக்கூடிய சகோதர சகோதரிகளே! இனிமேலாவது தப்லீக் ஜமாஅத், தப்லீக் அமீர், தப்லீக் லீடர் ஆகியோரை அணுகாதீர்கள்.


​​துஷ்டனை கண்டால் விலகுவது போன்று இவர்களிடமிருந்து சற்று விலகி நின்று உங்களையும், உங்கள் குழந்தைகளையும், இளம் வாலிபர்களையும் மீட்டெடுங்கள். குர்ஆனுக்கு எதிராக அமல்களின் சிறப்பு என்ற வழிகேடு நிறைந்த புத்தகத்தை இந்த மடையர்கள் தொகுத்து உள்ளதால் அது உங்களிடமிருந்தால் உடனே அகற்றி விடுங்கள். இவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக செயல்படும் வழிகெட்ட வஹ்ஹாபி கூட்டம் என்பதை உணருங்கள்.

1) அல்லாஹுதஆலா பொய் சொல்லுவது சாத்தியம்.(நூல் : ஃபதாவா ரஷீதியா, வால்யூம் 1,பக்கம் 19,தக்வியத்துல் ஈமான் பக்கம் 31,எக்ரோஜி பக்கம் 144)

2) அல்லாஹுதஆலா தனது படைப்புகள் செய்யும் செயலை முன்னறே அறிந்திருக்க மாட்டான்.படைப்புகள் ஒரு செயலை செய்த பின்னரே அல்லாஹ் அதை அறிகின்றான். (நூல் : தஃப்சீர் புல்காதுல் ஹைரான் பக்கம் 157,158)

3) ஷைத்தானும், மலக்குல் மவ்த்தும் நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

அவர்களை விட நிறைய அறிந்துள்ளார்கள். (நூல் : பராஹீனே காதியா பக்கம் 51,52)

4) நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தனது இறுதி முடிவு என்னவென்று தெரியாது மேலும் அவர்களுக்கு சுவற்றுக்கு பின்னால் இருப்பது கூட தெரியாது. (நூல் : பராஹீனே காதியா பக்கம் 51)

5) அல்லாஹுதஆலாவால் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவும், மறைவான ஞானமும் விலங்குகளுக்கும்,மதழைகளுக்கும்,பைத்தியக்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

​(நூல்: ஹிஃப்ஸுல் ஈமான் பக்கம் 7)

6) தொழுகையில் அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிந்தனை வருவது எருமை அல்லது கழுதையின் சிந்தனையில் மூழ்குவதை விட மோசமானது.(நூல் : ஸிராத்தே முஸ்தகீம் பக்கம் 97)

7) ரஹ்மத்துல் ஆலமீன் என்பது நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட தனித்துவமான பண்பு அல்ல, பிற நல்லடியார்களையும் ரஹ்மத்துல் ஆலமீன் என்று அழைக்கலாம்.

​(நூல்: ஃபதாவா ரஷீதியா,வால்யூம் 2,பக்கம் 12)

8) மார்க்கம் அறியாத பாமர மக்களுக்கு “காத்தமுன் நபீயீன்” என்பது இறுதி நபி என்று அர்த்தம் கொள்வர். எனினும் விஷயம் அறிந்தவர்களுக்கு இது சரியான விளக்கமன்று. அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் ஒரு நபி பிறந்தாலும் அது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் இறுதியானவர்கள் என்பதில் எந்த விளைவையும் உண்டாக்காது .(நூல் : தக்தீருன் நாஸ் பக்கம் 3,25)

9) அண்ணலம் பெருமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உர்து மொழியை தாருல் உலூம் தேவ்பந்தின் உலமாக்களிடம் இருந்து கற்றார்கள்.(நூல் : பராஹீனே காதியா,பக்கம் 26)

10) நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரரைப் போன்று தான் கண்ணியமளிக்கப்பட வேண்டும் .(நூல் : தக்வியத்துல் ஈமான் , பக்கம் 58)

11) அல்லாஹ் நாடினால் நபிகள் நாயகம் ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று கோடான கோடி பேர்களை உருவாக்குவான். (நூல் : தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 16)

12)  பெருமானார் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மறைந்த பிறகு மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள்.

​(நூல்: தக்வியத்துல் ஈமான் ,பக்கம் 59)

13)  அனைத்து அன்பியாக்களும்,இறைத்தூதர்களும் பயனற்றவர்கள். (நூல் : தக்வியத்துல் ஈமான், பக்கம் 29)

14)  கலிமாவையும் தொழுகையையும் சரியாக செய்யவும் சொல்லவும் வைப்பது இந்த இயக்கத்தின் கருதல்ல

(மக்தூபாத் பக்கம் 122,தீனிதாவது பக்கம் 205)

15)  மௌலவி இல்யாஸ் கூறுகிறார் எனது நோக்கம் புதிய ஒரு கூட்டத்தை உண்டாக்குவதுதான்.

​(நூல் : தீனிதாவது பக்கம் 205)

16)  வானம் பூமியிலுள்ள ஒருவரும் யாருக்கும் ஷபாஅத் செய்யமாட்டார்கள்.

​(நூல்: தக்வியத்துல் ஈமான் பக்கம் 5 மேலும் பார்க்க தக்வியத்துல் ஈமான் பக்கம் 24)

17)  கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரியக்கூடிய மறைவான சக்திகளைப் பற்றிய அறிவு (சாதாரன மனிதர்களான) ஸெய்துக்கும் அம்ருக்கும் சிறு பிள்ளைகளுக்கும் பைத்தியக்காரர்களுக்கும் தான் ஏன்? எல்லா ஜீவராசிகளுக்கும் மிருகங்களுக்கும் கூடத்தான் தெரியும். (நூல் : ஹிப்ளுள் ஈமான் பக்கம் 06)

18)  நபியுல்லாஹ் அவர்கள் மறைவான சக்திகளை அணிவார்கள் என்று நம்புவானேயானால் அவன் நிச்சயமாக காபிரும், முஸ்ரிகுமாவான் (நூல் : பதாவா ரஷீதியா பக்கம் 37)

19)  மௌலித் மஜ்லிஸ் நடத்துவது எந்தவகையிலும் ஆகாத கருத்தாகும்.

​(நூல் : பதாவா ரஷீதியா பக்கம் 136,மேலும் பார்க்க பதாவா ரஷீதியா பக்கம் 105,147)

20)  ரபிஉல் அவ்வல் மௌலித் ஓதுதல் அதில் பெருமானாருடைய பிறந்த செய்தி வரும் போது எழுந்து நிற்பவன் முஸ்லிம் அல்ல.

​(நூல் தக்வியத்துல் ஈமான் பக்கம் 56)

21)  முஹம்மத் இப்னு அப்துல் வஹாபைப் பின்பற்றுவோரை ”வஹாபிகள்” என்று கூறப்படுகின்றது. அவரின் அகீதா மிக நல்லதாகும்”

(நூல் : பதாவா றஷீதிய்யா, பாகம் 01 பக்கம் 111)


​​

♦ இப்பொழுது கூறுங்கள். தப்லீக் ஜமாஅத்தும் வஹாபிகளும் ஒன்றா? வேறா? வஹாபிசத்தைப் பரப்பும் நோக்கில் தோன்றிய இயக்கம்தான் தப்லீக் ஜமாஅத்தாகும். தொழுகை என்ற போர்வையில் வந்தால்தான் பள்ளிவாசலில் தங்க முடியும்.மக்களைச் சந்திக்க முடியும் என்பதற்காகவே தொழுகையை எடுத்தார்கள். மக்கள் தங்களைச் சந்தேகப் படாமலிருக்கவே தொழுகை என்ற வேஷத்தை அணிந்து கொண்டுள்ளனர்.


​​மேலும் நாம் கண்ட விளக்கங்களின் அடிப்படையில் தப்லீக் என்ற இயக்கம், ஏகத்துவக் கொள்கையிலிருந்து நம்மை விலகச் செய்து, குர்ஆன் ஹதீஸ் என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் தடம் மாற்றி அறியாமை வழியில் அழைத்துச் செல்லும் ஓர் இயக்கம் என்பதில் சந்தேகமில்லை. நமது பிள்ளைகளை அதில் சிக்காமல் காக்க வேண்டும். எனவே தான், பிள்ளை பிடிக்க தப்லீக் வருகின்றது, பப்ளிக் ஜாக்கிரதை என்று எச்சரிக்கின்றோம்.