MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தொழுகையில் நெஞ்சியில் தக்பீர் கட்டுவது கூடுமா?

எழுதியவர்: மௌலவி  S.L.அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் தொழுகையில் நெஞ்சின் மீது அல்லது நெஞ்சின் மேலே தக்பீர் கட்டுவது நபிவழியா?


​​

♣  இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-

தொழுகையில் நெஞ்சின் மீது அல்லது நெஞ்சின் மேலே கையை கட்டவேண்டும் என நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பாக வஹாபிகளால் முன் வைக்கப்படும் ழஈபான பலவீனமான ஹதீஸ் பற்றிய தெளிவான விளக்கமும், வஹாபிஸ ஷைதான்களின் சூழ்ச்சியும் பற்றி நாம் தெளிவாக புரிந்து கொள்வது அவசியமாகும்.


​​அந்த அடிப்படையில் வஹாபிகள் சஹீஹான ஹதீஸ்களை குர் ஆனுக்கு முரணாகின்றது என்றும் தங்களது புத்திக்கு புறம்பாகிறது என்றும் பல ஹதீஸ்களை தூக்கி எறிந்து விட்டு அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட அவர்களின் கொள்கைக்கு தோதுவாக அமையும் பக்க ழஈபான பலவீனமான ஹதீஸ்களை வைத்து இஸ்லாமிய சட்டங்களை எடுக்கின்றார்கள். இவர்களை போன்ற அறிவிலிகள் இவ்வுலகில் எவருமே கிடையாது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21) மேலும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் முஸ்லிம்களுக்கு தொழுகையின் முறை குறித்து வழிகாட்டிச் சென்று இருக்கிறார்கள். 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்' எனவே சகோதர சகோதரிகளே, மேற்கண்ட திருமறை வசனம் மற்றும் நபிமொழிகள் இதற்கு தெளிவான விளக்கங்களை கூறிச்சென்ற நேர்வழி பெற்ற ஹாபாக்கள், இமாம்களை பின்பற்றி அவர்கள் கூறிய தத்துவங்களை உணர்த்து கொண்டால் நிச்சயம் வெற்றி உண்டு.

♦  அரபி இலக்கணம் இலக்கியம் பற்றிய ஞானம் தெரியாத அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி நெஞ்சின் மீது கைகட்ட வைத்து அவர்களின் வணக்க வழிபாடுகளை பாழடித்துக் கொண்டிருக்கிறார்கள் வஹ்ஹாபிச முல்லாக்கள்.


​​இளைஞர்களே! ஆதாரபூர்வமான ஹதீஸினை மட்டுமே பின்பற்றுவோம் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் இப்போதிலிருந்து தொழுகையில் நெஞ்சின் மேலே கைகட்டுவதை விட்டுவிடுங்கள். இன்று நவீன புதுமை விரும்பிகளாகிய வழிகெட்ட வஹ்ஹாபிஸ கொள்கையிலுள்ள சில இளைஞர்கள் ஆதாரம் காட்டுவதற்காக onlinepj.com இல் இருந்து copy & paste செய்து வருகின்றார்கள். இதுவெல்லாம் அரபு இலக்கணம் இலக்கியம் தெரியாத மக்களை ஏமாற்ற ஊடுருவி வந்த வழிகெட்ட இணையதளத்தின் ஜாலங்கள் என்பதை மறந்து விடக் கூடாது. அந்த அடிப்படையில் அவற்றில் ஒன்றுதான் நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பாக அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ள ழஈபான பலவீனமான ஒரு ஹதீஸாகும்.

♦ இந்த ஹதீஸை தங்கள் கிரந்தத்தில் பதிவு செய்துள்ள இமாம் அஹமது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களே இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் ஒருவரை குறைவுபடுத்தி இருக்க இந்த ஹதீஸை ஸஹிஹ் என்று எப்பிடி சொல்ல முடியும், சிந்தியுங்கள்.

حدثنا يحيى بن سعيد عن سفيان حدثني سماك عن قبيصة بن هلب عن ابيه قال رأيت النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه وعن يساره ورأيته قال يضع هذه على صدره – رواه احمد

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பும் போது,பார்த்தேன் (தொழுகையில்) நெஞ்சின் மீது இக்கையை வைப்பதையும் நான் பார்த்தேன்.


​​அறிவிப்பாளர் – ஹழ்ரத் ஹுல்ப் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : அஹ்மத்- எண் : 20961

இந்த ஹதீஃதின் அறிவிப்பாளர் வரிசையில் சிமாக் என்பவர் வருகிறார். இவரைப் பற்றி ஹதீஃத் கலை வல்லுனர்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார்கள். 'நம்பகமானவரென்று, இன்நிறையை மட்டுமே கூறியவர்களுமுண்டு, இவ்வாறு கூறியவர்கள் எண்ணிக்கையில் மிகமிக சொற்பமானவர்கள் ஆனால் இவருடைய குறை - நிறை இரண்டையும் கூறியவர்களும் இருக்கிறார்கள், இவர்களும் குறைந்த எண்ணிக்கையைச் உள்ளவர்களே, சிமாக் பலவீனமானர், அவருடைய ஹதீஃதை ஆதாரமாக ஏற்கக்கூடாது என்று குறைமட்டுமே சொன்ன ஹதீஃத் கலை அறிஞர்கள்தான் ஏராளமானவர்கள் உள்ளார்கள்.


​​

♣  சிமாக் என்பவரைப் பற்றி நிறை கண்டோர்

1) சிமாக் உண்மையாளர், நம்பத்தகுந்தவர். அபூஹாதிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

♣  சிமாக் என்பவரைப் பற்றி குறை நிறை கண்டோர்

1)   இக்ரிமா வழியாக சிமாக் அறிவிப்பது தடுமாற்றம் முள்ளதாகும். இப்னுல் மதீனீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

2)  இக்ரிமா வழியாக சிமாக் அறிவித்த ஹதீஃத் மட்டுமே தடுமாற்றத்திற்குரியது. மற்றவர் வழியாக அவர் அறிவித்தவை நல்லதை. ஆனால் சிமாக் உறுதியான நிலைப்பாட்டுக் குரியவரல்ல. யாகூப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3)  சிமாக் அறிவிக்கும் ஹதீஃதை ஏற்று கொள்ளலாம். ஆனால் இக்ரிமா வழியாக அவர் அறிவிப்பதை ஒப்புக்கொள்ளக்

கூடாது. காரணம், இக்ரிமா கூறியதை (இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள்) சொன்னதாக அறிவித்துவிடுவார். இஜ்லீ பக்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

4) சிமாக் என்பவர் பரவாயில்லை என்று சொல்லத்தக்கவரே. அவர் அறிவிக்கும் ஹதீஃதில் பலவீனமுண்டு. நசாயீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

5) சிமாக் அறிவிக்கும் ஹதீஃத்கள் அழகானவை. ஆனால் அவர் பரவாயில்லை என சொல்லத்தக்க உண்மையாளர். இப்னு அதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

6) சிமாக் நம்பகமானவர். ஆனால் யாருமே அறிவித்திராத நபரின் வழியாகவெல்லாம் ஹதீஃதை அறிவிக்கும் குறைபாடு இவரிடமுண்டு. இப்னு மஈன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

♣ சிமாக் என்பவரைப் பற்றி குறை கண்டோர்

1) சிமாக் ஹதீஃத் அறிவிப்பதில் தடுமாற்றம் முடையவர். அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

2. சிமாக் ஹதீஃத் அறிவிப்பதில் தவறிழைப்பார். அவர் அறிவிக்கும் ஹதீஃத் ஏற்றுக் கொள்வதில் ஹதீள்த் கலை அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனார். இப்னு அம்மார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

3) சிமாக் பலவீனமானவர்

அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

4) சிமாக் பலவீனமுள்ளவர் ஸாலிஹ் ஜஸ்ரா ரஹ்மத்துல்லாஹி அலைஹி

5) சிமாக் ஹதீஃதில் பலவீனமுண்டு. இப்னு ஃகர்ராஷ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

6) ஹதீஃத் அறிவிப்பதில் சிமாக் அதிகம் தவறு செய்வார். இப்னு ஹிப்பான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

7) நான் சிமாகிடம் வரும் போது அவர் நின்ற வண்ணம் சிறுநீர் கிழிப்பதைப் பார்த்தேன். அவரிடம் எதுவும் கேட்காமல் திரும்பிவிட்டேன். ஜரீர் இப்னு அப்தில் ஹமீத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி

8) சிமாக் பலவீனமானவர். ஷுஃபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி

9) சிமாக் சிறிது பலவீனமுள்ளவர். சுஃப்யான் தவ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி

10) தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 4 பக்கம் 204,205 எனும் நூல் ஆசிரியர்- இப்னு ஹஜர் அஸ்கலானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'இமாம் தகபீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குரிய மீஜானுல் இஃதிதால் எனும் நூலில் கீழ்க்காணும் செய்திகள் இடம் பெற்றுள்ளன'.

சிமாக் தனித்து அறிவிக்கும் ஹதீஃத் சான்றாக அமையாது என இமாம் நசாயி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் சிமாக் இலக்கிய நயத்தோடு பேசுபவர். தனது பேச்சாற்றல் மற்றும் இலக்கியப் புலமையின் மூலம் ஹதீஃதை அழகு படுத்தும் வழமையுள்ளவர். அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி (பாகம்-2, பக்கம்-232)

♦ ஆகவே ஹதீஃத் கலை அறிஞர்களில் பலர் சிமாகை குறைகண்டு இருக்க ஓரிரு அறிஞர்களின் கருத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு அரபி ஞானம் தெரியாத அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி நெஞ்சின் மீது கைகட்ட வைத்து அவர்களின் வணக்க வழிபாடுகளை பாழடித்துக் கொண்டிருக்கிறார்கள் வஹ்ஹாபிச முல்லாக்கள். அப்பாவி இளைஞர்களே! ஆதாரபூர்வமான ஹதீஃதை மட்டுமே பின்பற்றுவோம் என்பதில் நீங்கள் உறுதியாக இருந்தால் இப்போதிலிருந்து தொழுகையில் நெஞ்சின் மேலே கைகட்டுவதை விட்டுவிடுங்கள்.

♦ ஏனென்றால், சிமாக் இடம்பெறும் ஹதீஃத் பக்கா பலவீனமான ஹதீஃத் வஹ்ஹாபிய புரோகிதர்களையே பின்பற்றுவோம் என்ற நிலையிலிருந்தால் மறுமை வாழ்வு என்னாகும் என்பதை ஒரு கனம் யோசியுங்கள்.


​​அறிப்பாளர் வரிசையில் சிமாக் இடம் பெற்ற ஹதீஃதைப் பின்பற்றுவதிலிருந்து பின் வாங்கமாட்டோம், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டுவதை விடமாட்டோம் என்பதில் வஹ்ஹாபி இளைஞர்களே! நீங்கள் பிடிவாதமாக இருந்தால் இன்றிலிருந்து புதிய முறையில் நீங்கள் கைகட்டவேண்டும். ​​நெஞ்சின் மீது இருகைகளையும் வைக்கக்கூடாது. ஒரேவொரு கையை மட்டுமே நீங்கள் வைக்கவேண்டும். காரணம் நெஞ்சின் மீது கைவைப்பதற்கு நீங்கள் ஆதாரமாக எடுத்த அஹ்மதிலே பதிவு செய்யப்பட்ட ஹதீஃத்தில் ஒரு கை வைப்பதற்குண்டான வார்த்தையே இடம்பெற்றுள்ளது. "ஹாதிஹீ " என்ற வார்த்தை தான் அது. அதன் பொருள் இந்த(கை) என்பதாகும். ஆகவே,நெஞ்சின்மீது வலது கையை மட்டும் வையுங்கள். அல்லது இடது கையை மட்டும் வையுங்கள். அது எப்படி ஒரு கையை வைப்பது? தொழுகையில் இவ்வாறு செய்வது அழகிய நடமுறை அல்லவே என நீங்கள் கூறினால் அந்த ஹதீஃதை ஆதாரமாகக் கொண்டு நெஞ்சின்மீது கை கட்டுவதை நிறுத்திவிடுங்கள். அதுதான் நீங்கள் நியாயவாதிகள் என்பதின் அடையாளம். 

அவ்வாறில்லாமல் அந்த ஹதீஃதில் இடம் பெற்ற ‘ நெஞ்சின் மீது ‘ என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். ஒரு கை என்பதை விட்டுவிடுவோம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்தால் வஹ்ஹாபி இளைஞர்களே! உங்களின் சுயநலத்திற்காக ஹதீஃதை சிதைத்த குற்றத்திற்கு உள்ளாகுவீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனவே நெஞ்சில் தக்பீர் கட்டுவது தொடர்பான பலவீனமான செய்தி குறித்து தவறான தகவல்களை பகிரும் வழிகெட்ட வஹ்ஹாபிகளின் தீய பிரச்சாரங்களை விட்டும் எல்லாம் வல்ல கிருபையாளன் அனைத்து முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களையும் காப்பாறுவாயாக!


​​தொழுகையில் தக்பீர் கட்டும் சரியான முறையினைப் பற்றி அபூதாவூத் எனும் ஸஹீஹான ஹதீஸ் கிரந்தத்தில் ஜரீர் இப்னு ரபீஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அதாவது அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் தொப்பிலுக்கு மேலே தக்பீர் கட்டுவார்கள், மேலும் அபூதாவூத் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இன்னுமொரு ஹதீஸ் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் தக்பீர் கட்டுவது தொப்பிலுக்கு கீழே என்று கூறியுள்ளார்கள்.


​​ஆகவே ஷாபிஈ மத்ஹபின் அடிப்படையில் தொழுகையில் தக்பீர் தொப்பிலுக்கு மேலேயும், ஹனபி மத்ஹப் அடிப்படையில் தொப்பிலுக்கு கீழேயும் கட்டுவதே சரியான முறை என்பதை ஹதீஸ் ரீதியாக தெளிவாக விளங்குகின்றது. நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தையும் தெளிவாக விளக்கிச் சென்ற ஸஹாபாக்கள், இமாம்கள் நாதாக்களைப் பின்பற்றி வாழ்வதற்கு எல்லாம் வல்ல கிருபையாளன் நல்லுதவி புரிவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்