MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வஹாபிகள் உருவ வணங்கிகள் 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


முஸ்லிம்களே எச்சரிக்கை! அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என கூறும் உருவ வணங்கிகளாகிய வழிகெட்ட வஹ்ஹாபி முஜஸ்ஸிமாக்களிடம் இருந்து உங்களது ஈமானை பாதுகாத்து கொள்ளுங்கள்.


♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு

உருவ வணங்கி வழிகெட்ட  வஹாபி முஜஸ்ஸிமாக்கள் கூறுகிறார்கள்       அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, அந்த உருவம் மனிதனின் உருவத்தைப் போன்று  கண் மூக்கு காது முகம் கை கால் விரல்கள் இருக்கிறது, இறைவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து இறங்கி செல்வான், இறைவனிடம் மாற்றங்கள் ஏற்படும், இறைவனுக்கு பல உருவமுண்டு, அந்த உருவங்களை ஒவ்வொருவரும் கற்பனை செய்யலாம் என்றும், அவரவர் கற்பனை செய்த உருவங்களில் மறுமையில் இறைவன் காட்சியளிப்பான் ஆகவே இறைவனுக்கு உருவமுண்டு எனக்கூறி உருவ வழிபாடு செய்துக்கொண்டு அப்பாவி பாமர மக்கள் மத்தியில் (உருவமற்ற இறைவன்) எனும் தூய இறைக்கோட்பாட்டை முஸ்லிம்களிடத்தில் ஜாஹிலிய்யா காலப்பகுதியில் காணப்பட்ட முஷ்ரிகீன்களது யூதக்கருத்தை கொண்டு வந்து திணிக்கிறார்கள். (நவூது பில்லாஹ்)

முஷ்ரிகீன்களுக்கும் வஹ்ஹாபிகளுக்கும் உள்ள வேறுபாடு முஷ்ரிகீன்கள் கல் விக்ரகங்களை வணங்குகின்றார்கள் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கற்பனை விக்ரகங்களை வணங்குகின்றார்கள். வஹ்ஹாபிகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். ஆனால் உண்மை முஸ்லிம்களாகிய சுன்னத் வல் ஜமாஅத்தினர்கள் உருவமற்ற ஏக இறைவனை வணங்குகிறார்கள் என்பது சின்னக் குழந்தைக்கும் தெரிந்த இஸ்லாத்தின் அடிப்படை உண்மையாக இருக்கிறது.

குர் ஆனும் சரி, ஹதீசும் சரி ஒருவகையான இலக்கணம், இலக்கியம், கவி நடையிலயே பல உவமைகளையும் உதாரணங்களையும் கொண்டதாக இருப்பதையே காண்கிறோம். அவற்றுக்கு நேரடிப் பொருள் கொள்வதைவிட அவை குறிப்பால் உணர்த்துவதைச் சரியாகப் பிடித்துக்கொண்டால், தெளிவு தானே வந்துவிடும். பின் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா இல்லையா என்பதில் ஒரே ஒரு கருத்து வந்துவிடும். எங்கும் நிறைந்த இறைவன் என்று சொன்னால், அப்படியான இறைவனை ஓர் உருவத்துக்குள் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும்.

"பிடரி நரம்புக்கும் அருகாமையில் இறைவன் இருக்கிறான்” என்று சொன்னால் உருவமிருந்தால் இது எப்படி இயலும்? பார்வையால் அடைய முடியாதவன் என்று சொல்லும் போது எண்ணத்தால் உள்ளத்தால் மட்டுமே அடைய முடிந்தவன் என்றுதான் கொள்ள வேண்டி இருக்கிறது என்றால் அங்கே உருவ இருப்பு கேள்விக்குறியல்லவா? எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆகவே குர்ஆன், ஹதீஸ்களை ஆராய்ந்தறியும் நம்பிக்கை, இமாம்கள் நாதாக்களின் கருத்துக்களே உருவமற்றவன் இறைவன் என்பதில்தான் அழுத்தமாக நிற்கிறது.


♣ உருவ வணங்கி வழிகெட்ட வஹாபி முஜஸ்ஸிமாக்கள் முன்வைக்கும் அர்த்தமற்ற வாதங்கள்

திருக்குர்ஆனின் பல வசனங்கள், நபிமொழிகள் அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றியும், இலக்கணம், இலக்கியம், கவிநடை பற்றியும் பேசுகின்றன. அல்லாஹ் உருவமற்றவன் என்பது தான் இஸ்லாத்தின் ஏகத்துவக் கொள்கை என்று முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிமல்லாத மக்களும் நம்புகிறார்கள். ஆனாலும் அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக இலக்கணம், இலக்கியம் கவிநடை கருத்தில் பாணியில் ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளும் உள்ளன இப்படிப்பட்ட வசனங்கள், நபிமொழிகளை வழிகெட்ட வஹ்ஹாபிகள் மேலோட்டமாக பார்த்து விட்டு நேரடி பொருள் கொடுத்து அதில் கூறப்பட்ட இலக்கியநயம் புரியாமல் அல்லாஹ்வுக்கு உருவத்தை கற்பித்து ஷிர்க் எனும் இணைவைத்தல் செய்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் பொதுவாக எந்தச் சொல்லாக இருந்தாலும் நமது அன்றாட நடைமுறையிலும் இலக்கியநயம் உள்ளது. உதாரணமாக ஒருவன் இன்னொருவனுக்குக் தோழாகவும், கையாகவும் இருக்கின்றேன் என்று கூறுவதன் பொருள் உனக்கு உதவியாக இருக்கின்றேன், அவருக்கு கை கொஞ்சம் விசாலமானது என்று கூறுவோம் அப்படியென்றால் அவரின் கை நீளமானது என்று பொருளா? இல்லை மாறாக அவர் அதிகமாக தர்மம் செய்கின்றவர் என்று பொருளாகும், அவருக்கு கொஞ்சம் வாய் நீளம் என்று கூறுவோம் அப்படியென்றால் அவருக்கு பெரிய வாயா? இல்லை மாறாக அவர் அதிகம் பேசுபவர் என்று நமது நடைமுறையிலும் பேச்சு வார்த்தைகளிலும் உள்ள இலக்கியநயத்தை புரிந்து பொருள் கொடுக்கின்றோம் அதே மாதிரி தான் இறைவனின் கை, முகம், கால், விரல்கள் என்று இலக்கியநயத்துடன் வரும் அனைத்து குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளது.


ஆகவே குர்ஆன், ஹதீஸ்களில் வந்துள்ள இலக்கியநயத்தை புரிந்து கொள்ளாமல் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்ற இஸ்லாத்துக்கும் ஈமானுக்கும் எதிரான கருத்து இஸ்லாத்தின் பெயரால் வழிகெட்ட உருவ வணங்கி வஹாபி முஜஸ்ஸிமாக்களால் மக்களிடம் புகுந்து விட்டதால் மக்களிடம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் உரிய அளவுக்கு இல்லாமல் போய்விட்டது. அந்த அடிப்படையில் குர்ஆன், ஹதீஸ்களில் இலக்கியநயத்துடன் கூறப்பட்ட செய்திகளை தவறான முறையில் புரிந்து கொண்டு இலக்கிய நயம் என்ற அடிப்படை அறிவே இல்லாமல் நேரடியான கருத்துக்களை வைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என முன்வைக்கப்படும் சில செய்திகளை பின்வருமாறு தொகுத்து தந்துள்ளோம்.

அல்குர்ஆன் வசனங்கள் (2:46, 2:223, 2:249, 3:77, 6:31, 6:154, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23,7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4, 9:129, 11:7, 17:42, 21:22, 22:86, 22:116, 27:26, 40:15, 43:82, 81:20, 85:15, 89:22  68:42, 39:67, 38:75, 2:253, 4;164, 7;143, 7:144)

நபிமொழிகள் (புகாரி  554, 573, 806, 4581, 4851, 6574,7434, 7435, 7436, 7438, 7440, 4919, 7440, 806, 4685, 6614, 6520, 3057, 3337, 3440, 4403, 6173,7127, 7131, 7407, 7437, 3798, 6573 முஸ்லிம் 5371, 5372, 3731, 297,298)

மேலே குறிப்பிடப்பட்ட சில குர்ஆன் வசனங்கள், நபிமொழிகளில் வந்துள்ள இலக்கியநயத்தை புரிந்து கொள்ளாமல் நேரடியான கருத்துக்களைக் வைத்து அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என வழிகெட்ட வஹ்ஹாபிகள் ஊளையிடுவது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. ஆகவே அல்லாஹ்வைப் பற்றி பேசும்போது எல்லா இடங்களிலும் நேரடிப் பொருள் கொள்ள முடியாது அந்த இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள  இலக்கியநயத்தை புரிந்து கொண்டு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும் என்பதை வழிகெட்ட வஹ்ஹாபிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


♣ அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என உருவ வழிபாடு செய்யும் வழிகெட்ட வஹ்ஹாபிகள் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள்.  ஒரு யூதர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து ”முஹம்மதே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒருவிரலின் மீதும் பூமிகளை ஒருவிரலின் மீதும் மலைகளை ஒரு விரலின் மீதும் மரத்தை ஒரு விரலின் மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரலின் மீதும் நிறுத்திக்கொண்டு, ”நானே அரசன்” என்று கூறுவான்” என்றார்.

(இதைக் கேட்ட) இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் வெளியே தெரியச் சிரித்துவிட்டு, ”அவர்கள் அல்லாஹ்வை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படி மதிக்கவில்லை” எனும் (யூதர்களைப் பற்றிய 6:91 வது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.


நூல்: ஷஹீஹ் புகாரி 7414, 7415, 7451, 7513, ஸஹீஹ் முஸ்லிம்:  5371, 5372, 5373, 5374

மேலே உள்ள ஹதீஸை அடிப்படையாக வைத்து அல்லாஹ்வுக்கு கை, விரல்கள் உள்ளது என்று வழிகெட்ட வஹாபிகள் கூறுகிறார்கள். (நவூது பில்லாஹ்) ஆனால் இந்த ஹதீஸுக்கு விளக்கம் கூறுகிற இமாம் குர்துபீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள். இந்த கூற்று யூதனின் கூற்றாகும். யூதர்கள் இறைவனுக்கு உருவமுண்டு என்றும், இறைவனுக்கு உறுப்புக்கள் இருக்கிறது என்றும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். இந்த உம்மத்திலும் இது போன்ற வரம்பு மீறிய கூட்டத்தினர் இருக்கிறார்கள்.


நூல்: முஃப்ஹிம் மஹ்மூது

சுப்கீ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள் “இத்திஹாபுல் காயினாத்” எனும் தனது நூலில் கூறுகிறார்கள். (மறைவு ஹிஜ்ரி 1352 - இவர்கள் அல் அஸ்ஹர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த பெரும் இஸ்லாமிய அறிஞரும், எகிப்தின் ஷரீஆ அமைப்பின் நிறுவனரும் ஆவார்கள்) அல்லாஹ் ஒரு திசையில் இருக்கிறான் என்று நம்புகிறவன் காபிர், இதை ஹாபிழ் இராக்கி அவர்கள்  கூறியுள்ளார்கள். இதுவே இமாம் அபூஹனீபா, இமாம் மாலிக், இமாம் ஷாபிஈ, இமாம் அபுல் ஹஸன் அல்அஷ்அரி, பாகில்லானி (ரஹ்மதுல்லஹி அலைஹிம்) ஆகியோரின் கருத்தாகும்.

இமாம் ஷாபிஈ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்களின் கருத்து (கிப்லாவை ஏற்றுக் கொண்டவர்கள் யாரையும் காபிராக்கக் கூடாது என்று கூறுகிற இமாம் ஷாபிஈ (ரஹ்மதுல்லஹி அலைஹி) அவர்கள், அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது என்று சொல்கிறவனையும் அல்லாஹ்வுக்குச் சின்னச் சின்ன விசயங்கள் தெரியாது என்று சொல்கிறவனையும் காஃபிர் என்று கூறினார்கள்.


நூல் : அல்அஷ்பாஹ் வந்நழாயிர் 1/744


♦ கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள். (அல்குர்ஆன் : 68:42)


அந்த அடிப்படையில் (நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) ”இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தன்னுடைய பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ”போதும்! போதும்!” என்று கூறும் என நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக.


நூல்: புகாரி 4848, 4849

மேலே உள்ள இந்த குர்ஆன் வசனம், ஹதீஸை அடிப்படையாக வைத்து அல்லாஹ்வுக்கு கால் உள்ளது நரகத்தில் தன்னுடைய காலை வைப்பான் என்று வழிகெட்ட வஹாபிகள் இறைவனையே நரகத்தில் அனுபிவிட்டார்கள். பாவம் செய்தவர்களை நரகதுக்கு அனுப்பும் இறைவனையே உருவ வணங்கி வஹாபி முஜஸ்ஸிமாக்கள் அல்லாஹ்வுவையே நரகத்திற்கு அனுப்பி விட்டார்கள் (நவூது பில்லாஹ்)


ஆகவே மேலே கூறப்பட்ட செய்தியில் நரகத்தில் காலை வைத்தான் என்றால் அல்லாஹ் நரகத்தை அடக்கி ஆழுகிறான் என்பதாகும், கால் என்ற வார்த்தையை கொண்டு அடக்கி ஆழுகிறான் என்ற இலக்கியநயத்துடன் இறைவன் கூறுகிறான் ஆகையால் இப்படிப்பட்ட குர்ஆன் வசனம், ஹதீஸூக்கு நேரடி பொருள் கொடுக்காமல் இலக்கியநயத்தை புரிந்து கொண்டு மாற்று பொருள் கொடுக்க வேண்டும்.

♦ அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும், தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும், ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். (அல்குர்ஆன் 75:23, 24,25) அந்த அடிப்படையில்  ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார்கள். இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு பௌர்ணமி இரவில் எங்களிடம் புறப்பட்டு வந்து ”நீங்கள் இந்த முழு நிலாவை நெருக்கடியின்றி காண்பதைப் போன்றே உங்களுடைய இறைவனை மறுமைநாளில் காண்பீர்கள்” என்றார்கள்.


நூல்: புகாரி 7436,  7437

மேலே உள்ள இந்த குர்ஆன் வசனம், ஹதீஸை வைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு உருவம் இருந்தால்தானே மறுமையில் பார்க்க முடியும் ஆகவே இறைவனுக்கு உருவமுண்டு என்று இலக்கியநயம் புரியாமல் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுவார்கள். ஆனால் அப்படி அல்ல ஒன்றைப் பார்ப்பதாக இருந்தால் உருவம் இருந்தே ஆகவேண்டும் என தவறாக புரிந்துள்ளார்கள். ஆனால் சர்வசாதாரணமாக உலகத்திலே எத்தனை பொருட்களை உருவமில்லாமலே பார்க்கின்றோம் உதாரணமாக ஒளி, சூரிய வெளிச்சம், மின்சக்தி,  போன்றவை பார்க்கிறோம் வெளிச்சத்துக்கு உருவம் இல்லாமலே பார்க்கின்றோம். லைட்டுக்கு, சூரியனுக்கு உருவம் உண்டு ஆனால் அதிலிருந்து வரும் வெளிச்சத்திற்கு உருவமில்லாமலே பார்க்கின்றோம்தானே ஆகையால் ஒன்றை பார்ப்பதற்கு உருவம் இருந்தால்தான் பார்க்க முடியும் என்பது வஹ்ஹாபிகளின் அறியாமையின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே மேலே கூறப்பட்ட செய்தியில் இறைவனை பௌர்ணமி இரவில் முழு நிலாவை பார்ப்பது போன்று முஃமீன்கலாகிய நீங்கள் காண்பீர்கள் என்றால் அல்லாஹ்வை உறுதியாக எவ்வித சந்தேகமுமின்றி காண்பதாகும் ஆனால் மறுமையில் இறைவனை முஃமீன்கள் எவ்வாறு காண்பார்கள் என்பது அவன் ஒருவனே அறிந்தவன்.


எது எப்படி இருந்தாலும் பௌர்ணமி இரவில் முழு நிலாவை பார்ப்பது போன்று காண்பீர்கள் என்ற வார்த்தையை கொண்டு சந்தேகமின்றி உருதியாக முஃமீன்கள் மறுமையில் இறைவனை காண்பார்கள் என்ற இலக்கியநயத்துடன் இறைவன் கூறுகிறான் ஆகையால் இப்படிப்பட்ட குர்ஆன் வசனம், ஹதீஸூக்கு நேரடி பொருள் கொடுக்காமல் இலக்கியநயத்தை புரிந்து கொண்டு மாற்று பொருள் கொடுக்க வேண்டும்.

♦ எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

(அல்குர்ஆன் : 67:1)

இந்த வசனத்தில் இலக்கியநயத்தில் அல்லாஹ் கூறுகிறான் கை என்றால் ஆட்சி அதிகாரம் என்று பொருள் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட இலக்கியநயம் நமது வரலாற்று நூற்களிலும் நிறைந்து காணப்படுகிறது ஒரு காலத்தில் பக்தாத் நகரம் மன்னன் ஹாரூன் ரஷீத் அவர்களின் கையில் இருந்தது. இதன் பொருள் ஒரு காலத்தில் ஹாரூன் ரஷீத் பக்தாத் நகரில் ஆட்சியாளராக இருந்தார் என்பதாக விளங்கக் கூடிய வஹ்ஹாபிகள் மன்னன் ஹாரூன் ரஷீத் அவர்கள் பக்தாத் நகரத்தை கையில் தூக்கி பிடிச்சிக் கொண்டிருந்தார் என்று நேரடி பொருள் கொள்வார்களா?


ஆகவே இலக்கிய நயத்தை முதலில் வஹ்ஹாபிகள் புரிந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் இவ்வாறான தவரான கருத்துக்கள் ஊடுருவி உங்களது ஈமானை அழித்து விடும். அந்த அடிப்படையில் மேலே உள்ள வசனம் ஆட்சி அதிகாரம் அல்லாஹ்விடமுள்ளது என்பதை கை என்ற வார்த்தை மூலம் இலக்கியநயத்தை கொண்டு கூறுகிறான் ஆகையால் இப்படிப்பட்ட வசனத்திற்கு நேரடி பொருள் கொடுக்காமல் இலக்கியநயத்தை புரிந்து கொண்டு மாற்று பொருள் கொடுக்க வேண்டும்.


♣ அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பதற்காக ஆதாரங்கள்

(உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம் கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக் கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்; அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில் எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து விடுவீர். (அல்குர்ஆன் : 17:29)

இந்த வசனத்தில் இறைவன் இலக்கியநயம் பேசுகிறார் இதனை நேரடியாக புரிந்து கொண்டாள் அல்லாஹ் கையை கழுத்தில் வைக்க கூடாது என்று கூறிவிட்டான் இனி யாரும் கழுத்தில் கையை வைக்க கூடாது என்றும் மேலும் அல்லாஹ் கையை ஒரே விரிப்பாக விரித்து விடாதீர் என்று கூறிவிட்டான்  ஆகையால் இனி யாரும் கையை ஒரே விரிப்பாக விரித்து விட கூடாது என்றும் கூற முடியுமா? ஆகவே இறைவன் இந்த வசனத்தில் இலக்கியம் பேசுகிறான் அதாவது கஞ்சனா இருக்காதீர், உதவி செய், உதவி செய்ய விரும்பினாலும் உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் கொடுத்து விட்டு நீ கச்டப்படாதே என்று இலக்கியநயத்தில் பேசுகிறான்.

இதற்கு நேரடியாக பொருள் கூறினாள் கழுத்தில் யாரும்  கையை வைக்க முடியாது, கையை ஒரே விரிப்பாக விரித்து விட முடியாது என நடைமுறைக்கு சாத்தியமற்றதாக ஆகிவிடும் இப்படித்தான் அல்லாஹ்வின் விடயத்தில் வழிகெட்ட வஹ்ஹாபிகள் புரிந்து கொண்டு அல்லாஹ்வுக்கு கண், மூக்கு, காது, வாய், முகம், கை, கால், விரல்கள் உள்ளது என்று இலக்கியநயத்தில் கூறப்பட்ட குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களுக்கு நேரடி அர்த்தம் பொருள் கொடுத்து தவறான புரிந்து கொண்டு உருவ வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இப்படிப்பட்ட செய்திகளை நேரடி பொருள் கொள்ளாமல் இலக்கியநயத்துடன் புரிந்து கொள்ள வேண்டும்.

♦ மேலும் அல்லாஹ் உருவமற்றவன், எதற்கும் ஒப்பானவன் அல்ல முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கை, அல்லாஹ் உருவமற்றவன். அல்லாஹ்வுக்கு கண், காது, கை, கால், விரல்கள், முகம் என உறுப்புகள் கிடையாது. அவன் கண்ணின்றி பார்ப்பவன் காதின்றி கேட்பவன். இன்னும் அவன் எதற்கும் யாருக்கும் ஒப்பானவன் அல்ல. இதை பற்றி அல்லாஹ் அல் குர்ஆனிலே கூறும்போது :"பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்" (அல் குர்ஆன் 6:103)

♦ (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் : 112: 1, 2, 3, 4)

♦(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே, மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். (அல்குர்ஆன் : 55: 36,27)

அல்லாஹ்வுடன் வேறு எந்த நாயனையும் வணங்காதீர்கள் அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவனைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்து விடுபவையேயாகும்; அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது; இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 28:88)

மேலே உள்ள இந்த வசனத்தில் எல்லாம் அழிந்து விடும் அல்லாஹ்வின் முகத்தை தவிர என்றால் இறைவனின் உள்ளமை மட்டும் அழிந்து விடாது என்பதை முகம் என்ற வார்த்தையை கொண்டு உள்ளமை என்பதை இலக்கியநயம் கொண்டு கூறுகிறான். ஆகவே வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுவது போன்று முகம் என்று நேரடியான பொருள் வைத்து அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று கூறுவது மிகப் பெரும் ஆபத்தில் கொண்டு சேர்த்து விடும்.


ஏனெனில் அல்லாஹ்வுக்கு கை, கால், விரல்கள் உள்ளது என்றால் மேலே உள்ள வசனத்தின் பிரகாரம் முகம் மாத்திரம் தான் அழிந்து விடாது  அல்லாஹ்வின் மற்ற உறுப்புக்களாகிய கை, கால், விரல்கள் அழிந்து விடும் என்ற ஆபத்தான விபரீதமான கருத்து வந்துவிடும் ஆகையால் இப்படிப்பட்ட குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்களுக்கு நேரடி பொருள் கொடுக்காமல் இலக்கியநயத்துடன் புரிந்து கொண்டு மாற்று பொருள் கொடுக்க வேண்டும்.

♦ வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்குர்ஆன் : 42:11)


♣ அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்பது பற்றிய வீடியோ பயான்கள், கீழே உள்ள லிங்கை அலுத்தவும்

உரை : தமிழ் நாடு சுன்னத் வல் ஜமாஅத் தலைவர், பேராசிரியர், அல் ஹாபிழ், அப்லளுல் உலமா, அபுதலாயில், ஷெய்க் அப்துல்லாஹ் ஜமாலி MA ஹழ்ரத் அவர்கள்

https://youtu.be/mrmvOHn-2A8

https://youtu.be/ytVP8RSAB6w

https://youtu.be/jzzt_g-Umyg

https://youtu.be/yx3G2ZbH7wg


♣ அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா இல்லையா என்பதில் நிலையில்லாத குழப்பவாதிகள் கீழே உள்ள லிங்கை அலுத்தவும்

இலங்கையில் நடைபெற்ற விவாதத்தில் உருவ வணங்கிகள் தங்களது வழிகெட்ட கொள்கைகளை நிமிடத்திற்கு நிமிடம் மாற்றிய வழிகெட்ட வஹ்ஹாபிகள் முஸ்லிம் என்ற பெயரில் மாறுவேடத்தில் நடமாடும் கூட்டம் என்பதை முழு உலக முஸ்லிம்களும் கண்களால் கண்டுகொண்ட வீடியோ முஸ்லிம்களே எச்சரிக்கை!

https://www.facebook.com/mailofislam.official/videos/vb.100001251482444/1070006163051090/?type=3&theater