MAIL OF ISLAM

Knowledge & Wisdom



வஹ்ஹாபிகளின் மதஸ்தலங்களிலும், வழிகெடர்களின் பின் நின்றும் தொழலாமா? 


எழுதியவர்: மௌலவி  S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


இஸ்லாத்தின் பார்வையில் வழிகெட்ட வஹ்ஹாபிகளின் மதஸ்தலங்களிலும், கொள்கை சரியில்லாதவர்களின் பின் நின்றும் தொழலாமா? என்பது பற்றி ஓர் ஆய்வு



♣ வழிகெட்ட வஹ்ஹாபிகளின் மதஸ்தங்களில் தொழலாமா?


இன்று நமது சமுதாயத்திற்குள் முஸ்லிம்கள் என்ற பெயரில் மாறுவேடத்தில் பல முனாபிக் கூட்டங்கள் அதாவது வஹ்ஹாபி முஜஸ்ஸிமாக்கள் வழிகேடர்கள், இன்னும் வழிகெட்ட பல குழப்பவாதிகள் மாறுவேடத்தில் உருவாகி உள்ளார்கள்.


இவர்கள் யஹூதிகளின் பணத்திற்காக மார்க்கத்தை விற்க மஸ்ஜிதுல் லிறார் எனும் சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் போட்டிப் பள்ளிவாசல்களை கட்ட  ஆரம்பித்து அப்பாவி பாமர மக்களுக்கிடையில் குழப்பத்தையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள் இந்த மார்க்க வியாபாரிகளிடம் இருந்து இஸ்லாத்தை பாதுகாக்க வேண்டும்.


மேலும் இவர்கள் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களை கூறுவதற்காகவும் அப்பாவி பாமர மக்களை குழப்புவதற்காகவும் முஸ்லிம்கள் மத்தியில் பிரிவினைகளை உண்டு பண்ணுவதற்காகவும் மஸ்ஜிதுல் லிறார் எனும் சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் போட்டிப் பள்ளிவாசல்களை அமைத்து விட்டார்கள். இப்படிப்பட்ட குழப்பத்தையும், பிரச்சினையையும், பிரிவினைகளையும் உண்டுபண்ணும் நோக்கத்துடன் மஸ்ஜிதுல் லிறார் எனும் சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் போட்டிப் பள்ளிவாசல் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலும் முனாபிக்கீன்கள் கட்டினார்கள். அவர்கள் கட்டிய பள்ளிக்கு (மஸ்ஜிது லிறார்) சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் பள்ளி என்று அல்லாஹ் பெயர் வைத்தான்.


அந்த அடிப்படையில் கட்டுக்கோப்பாக ஒற்றுமையாக வாழ்ந்த முஸ்லிம் சமுதாயத்திற்க்குள் பிரிவினையை உண்டுபண்ணவும், முஸ்லிம் மக்களை சீரழித்து குழப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் முனாபிக்கீன்களால் கட்டப்பட்ட பள்ளியினை உடைத்து ஈச்சம் மர ஓலைகள் மூலம் எரிக்கும் படி ஸஹாபாக்களிடம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய செய்தி பல தப்ஸீர் கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆகவே அன்று முனாபிக்கீன்களால் கட்டப்பட்ட பள்ளிவாசல்களைப் போன்று இன்று வழிகெட்ட வஹ்ஹாபிகள் இன்னும் பல வழிகெட்ட பிரிவினர்கள் மஸ்ஜிதுல் லிறார் எனும் சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் போட்டிப் பள்ளிவாசல்கள் என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் என்பவர்களிடம் அது பள்ளியே கிடையாது.


இப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று தொழ போகக்கூடாது, யாராவது அறியாமல் இதுபோன்ற போட்டிப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் சென்றால் வெளியே வந்து விடுங்கள் இதைத் தவிர்த்து வேறு சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலில் தொழுகைக்குச் செல்லுங்கள்.


ஏனெனில் மஸ்ஜிதுல் லிறார் எனும் சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் போட்டிப் பள்ளிவாசல்களில் தொழுவதற்க்குச் செல்லக் கூடாது, அங்கே தொழுதால் நமது தொழுகையே கூடாது என்பதை இறைவன் குர்ஆனில் பின்வருமாறு "ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்)" என்று கூறியுள்ளான்.


மஸ்ஜிதுல் லிறார் எனும் சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் வழிகெட்டவர்களால் கட்டப்பட்ட போட்டிப் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் என்று இறைவன் கூறிய காரணம் என்னவென்று குர்ஆனில் பின்வருமாறு "முஃமின்களிடையே மத்தியில் பிரிவினையை உண்டுபண்ண வேண்டும் என்பதற்காகதான் வழிகேடர்கள் போட்டிப் பள்ளிவாசல்களை கட்டியுள்ளார்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான்.


♦ இன்னும் (முனாபிக்கானவர்களில்) சிலர் - அவர்கள் எத்தகையோரென்றால் (இஸ்லாம் மார்க்கத்திற்கும், முஸ்லிம்களுக்கும்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிரிவினையை உண்டுபண்ணவும், இதற்கு முன் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய ரஸூலிடத்திலும் விரோதமாக போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஒரு மஸ்ஜிதை அமைத்தார்கள் (இதனை அமைத்ததன் மூலம்) நல்லதையே யன்றி (வேறொன்றும்) நாங்கள் நாடவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்கின்றனர் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (அல்குர்ஆன் : 9:107)


♦ ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது, அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது, அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான். (அல்குர்ஆன் : 9:108)



♣ கொள்கை சரியில்லாதவர்களின் பின் நின்று தொழலாமா?


தொழுகையில் இமாமத் கடமை செய்பவர் இஸ்லாத்தின் அடிப்கடையை தவிடு பொடியாக்கக்கூடிய (ஷிர்க் - குப்ர்) போன்ற இணைகற்பித்து நரகத்தில் நிரந்தரமாக இட்டுச் செல்லும் காரியங்களாகிய (அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு, அந்த உருவம் மனிதனின் உருவத்தைப் போன்று கண் மூக்கு காது முகம் கை கால் விரல்கள் இருக்கிறது, இறைவன் அர்ஷ் என்ற சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான், இறைவன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து இறங்கி செல்வான், இறைவனிடம் மாற்றங்கள் ஏற்படும், இறைவனுக்கு பல உருவமுண்டு, அந்த உருவங்களை ஒவ்வொருவரும் கற்பனை செய்யலாம் என்றும், அவரவர் கற்பனை செய்த உருவங்களில் மறுமையில் இறைவன் காட்சியளிப்பான் என்றெல்லாம் முஷ்ரிகீன்களைப் போன்று கற்பனை விக்ரகங்களை வைத்து உருவ வழிபாடு செய்யும் வழிகெட்ட வஹ்ஹாபி முஜஸ்ஸிமாக்களும் குர்ஆன் வசனங்கள், ஸஹீஹான ஹதீகளை மறுப்பவர்களும் ஜமாஆத் தொழுகைக்கு இமாமத்தாக கடமை செய்யும் போது அவர்களை பின்பற்றி தொழலக்கூடாது என்பது பற்றி தெளிவாக இஸ்லாம் மார்க்கம் கூறுகின்றது.


ஆனால் இஸ்லாத்தின் அடிப்கடையை தவிடு பொடியாக்காத நரகத்திற்கு நிரந்தரமாக இட்டுச் செல்லாத காரியங்கள், ஹராம், மக்ரூஹ் போன்ற மார்க்கம் விளக்கி தடை செய்து தண்டிக்க கூடிய குற்றங்களை செய்யக்கூடிய அகீதா - கொள்கை சரியில்லாதவர்கள் ஜமாஆத் தொழுகைக்கு இமாமத்தாக கடமை செய்யும் வழிகேடர்களை பின்பற்றி தொழும் சந்தர்ப்பங்கள் - சூழ்நிலைகள் ஏற்படும் போது அவர்களைப் பின்பற்றி தொழுவதை விட தனித்து தொழுவது அல்லது சத்திய கொள்கை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதுதான் சிறந்ததாகும். என்பதை தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.


மேலும் ஷிர்க் - குப்ர் வழியில் செல்லாத ஆனாலும் அகீதா - கொள்கை சரியில்லாதவர்கள் ஜமாஆத் தொழுகைக்கு இமாமத் செய்யும் போது தொழுகையின் ஷர்த்துக்கள், பர்ளுகளை கவணித்து தொழுவித்தால் அவர்களைப் பின்பற்றி தொழுதால் தொழுகை கூடும், ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படும் போது அகீதா - கொள்கை சரியில்லாத வழிகேடர்கள் பின்னால் மஃமூமாக நின்று தொழுவதை விட தனித்து நின்று தொழுவது அல்லது சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதே சிறந்தது என்று மத்ஹப்புடைய இமாம்கள் கூறியுள்ளார்கள்.


♦ இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: ”(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள், அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும், அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்”.


ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரி 694


♦ உபைதுல்லா இப்னு அதீ கூறினார்கள்: உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) முற்றுகையிடப் பட்டிருந்த போது, நான் அவர்களிடம் சென்று ”நீங்கள் மக்களக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருக்கின்றீர்கள். உங்களின் மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்குக் குழப்பம் விளைவிக்கிறவர். இமாமாகத் தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மனவேதனை அடைகிறோம்” என்று கூறினேன். அதற்குத் தொழுகை, மக்கள் செய்கிற செயல்களில் மிகச் சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும்போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைக்கிறபோத அத்தவறுகளை விட்டும் நீ ஒதுங்கிக் கொள்” என உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) கூறினார்கள்.


நூல்: புகாரி 695


எனவே, மக்களைக் குழப்ப வேண்டும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினைகளை உண்டுபண்ண வேண்டும் என்ற தீய நோக்கை குறிக்கோளாகக் கொண்டு மஸ்ஜிதுல் லிறார் எனும் சமூதாயத்திற்க்கு தீங்கிழைக்கும் போட்டிப் பள்ளிவாசல்களை கட்டி வழிகெட்ட கொள்கைகளை பிரச்சாரம் செய்து செயல்படும் வழிதவறிய வஹாபிகளின் தீய நச்சுப் பிரச்சாரத்திற்குப் பலியாகாமலும் அவர்களின் போட்டிப் பள்ளிவாசல்களை விட்டு வெகு தூரமாகியும் அகீதா - கொள்கை சரியில்லாத வழிகேடர்கள் பின்னால் மஃமூமாக நின்று தொழுவதை விட தனித்து நின்று தொழுவது அல்லது சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதே சிறந்தது என்ற மத்ஹப் இமாம்களின் கருத்துக்களைச் சரியான வழியில் விளங்கி செயல்பட முயல வேண்டும்.


இறுதி காலத்தில் முஸ்லிம்களைக் குழப்பும் தீய சக்திகள் புற்றீசல் போன்று புறப்படுவர் என்று திருத்தூதர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தீர்க்க தரிசனமாகக் கூறியது போன்ற கூட்டம் இன்று பரவலாக நடமாடுகின்றன அவர்களின் இருந்து ஈமானைப் பாதுகாத்து முஃமினாக வாழ்ந்து மரணிக்க கிருபையுள்ள றஹ்மான் எம்மனைவருக்கும் அருள் பாலிப்பானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.