MAIL OF ISLAM

Knowledge & Wisdom




அகில உலகெங்கும் கோலா கலமே இன்பம் பிறக்கின்றதே (நினைத்தே) மனம் குளிரும் இனிதாய்!


குலம் உயர்ந்த அன்னையர் ஆமினா மகிழ்வுடன் ஈன்றனரே !
அருளாய் ஒளி கொண்டு இலங்கிடுமே!


அகில உலகெங்கும் கோலா கலமே இன்பம் பிறக்கின்றதே (நினைத்தே) மனம் குளிரும் இனிதாய்!


அன்பின் உருவாய் இலங்கிடும் நூரே!

அனைத்தும் அந்த ரஹ்மானின் அருளே!


அன்பின் உருவாய் இலங்கிடும் நூரே!

அனைத்தும் அந்த ரஹ்மானின் அருளே!


நாளை மஹ்ஷரில் நாம் ஜெயம் அடைய உலகில் தோன்றிய உத்தம நபியே


ஓர் இறை பாதையை உலகினில் காட்டி ஓ.


ஓர் இறை பாதையை உலகினில் காட்டி


வாழ்வினை சீர் செய்தீர் (நினைத்தே)
மனம் குளிரும் இனிதாய்


அகில உலகெங்கும் கோலா கலமே இன்பம் பிறக்கின்றதே (நினைத்தே) மனம் குளிரும் இனிதாய்!


நெஞ்சம் எங்கும் கருணை வெள்ளம் பொங்கி வழியும் என்னேரமும் பொங்கி வழியும் என்னேரமும்


அந்த விண்ணும் மண்ணும் வாழ்த்துக்கள் கூறி
போற்றிப் புகழ்ந்திடும் அணுதினமும்
போற்றிப் புகழ்ந்திடும் அணுதினமும்


செந்தாமரை மலர்ந்தது நூராய் ஜொலித்த தென
இன்ப கீதம் பாடுவோம்! எனும் இன்ப கீதம் பாடுவோம்!


இறை நேசரின் துணையுடன் இருவுலகெங்கிலும்
இன்பப் பயணம் ஏகிடுவோம்!
நாம் இன்பப் பயணம் ஏகிடுவோம்!


இனி அருளவன் தூதுவர் ஆசியும்
வான் மழைபோலவே
பொழிய துவங்கிடுமே
மழை போலவே பொழிய துவங்கிடுமே!


சுகம் எங்கும் சேர்ந்திடும்
சோபனம் கூறிடும்
சுந்தர சுவனத்தில்
மலர்ந்திடுவோம்
நல் சுந்தர சுவனத்தில் மலர்ந்திடுவோம்(2)


சுகந்தம் கமலும் சுந்தர நபியுடன்
சுகந்தம் கமலும் சுந்தர நபியுடன்
இணைந்து இருப்போமே . (நினைத்தே)
மனம் குளிரும் இனிதாய்


அகில உலகெங்கும் கோலா கலமே இன்பம் பிறக்கின்றதே (நினைத்தே) மனம் குளிரும் இனிதாய்!


குலம்உயர்ந்த அன்னையர் ஆமினா மகிழ்வுடன் ஈன்றனரே !
அருளாய் ஒளி கொண்டு இலங்கிடுமே!


அல்லாஹும்ம ஸல்லி வ ஸல்லிம் வ பாரிக் வஸல்லிம் அலைஹி


By Vajitha Rahman

தமிழ்  - இஸ்லாமிய கவிதைகள் & இலக்கியங்கள் - வாஜிதா ரஹ்மான் கவிதைகள்

 


இதழ் இரண்டும் பாடட்டும்
அகம் மகிழ்ந்து புகழட்டும்
கிழக்கு தொடுத்து மேற்கு வரையும்
உமது புகழ் ஓங்கட்டும்


இதழ் இரண்டும் பாடட்டும்
வசந்த காலம் பிறந்த தென்று உளம்
குளிர்ந்து பாடி நின்றோம் (2)


பேணுகின்ற பேர் அருளின் புதையலே
தாங்கள் இறை அருளை ஏந்தி வந்தீர் உலகிலே
நபியே


இதழ் இரண்டும் பாடட்டும்


வல்ல ரஹ்மான் தம் மலக்குகளும் புகழ் பாடுவார்
என் அடியாரே நபி மீது புகழ் பாடுங்கள்
என்ற வல்லோனின் ஈடில்லா அருள் ஆணையை
எங்கள் சிரம் மீது ஏற்றே உம் புகழ் பாடுவோம்
நபியே


இதழ் இரண்டும் பாடட்டும்


பாவிகளின் பிழை பொறுக்க சிரசை தாழ்த்துவார்
மனம் பொறுத்திடுமோ நபியவரின் சிரசும் தாழ்ந்திட
உம்மத் உம்மத் என்ற ஒரே வார்த்தையை உரைப்பார்
நீர் விரும்பியது கிடைக்குமென்று இறைமொழி பகரும் ஹபீபே
அன்று கரம் பிடித்து எமை அழைத்து கருணை புரிவீர் நபியே


இதழ் இரண்டும் பாடட்டும் 


By Vajitha Rahman


நாம் பிறந்ததின் அர்த்தம் சொல்ல
மனிதருள் மாணிக்கமாய்
மலர்ந்த நபியே எம் நபியே

நாம் வாழ்வது கொஞ்சம்
அந்த வாழ்க்கையின் உண்மை சொல்ல
உயிரில் கலந்து வந்த உறவே


உங்கள் தேன் மொழி தீன் வழி
அது ஓர் வழிப் பாதையே

(நாம் பிறந்ததின்)


மயக்கும் பூ உலகின் மாய வலையை விட்டு
மகிழ்வாய் நாமும் வாழவே
வாழ்வில் நாம் காணும் சுகங்கள் மாறிவிடும்
கோலம் தன்னை உணரவே


தகிக்கும் வெண் தனலில் வீழ்ந்து மாளாமல்
அனைத்து பிடிக்கும் உங்கள் கரங்களே

பாலைவனத்தினது தாகம் தீர்க்கும்
குளிர்ந்த நீரோடை தாங்களே


ஓர் வழியாய் வந்த ஒளியே
அதை உணர்ந்தே வாழம்மா
(நாம் பிறந்ததின்)


கனவில் நாம் காணும் காட்சி அது உண்மை
உணர்வாய் எந்தன் நெஞ்சமே
விழித்து வாழும் இந்த வாழ்க்கை நிலை இல்லை
தெளிவாய் எந்தன் உள்ளமே


மீட்க முடியாத வாழ்க்கை வரமே
அறிந்து உணர்ந்து நீயும் வாழம்மா


மனதில் ஆட்சி செய்யும் மன்னர் மஹ்மூதின்
வாழ்க்கை தனை நீயும் தேடம்மா


உயிரின் உயிராய் கலந்த ஒளியை
உயிரின் மேலாய் உணரம்மா
(நாம் பிறந்ததின்)



By Vajitha Rahman


ஹூ ஹூ ஹூ ஹூ தெய்வீக நபியின் திருப்பார்வை ஒளியே பார்த்தாலே போதும் நம் பாவங்கள் நீங்கும் சிங்கார ஒளியின் ரூபம் சிறப்பான வடிவம்கொண்டு மன்னோனின் நாட்டம் கண்டு மண்ணுக்கு வந்ததன்று தேவாமிர்தம் அருந்தி வந்த மஹ்மூதரை நான் புகழ வார்த்தை தேடுவேன்.


ஹூ ஹூ ஹூ ஹூ மறைவான இறைவன் வெளியான வழியே பார்த்தாலே போதும் நம் பாவங்கள் நீங்கும் அஹதோனின் குணங்கள் யாவும் அழகாக எடுத்து வந்துடு.  


By Vajitha Rahman


சிராஜும் முனீரே ஒளி வீசும் நூரே சிராத் என்னும் நேர்வழி தந்த ஒளிவான நூரே தாங்கள் ஒளி சிந்தும் நூரே (சிராஜும் முனீரே)


ஊன் உடல் உதிரம் யாவும் உம் நேசம் பாய கல்பினில் நிறைந்த ஒளியே சுடர் எங்கும் மேவ ஆ ஆ ஆ எந்தன் உயிரும்ம்ம்ம்ம் எம் உடல் பொருள் தாய் தந்தை யாவும் உமக்கே அற்பணமாகும்.


(சிராஜும் முனீரே ) கரை சேர்க்கும் எம் நாதா கரம் பற்று வா. 


By Vajitha Rahman


நாடிச் செல்வோம் நாமே பாவங்கள் நீங்க பரிசுத்த நபியிடம் நாட்டங்கள் தீர உம் பாதாரம் பணிந்தோம். இன்றே எம் ஆதாரம் தாங்கள் என்றே (2)


பரிசுத்தம் இழந்தோம் பாவங்கள் புரிந்தோம் இறைவழி அடையும் பாதையும் மறந்து (2)


நபியே ........... வேறு யாரு உம்மைப்போல் மீண்டும் மீண்டும் உம் பாதாரம் பணிந்தோம் இன்றே எம் ஆதாரம் தாங்கள் என்றே (2)


நாடிச் செல்வோம் நாமே பாவங்கள் நீங்க. 


By Vajitha Rahman


வரமான வாழ்வே இப்புவி தன்னிலே ஒரு முறையே தான் வாழ்க்கை இம்மண்ணில் இந்த அழியும் இன்பத்தில் வீழாதே இந்த அழியும் இன்பத்தில் வீழாதே .....


மானிடர் காதல் நிலை இல்லை இந்த மானிடர் காதல் நிலை இல்லை மஹ்மூது நபி காதல் மாறாது என்றென்றும் என் மனமே ........


மறைத்திடும் திரைகளாம் மனத் திரை நீக்கி உரைத்திடும் உண்மையை உரைக்கல் ஆக்கிடு மானிடர் காதல் நிலை இல்லை இந்த மானிடர்
 

By Vajitha Rahman


நூரை பொழியும் இரவே நீ நுபுவ்வத் நபி தந்த அருளே நுபுவ்வத் நபி தந்த அருளே (2)


இதயம் தாங்கிய இறைமறை வேதம் அருளை பொழியுது பாராய் (2)


மகத்துவம் பொருந்திய இரவினில் நாமும் (2)


அருளினில் நனைந்து ஆசியை பெறவே சFபாஅத் நபி தந்த இரவே சfபாஅத் நபி தந்த இரவே (நூரை)


ஆயிரம் மாதம் வணக்கத்தை விடவும் ஒரு இரவை சிறப்பித்து தந்தே (2) புனிதம் மிகுந்த ரமலான் பிறையில் லைலத்துல் கதிரென்னும் ஒற்றை.


By Vajitha Rahman


மாணிக்கப்பூர் பதி மஹ்மூதர் நபி வழி நாகூரில் அரசாளும் காதிர் வலி பொங்கும் இறை ஞானம் எங்கும் அருள் தீபம் ஏழைகள் குறை நீக்க வந்தீர்களே இந்த ஏழைகள் இருள் போக்க வந்தீர்களே (2)

சீடர்கள் புடை சூழ இல்வாழ்வு தனை நீக்கி தவ வாழ்வை தேர்ந்தெடுத்து வனம் புகுந்தீர் மாபெரும் தவத்தாலே மன்னோனும் உமைவாழ்த்தி மகிழ்வுடன அழைத்தானே புகழ்க்கரசே (ஷாஹுல் ஹமீது ) மண்ணில் மறைந்த


By Vajitha Rahman


கண்ணுறங்கும் வேளையிலும் கல்புறங்கா நபியே கண்ணான கண்மணிக்கு ஈடு இல்லை உலகில் சொல்லாலும் செயலாலும் எமைக் காக்க வந்த மறைபோற்றும் மாமணிக்கு ஈடு இணை உண்டோ தோலோடு தோழர் போல் குறை நீக்க வந்த மா புனிதர் மகிமைதனை என்னவென்று சொல்வேன் மெல்ல மெல்ல மனித இனத்தின் மடமைகளை நீக்கி அள்ள அள்ள தீன் சுவையை அள்ளி தந்த நபியே உயிருக்கும் மேலாக வளர்கின்ற நேசம் குன்றாமல் குறையாமல் நிலைத்திடும்.


By Vajitha Rahman


பத்திரப் பொன் ஏட்டினிலே பதித்து கொண்ட பத்ரியரே பாங்குடனே நபி வழியில் பணிவுடனே உயிர் நீத்தீர் (2)


காலமெல்லாம் உம் புகழை கல்பினிலே ஏந்தி நின்றே (2) கனிவுடனே போற்றுதற்க்கே உரமானீர் தீனோரே (2)


உரமானீர் பத்ரியரே பத்திர பொன் ஏட்டினிலே அன்னை என்றும் தந்தை என்றும் உறவினரே ஆனாலும் அண்ணன் என்றும் தமையன் என்றும் உறவினரே ஆனாலும் இறை மொழிக்கு மாறாகஇல்லை உறவே என்று (2)


By Vajitha Rahman


கர்பலா களம் அடைந்தீர் அருள் ஒளிவே வீரர் அலி பாத்திமாவின் குலக் கொழுந்தே (2)


மா மன்னர் மடியில் தவழ்ந்த ஏந்தலரே மாறாத நேசம் கொண்ட காதலரே மறுத்தோர்க்கும் பரிவு காட்டும் மனமல்லவோ


இன்னுயிரை ஈந்து தீனை நிலைக்கச் செய்தீர் கர்பலா களம் அடைந்தீர் அருள் ஒளிவே வீரர் அலி பாத்திமாவின் குலக் கொழுந்தே (2 )


ஆரறிவை மயக்கும் உங்கள் அழ கல்லவோ அண்ணல் மஹ்மூது தந்த ஒளியே!


By Vajitha Rahman


ஒளியில் பிரிந்த ஒளியானவரே தவத்தால் உயர்ந்த தவ மாமணியே அறிந்தீர் ஞானமதை உயர்ந்தீர் உன்னதமாய் அடைந்தீர் பேரருளை


யாரும் அடையா உன்னத நிலையை அடைந்தீர் தாங்களன்றோ பேதம் இல்லையன்றோ உண்மை இதுவன்றோ தீன் உயிர் பெற்றிட வந்த குருவே (முஹ்யத்தீன்)


அகமியப் பாதையை அறிவிக்கும் மணியே உண்மை இதுவன்றோ உணர்வும் அதுவன்றோ என்றும் நிலைக்குமன்றோ ஐம்புலன் அறிவையும் அடக்கி ஒடுக்கி அகத்தை.


By Vajitha Rahman