MAIL OF ISLAM

Knowledge & Wisdom



உம்மதே முஸ்தபா வின் மகத்துவம் - அல் குர்ஆன்

by Azeemuddin Qadiri


வ கஸாலிக ஜ'அல்ன கும் உம்மதௌ வ சஅதல் லிதகுனு ஷுஹதா'அ அலன்னாசி வயகுனர் ரசூலு அலைக்கும் ஷஹிதா.

அல் குர்ஆன், அத்தியாயம் - அல் பகரா, வசனம் - 143


(விசுவாசிகளே) மேலும், அவ்வாறே நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதர்க்காகவும், நம்முடைய (தூதர்) ரசூல் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம்....



வெளிப்படையில் இந்த இறைவசனம் உம்மதே முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் மகத்துவத்தினை பற்றி விவரிக்கின்றது. ஆனால் இந்த உம்மத்திற்கு எவ்வாறு இந்த மகத்துவம் கிடைத்தது என்றால் அது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் பொருட்டாலும் அவர்களின் உண்மையான அடிமைகளினாலும் கிடைக்கப்பெற்றது.


இந்த இறைவசனத்தில் இன்னும் சில விளக்கங்கள் காணப்படுகின்றன. கியாம நாளின் போது மற்ற எல்லா நபி மார்களின் உம்மதுகளும்.... அல்லாஹ்வின் திருச்சன்னிதானத்தில் கூறுவார்கள். "எங்கள் இறைவனே எந்த ஒரு நபியும் எங்களிடத்தில் வரவும் இல்லை, உன்னுடைய கட்டளைகளை எங்களுக்கு சொல்லிக்காட்டவும் இல்லை".


இந்த நேரத்தில் மற்ற எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் கட்டளையிடுவான்.


"நீங்கள் உங்களுடைய "தாவாஹ்" பணியில் எவரையாவது சாட்சியாளராக கொண்டுவாருங்கள்"


அதற்க்கு மற்ற எல்லா நபிமார்களும் உம்மதே முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் -ல் உள்ளவர்களை சாட்சியாளர்களாக இறைவனிடம் சமர்ப்பிப்பார்கள். பின்பு "உம்மதே முஹம்மதியா" சாட்சியம் கூறுவார்கள் "இறைவனே, நபிமார்கள் உண்மையாளர்கள், மற்றும் இந்த காஃபிர்கள் பொய்யர்கள்.மேலும் உன்னுடைய நபிமார்கள் உன்னுடைய "மார்கதினை" எத்தி வைத்தார்கள், இவர்களோ உன்னுடைய "மார்கதினை" நிராகரித்தார்கள்.


அப்போது காஃபிர்கள் கூறுவார்கள், நீங்கள் எங்களுடைய காலங்களில் வாழ்தவர்கள் அல்ல. எங்களுடைய காலத்திற்கு பின் பல வருடங்களுக்கு பிறகு நீங்கள் பிறந்தவர்கள்.


மேலும் அவர்கள் கூறுவார்கள் "நீங்கள் எங்களை காணமல் எவ்வாறு சாட்சி அளிக்கின்றீர்கள்? அப்போது முஸ்லிம்கள் கூறுவார்கள் நாங்கள் உங்களை கண்டவர் சொல்ல நாங்கள் கேட்டுள்ளோம். அதாவது எங்களுடைய ரஸுல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.


முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய உம்மத் கூறுவதினை உறுதி செய்ய "முஹம்மதுர் ரசூல்லுல்லாஹ்" வருகை புரிவார்கள்.


இறைவனிடம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுவார்கள், "நான் என்னுடைய உம்மத்திற்கு கூறி இருந்தேன் நம்முடைய காலத்திற்கு முன் சென்ற காலத்தில் நபிமார்கள் இஸ்லாத்தினை தற் தன் கூட்டத்தார்களுக்கு இஸ்லாத்தினை ஏற்றி வைத்தார்கள். இந்த சாட்சியை கொண்டு மற்ற அம்பியாக்கள் அமைதியடைவார்கள்.


இந்த சம்பவத்தினை தான் நாம் மேற்கண்ட ஆயத்தில் கூறப்பட்டு இருந்தது. சில குறிப்பிடும் படியான விஷயங்களை இதிலிருந்து பெற்று நாம் தெளிவடையலாம்.


நம்முடைய உம்மத் (முஸ்லிம்கள்) எல்லா நபிமார்களுக்கும் சாட்சியாளர் ஆவர்கள். முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தின் சாட்சியினால் எல்லா நபிமார்களுக்கும் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் உம்மத் மீது "முஹப்பத்" இருக்கும்.


பின்பு முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "முன்" மற்றும் "பின்" சென்ற எல்லா விஷயங்களை பற்றியும் அறிதவராகவும், தன்னுடைய கண்களினால் பார்த்தவராகவும், கேட்பராகவும் உள்ளார்கள். அதனால் தான் நாம் சாட்சியாளராக இருக்கின்றோம்.


முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய உம்மத்தின் எல்லா நிலைகளையும், ஒவ்வொரு மனிதரின் நிலைகளையும், ஒவ்வொரு வினாடி நேரத்தின் எல்லா செயல்களையும் அறிந்தவர்களாக இருக்கின்றார்கள். ஏனென்றால் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இரு சாட்சியங்கள் இருக்கும். ஒன்று முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளுதலும், மனிதர்கலுக்கு சாட்சியின் அவசியமும் இருக்கும்.


சில குறிப்பிடும் படியான விஷயங்களை இதிலிருந்து பெற்று நாம் தெளிவடையலாம்.


இப்போது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வாறு கண்டார்கள் என்ற கேள்வி எழுந்தால், அதற்குரிய விடையானது "மெஹ்ராஜ்" என்ற விண்ணுலக யாத்திரை முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பயணித்து இருந்தார்கள். அதில் அவர்கள் சொர்க்கம், நரகம், அல்லாஹ்வினுடைய குணாதிசயங்கள், பண்புகள் என எல்லாவற்றிக்கும் சாட்சியாளர் ஆவர்கள் என்றால் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனைத்துமே கண்டுள்ளார்கள்.


மேற்கண்டபடி முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு முஸ்லிமின் ஈமானை பற்றிய சாட்சியம் அளித்தால் அவர் சொர்கவாதி. சையதினா சித்தீக் அல் அக்பர், சையதினா உமர் அல் பாரூக் ரழியள்ளஹு அன்ஹுமா அவர்களின் ஈமானிற்கு அல்லாஹ் சாட்சியம் அளித்துள்ளான். இந்த இரு ஸஹாபிகளை யார் நிராகிக்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ் வை நிராகரிப்பவர் ஆவர்.


இந்த இறைவசனதிளிருந்து இன்னொரும் தெளிவு படுகின்றது. ஒருவர் முஸ்லிம்களின் மத்தியில் நல்லவாராக இருந்து அவர்கள் சாட்சியம் அளித்தால் அல்லாஹ்வின் சந்நிதானத்திலும் அவர் நல்லவரே. அதே தீயவராக முஸ்லிம்கள் மத்தியில் இருந்தால் அந்த நபர் அல்லாஹ்வின் சந்நிதாதில் தீயவரே. அவர் முன்பே இறந்து போனவராக இருந்தாலும் சரியே.


மிஷ்காத் பாப் அல் மஷி பாப் அல் ஜனாஸா.... ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஒரு இறந்து போனவரின் ஜனாஸா நாயகம் அவர்களின் முன் கடந்து சென்றது முஸ்லிம்கள் இறந்து போன அந்த நபரை பற்றி புகழ்த்து பேசினார்கள். முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது கூறினார்கள் இறந்து போன அந்த நபருக்கு சொர்க்கம் வாஜிப் ஆகிவிட்டது.


இன்னொரு ஜனாஸா இதே போல் செல்லும் போது மக்கள் அந்த நபரை பற்றி குறை பேசினார்கள், அதனால் அந்த இறந்து போன நபருக்கு நரகம் வாஜிப் ஆகிவிட்டது.


மேலும் இப்புவியில் முஸ்லிம்கள் ஒருவரை அல்லாஹ் வின் நேசர் என்று பொதுவாக விழித்தார்கள் என்றால் அவர் அல்லாஹ்வின் நேசரே.



உர்து மூலம்:

ஹகீமுல் உம்மத் முப்தி அஹ்மத் யார் காஃன் நயமி பதாயுனி அலைஹி ரஹ்மா

ஷான் எ ஹபிபுர் ரஹ்மான் மின் ஆயத்தில் குர் ஆன் என்ற நூலிலிருந்து