MAIL OF ISLAM

Knowledge & Wisdomவஹாபிகள் என்றால் யார் ?அரேபியாவில் நஜ்து மாகாணம், (இன்று அதன் பெயர் ரியாத்) அங்கு வசிப்பவர்களுக்கு நஜ்தியர் என்று பெயர்.


நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவிய அந்த நஜ்து வாசிகளுக்கு அவர்களின் உள்ளத்தில் குடிக்கொண்டிருந்த பொறாமை குணம் சற்றும் மாறாமல் அது நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டே இருந்தது.


நபியுல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின்

சமூகம் வந்து உபதேசங்களை கேட்கும் இவர்கள் வெளியில் சென்றதும் அதற்கு நேர் மாற்றமான நச்சு வார்த்தைகளை பேசுவார்கள். குதர்க்க வாதம் புரிவார்கள். இரவெல்லாம் இஸ்லாத்துக்கு எதிராக சதியாலோசனை செய்துகொண்டு இருப்பார்கள்.


இதற்கு காரணம் அந்த தீயவர்களின் உள்ளத்தில் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது இருந்த பொறாமை. இவர்களின் நிலையை தெரிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் இவர்களுக்கு உபதேச தோரணையிலும், கண்டித்தும் பல முறை சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார்கள். ஆனால் அது இந்த தீயவர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது.


இவர்களை பற்றி தான் அல்லாஹ் தனது திருமறையில் நயவஞ்சகர்கள் (முனாபிகீன்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பதை திருமறையில் பல இடங்களில் காணலாம். இவர்களின் போக்கு பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு வேதனை ஏற்படுவதுண்டு.


ஷைத்தான் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களிடம் வரும் போது இந்த நஜ்தியர்களின் உருவத்தில் தான் வருவான். அவனைக் கண்டதும் ஷெய்குன் நஜ்தி (நஜ்தி பெரியார்) வருகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறுவார்கள். இதை அண்மையில் இருக்கும் ஸஹாபாக்கள் இவன் ஷைத்தான் என்று புரிந்து கொள்வார்கள்.


ஒரு சமயம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்கள் முபாரக்கான கரங்களை ஏந்தி " யா அல்லாஹ்! எங்கள் ஷாம் தேசத்துக்கும் (சிரியா) பரக்கத்து செய்வாயாக! யா அல்லாஹ்! எங்கள் யெமன் தேசத்திற்கு பரக்கத்து செய்வாயாக!" என்று துஆ கேட்டார்கள்.


அப்பொழுது பக்கத்திலிருந்த சஹாபாக்கள், " யா ரசூலல்லாஹ்! எங்களுடைய நஜ்து தேசத்துக்கும்" என்றார்கள். மறுமுறையும் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் கூறிய படியே ஷாம், யெமன் இரு தேசங்களுக்காகவும் துஆ செய்தார்கள். மீண்டும் நஜ்தியர்கள் தங்கள் தேசத்துக்காக துஆ கேட்கும் படி கூறவே, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மூன்றாம் முறையாக " அங்கு தான் அதிர்ச்சிகளும், கொந்தளிப்புகளும், பித்னாக்களும் உண்டாகும். ஷைத்தானின் கொம்பு வெளியாகும். அங்குதான் ஷைத்தானுடைய கூட்டங்கள் வெளிக்கிளம்பும்" என்று கூறினார்கள். (ஸஹிஹ் புகாரி)


நஜ்தியர்களின் முனாபிக் (நயவஞ்சக) செயல்கள் காரணமாக அடிக்கடி பித்னாக்கள் வேகத்துடன் ஏற்படுவதும், அது பலம் இழப்பதுமாக இருந்தது.


நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்கு பின் 225 வருடங்கள் வரை இஸ்லாமிய உலகம் நிம்மதியோடு இருந்தது. இதற்கிடையில் நஜ்தியர்களால் ஏற்படும் சிறு சிறு குழப்பங்களை எல்லாம் அப்பொழுது வாழ்ந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களாலும் ஆட்சியாளர்களாலும் அப்போதைக்கப்போது அடக்கி ஒடுக்கப்பட்டன. பின்னர்,


அப்பொழுது தான் நஜ்தில் இப்னு தைமியா என்பவன் வெளியாகி தீனில் தலையிட்டு நூதன கொள்கைகளை உண்டு பண்ணி, நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் ஷரிஅத்திற்கு விரோதமான மஸாயீல்களை திரட்டி, 'ஸிராத்தல் முஸ்தகீம்' என்ற நூலை வெளியிட்டு புதிய கிளர்ச்சியை உருவாக்கினான். இந்த நூலில் அதிகமாக நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அஹ்லுல் பைத்துகள், சஹாபாக்கள், இமாம்கள், அவ்லியாக்கள் முதலியோர்களை இழிவுச் சொற்களால் நிந்தித்து எழுதி இருக்கிறான். இதை அவனுடைய சகோதரர்களும், உறவினர்களும் கண்டித்து, மறுத்தும் இருக்கிறார்கள்.


அது மற்றும் அன்றி அப்போது வாழ்ந்த தலை சிறந்த சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்களான ஷெய்குல் இமாம் ஷைக் முஹம்மது ஃபர்ஸ் , குதுவதுல் முஹத்திதீன் ஷைக் இப்னு ஹஜர் மக்கி, செய்யத் அஹ்மத் கபீர் பாரியி இன்னும் மக்காவின் முப்தியா இருந்த அல்லாமா செய்யத் அஹ்மத் தஹ்லான் மக்கி ஆகிய மார்க்க மேதைகள் இந்த இப்னு தைமியாவை லஃனத்துச் செய்து காஃபிர் என்று மார்க்க தீர்ப்பு (ஃபத்வா) வெளியிட்டு இருக்கிறார்கள்.


ஆனாலும் இவனுடைய சூழ்ச்சியை அறியாமல் சில அறிவீனர்கள் இவனை பின்பற்றினார்கள். இவனுடைய அட்டூழியம் பொறுக்க முடியாமல் எகிப்து அரசாங்கம் பல முறை இவனை சிறை காவலில் வைத்தது. அப்போதும் இவன் அடங்கவில்லை. இறுதியாக சிரியா அரசாங்கம் இவனை கைது செய்து திமிஷ்க் நகர் சிறை கூடத்தில் சாகும் வரை சிறையில் வைத்தது. அங்கேயே இவன் இறந்தான்.


இப்னு தைமியாவின் பிரதிநிதிகளில் பலர் காலப்போக்கில் ஃபித்னாக்கள் கிளர்ச்சிகள் செய்வதும் எதிர்ப்பின் காரணமாக கேவலப்பட்டு அது மறைவதுமாக இருந்தது.


ஏறத்தாள 600 வருடங்களுக்கு பின் நஜ்தை சார்ந்த தர்இய்யா என்ற ஊரில் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் பிறந்தான். இவன் தலையெடுத்து இப்னு தைமியாவுடைய கொள்கைகளைப் பின்பற்றி அதற்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து புதியதோர் மத்ஹபை உண்டாக்க முற்பட்டு இப்னு தைமியா எழுதிய ஸிராத்தல் முஸ்தகீம் என்ற நூலை விரிவு படுத்தி அதற்கு மிருது கொடுத்து ' கிதாபுத் தவ்ஹீத்' என்ற பெயரால் வெளியிட்டான்.


இந்த சந்தர்ப்பத்தில், துருக்கி அரசர் சுல்தான் அப்துல் ஹமீத் கான் காலமானார். பதவியின் காரணமாக அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. துருக்கியின் உதவியை பெற்று கொண்டிருந்த பக்கத்து அரசர்களும் பலம் இழந்தார்கள். அது ஹிஜாஸையும் தாக்கியது. இதை தக்க தருணமாக கொண்டு இப்னு வஹ்ஹாப் நஜ்தி ஒரு படையை திரட்டிகொண்டான்.


இந்த படையின் தலைவனாக ஸுஊத் என்பவனை நியமித்தான். இவன் ஹஜ்ஜுக்கு போவதாக பாசாங்கு செய்து பெரும் படையுடன் புனித மக்காவுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடி ஆண், பெண், வயோதிபர்கள், வாலிபர்கள், குழந்தைகள் என்று பாராமல் கொலை செய்தான். அந்த மக்காவாசிகள் உயிர் தப்ப கார்மானம் தேடி ஹரம் ஷரீபுக்குள் நுழைந்தார்கள். அப்பொழுதும் அந்த கயவர்கள் அந்த மக்களை உயிரோடு விடவில்லை. ஞாபகார்த்தமான மஸ்ஜிதுகளும், கப்ருகளும் தாக்கப்பட்டன. மக்காவில் புரிந்த அட்டூழியம் போலவே மதீனா முனவ்வராவிலும் அந்த கயவர்கள் கொஞ்சமும் இரக்கமின்றி முஸ்லிம்களை எல்லாம் வெட்டி வீழ்த்தினார்கள்.


அப்போது அங்கு இருந்த செய்யதுனா அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதுனா உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு), செய்யதா ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) ஆகியவர்களுடைய மக்பராக்களும் வீழ்த்தப்பட்டது. ஸலவாத்து நூல்கள் ஃபிக்ஹு கிதாபுகள் முதலியவை எரிக்கப்பட்டன. ஜித்தா, தாயிப், மக்கா, மதினா, கர்பலா ஆகியவை இந்த கொடுமைகளுக்கு உட்பட்டது.


இந்த அநியாயக்காரர்களின் அட்டூழியம் பெருகி கடைசியாக அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் கப்ரு ஷரீஃபை தரைமட்டமாக்க முற்பட்டபோது, அந்த சில ஷைத்தான்கள் அதிசயமாக செத்து மடிந்தார்கள். இவர்கள் இந்தளவுக்கு காட்டுமிராண்டித்தனமாக அப்பாவி மக்களை கொல்லுவதற்க்கு காரணம் அங்கு வாழ்ந்த மக்கள் சுன்னத் வல் ஜமாஅத்தாக இருந்ததே. முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியுடைய மத்ஹப்பின் பிரகாரம் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் முஷ்ரிக்குகள், பித்அத்துக்காரர்கள் என்று அவன் நினைத்ததே.


அந்த சமயம் உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள உலமாக்கள், முஃப்திகள் இப்னு வஹ்ஹாப் நஜ்தியின் கொள்கை முற்றும் முழுதாக தவறு என்றும் அதை கடுமையாக ஆட்சேபித்து தக்க ஆதார சான்றுகளுடன் அவரை லஃனத்து செய்து குப்ஃபார் (இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவர்) எனக் தீர்ப்புக்கூறி பல ஃபத்வா கிதாபுகள் வெளியிட்டனர்.


இறுதியாக இந்த இப்னு வஹ்ஹாப் நஜ்தி, யெமன் நாட்டில் ஒரு தக்வாவுடைய சுன்னத் வல் ஐமாஅத் பெரியாரோடு தன் மத்ஹபை பற்றி தர்க்க வாதம் புரிந்து இறுதியில் படுதோல்வியடைந்து அங்கேயே அகால மரணம் ஆனான். (இவனது அதிர்ச்சிக்குரிய அகால மரணம் பற்றிய விபரம் ஃபுதூஹாதுல் மகிய்யா என்ற நூலிலும் மஙானி கிதாபிலும் காணலாம்)நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் முன் அறிவிப்பின்பட, நஜ்தில் ஷைத்தானின் கொம்பாக தோன்றி ஃபித்னாக்களையும், குழப்பங்களையும் உருவாக்கியவன்தான் இந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி.


இவனை பின்பற்றி , இவனது மத்ஹபை ஏற்று, இவனது சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தலைசாய்த்து நடப்பவர்களையே "வஹாபிகள்" என்று சொல்லப்படும்.