MAIL OF ISLAM

Knowledge & Wisdom வஹாபிகளின் கொள்கைகள்


* அல்லாஹுதஆலா பொய் சொல்லலாம் (மும்கானுல் கிதுபு) என்று அகீதா நிர்ணயம் செய்தல்.


* அல்லாஹுடைய சிபத்துகள் இஷ்டத்தை சேர்ந்ததும் புதிதுமாகும்.


* அல்லாஹ்வுக்கு காலம் இடம் திசை இவைகள் உண்டு.


* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு பின் வேறு நபி வரலாம். அவ்விதம் வந்தால், 'காத்தமுன் நபியீன்' என்பதற்கு மாற்றமாகாது.


* தொழுகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஞாபகம், உருவம் மனதில் வருவது, மிருங்கங்களுடைய ஞாபகம் உருவம் வருவதை பார்க்கிலும் மிக மோசமானதாகும்.


* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மௌத்தாகி மண்ணோடு மண்ணாகி விட்டார்கள்.


* 'ரஹ்மத்துலில் ஆலமீன்' என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுக்கு மாத்திரம் சொந்தமான ஸிபத்து அல்ல. அதை மற்றவர்களுக்கும் சொல்லலாம்.


* சூனியக்காரர்களுடைய சூனியம் நபிமார்களுடைய முஃஜிஸாத்துகளை விட அதிக சக்தி வாய்ந்ததாகும்.


* அல்லாஹ்வுக்கு (இல்முல் கைப்) மறைவான சங்கதியை அறியும் ஞானம் இல்லை. ஆனால், எப்பொழுது விரும்புகின்றானோ அப்பொழுது அறிய முடியும்.


* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஷபாஅத்து செய்வார்கள் என்று யாராவது நம்புவான் என்றால், அவன் அசல் முஷ்ரிக்காகவும் , மடையனாகவும் ஆவான்.


* அல்லாஹ்வுக்கு கைகள் உண்டு. அவன் அர்ஷின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.


* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களுடைய ஸியாரத்தை நோக்கமாகக் கொண்டு மதீனா முனவ்வரா செல்வோர் எவரும், (ஹாஜிகள் கூட) முற்தத்துகளாகி விடுவர். அவர்களை கொலை செய்வதும், அவர்களுடைய உடமைகளை கொள்ளையடிப்பது ஹலால்.


* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 'இல்முல் கைப்' என்ற மறைவான ஞானம் ஒரு போதும் இல்லை.


* நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஒரு தபால்காரரைப் போன்றவர்கள்தான். அவர்கள் இஸ்லாத்தை போதித்தது உண்மையே ஆனால், இப்போது அவர்கள் இறந்து விட்டதால் அவர்களைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.


* பிக்ஹு சட்டங்கள் அதாவது மஸாயில்களைத் தெரிய வேண்டியதில்லை.


* எவன் ரஸுலுல்லாஹ் என்று சொல்வானோ அவன் காபிர்.


அந்த இயக்கத்தின் தலைவன் எழுதிய 'கிதாபுத் தௌஹீத்' என்ற சிறிய நூலை காலப் போக்கில் அவருடைய பிரநிதிகளும், ஸஊதி அரசாங்கமும் விரிவுப்படுத்தி பலவித புதுப்புது கருத்துக்களை புகுத்திக் கொண்டே இருக்கின்றனர். கண்டதெல்லாம் ஷிர்க்கு என்ற மனக்குழப்பம் அவர்களுக்கு ஏற்பட்டு கடைசியாக பெற்றோருக்கும் பெரியார்களுக்கும் எழுந்து நின்று மரியாதை செய்வதும் கூட ஷிர்க் என்று சொல்லுமளவுக்கு இவர்களது கோணல் புத்தி சென்றுவிட்டது.


தற்போது வஹாபியத்தின் முஸீபத்து மிக பயங்கரமாக தலை தூக்கி இருக்கிறது. இதற்கு காரணம்: நஜ்துக்காரர்களின் எண்ணைப் பணத்தில் ஒரு பகுதியும், ஒரு தனி இலாகாவும் உலகம் முழுதும் இதற்காக செயல்பட்டு வருகிறது.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், அன்னவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களையும் மௌலானா, செய்யதுனா என்று மரியாதையாக அழைப்பதை ஆட்சேபிக்கும் இவர்கள், தமது நாட்டின் மன்னருக்கும் அமைச்சர்களுக்கும் 'மவ்லாய ஜலாலத்துல் மலிகுல் முஅல்லம்' என்றும் 'உஸ்தாது ஷைகு' என்றும் அவர்களின் பெயருக்கு முன் பட்டங்களை கூசாமல் சேர்த்து கூறுவார்கள்.


இந்த கொள்கையின் அடிப்படையில்தான் புது புது பெயர்களை புனைந்து இந்தியாவிலும் இலங்கையிலும் இயக்கங்கள் தோன்றி முஸ்லிம்களை வழி தவறச் செய்வதில் முனைத்துள்ளனர். இவர்களின் சூழ்ச்சி தெரியாமல் அப்பாவி மக்கள் இவர்களின் மாய பேச்சில் மயங்கி தங்களின் ஈமானை பறிகொடுத்து பெரும் வழிகேட்டில் வீழ்ந்து இருக்கிறார்கள்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

" கடைசி காலத்தில் பொய்யர்களும், ஏமாற்றுக்காரர்களும் வருவார்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் கேட்டிராத ஹதீஸ்களை எல்லாம் உங்களிடத்தில் ஓதி காட்டுவார்கள். முஸ்லிம்களே! நீங்கள் அவர்களை விட்டும் தூரமாகி இருங்கள். அவர்களை உங்களிடம் வரவிடாதீர்கள். அப்படி இருப்பீர்களானால் அவர்கள் உங்களை வழி கெடுக்கவோ உங்களை பித்னாவில் ஆழ்த்தவோ முடியாது." (முஸ்லிம், மிஷ்காத்)


எனவே சகோதரர்களே! இறைவனது கட்டளைக்கும், நமது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அறிவிப்பிற்கும் ஏற்ப நாம் சுன்னத் வல் ஜமாஅத் பெரியார்களின் சொல், செயலை பின்பற்றுதல் அவசியமாகும். 


நாம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும், கண்ணியமிக்க புண்ணிய ஸஹாபாக்களையும், பெரியார்களையும் போற்றி பின்பற்றி நேசித்து நேர்வழியை அடைவோமாக.