MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தன்னை தானே அறிவது உண்மையான அறிதல்

​ 

தன்னைத்தானே அறிவது உண்மையான அறிதல். அதன் மூலம் மனிதன் இறைவனை அடைந்து கொள்வான். அதை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தன்னை அறிதல்


​​தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.

நீ யார்?


​​நாம் யார்? மலக்கா? மிருகமா? ஷெய்த்தானா? எமது நிலை என்ன? என்பதை அறிந்துக்கொள்ள அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.

அஸ்மா உல் ஹுஸ்னாவின் ரகசியங்கள்

எழுதியவர்:  அஸீஸ் மரைக்கா காதிரி


குணமோ குறிப்போ அற்ற மூலத்தின் (தாத்தின்) குணமும் குறிப்பும் உள்ள கோலத்தின் (சிபத்தின்) இயல்புகளை (அஸ்மாக்களை) கவனிக்கும் பட்சத்தில் இறைவனுடைய திரு நாமங்கள் – 99 ஆகும்.


இந்த 99 எதார்த்த இயல்புகளும் (அஸ்மாக்களும்) மனிதர்களில் பிரதிபலிக்கும்.


​பிறக்கும் ஒவ்வொரு மனிதரும் இந்த 99 அஸ்மாக்களில் ஏதாவது ஒரு அஸ்மாவின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பார்.


ஒரு மனிதனிடம் எல்லா இயல்புகளுமே காணப்பட்டாலும் அவன் எந்த இயல்பின் ஆதிக்கத்தில் இருக்கிறானோ அந்த இயல்பே அவனிடம் மேலோங்கி நிற்கும்.

உதாரணமாக ஒருவன் மன்னிக்ககூடியவன் என்ற இயல்பின் ஆதிக்கத்தில் பிறந்திருந்தால் அவன் யாரையும் பழிவாங்க மாட்டான். அதேபோல் ஒருவன் பழிவாங்குகிறவன் என்ற இயல்பின் ஆதிக்கத்தில் பிறந்திருந்தால் அவன் யாரையும் மன்னிக்க மாட்டான். இதுவே மனிதர்களின் எதார்த்த இயல்புகளாகும்.

இறைவனுடைய இந்த 99 திருநாமங்களும் (இயல்புகளும்) மனிதர்களிடையே பிரதிபலிக்கிறதே தவிர இறைவன் மனிதர்களலவில் இறங்கி விடுவதல்ல.

இந்த எதார்த்த இயல்புகள் ஒரு புறமிருக்க, மனிதர்கள் மன இச்சையின் போக்கில் வாழ்ந்து தீய இயல்புகளை தானே தேடிக்கொண்டு வாழ்வதால் எதார்த்த இயல்புகள் மங்கி இச்சையின் இயல்புகள் மேலோங்கி விடுகிறது.

தீய இயல்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கீழான படைப்புகள் உள்ளன. அந்த படைப்பினங்களில் ஒன்றை தனது தீய இயல்புக்கு ஏற்ற ஒன்றை இங்கேயே தேடி கொண்டு அவர்கள் தேடிய ஒன்றாக மறுமையில் எழுப்பப்படுகிறார்கள்.

உடலும் உயிரும்

​ 

மனிதனைவிட அற்புதமான ஒரு படைப்பு எதுவுமில்லை. தன்னை முழுமையாக விளங்குவதே இந்த உலகிற்கு நாம் வந்த நோக்கம். தன்னை அறிவது கடமை பர்லு. அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.