MAIL OF ISLAM
™
Knowledge & Wisdom
நீ யார்?
அறிவுலக மேதை, ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு
தொகுப்பு: அஹ்மத் பிலால்
நீ எங்கிருந்து வந்தாய்? இங்கே சில காலம் நீ தங்கியிருப்பதன் நோக்கம் யாது?
உன் உண்மையான மகிழ்வும், துயரமும் எதில் அடங்கியுள்ளன? உன் பண்புகளில் சில மிருகங்களிடம் உள்ளவை. மற்றும் சில மலக்குகளிடம் உள்ளவை.
பண்புகளில் எவை தற்செயலானவை, எவை இன்றியமையாதவை என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். இவற்றை நீ அறிந்துகொள்ளாத வரை, உன் உண்மையான இன்பம் எங்குள்ளது என்பதை நீ கண்டுகொள்ள மாட்டாய்.
உண்பதும், தூங்குவதும், கலவி புரிவதும், சண்டையிடுவதும் மிருகங்களின் தொழில்கள். நீயும் ஒரு மிருகமாயின், இவ்விஷயங்களிலேயே ஈடுபட்டுக்கொண்டிரு.
விஷமம் செய்வதும், ஏமாற்றுவதும், பித்தலாட்டம் செய்வதும் ஷைத்தான்களின் வேலை. நீயும் அவர்களை சார்ந்தவனாயின், இக்காரியங்களில் உன்னை மூழ்கடித்துக்கொள்.
இறைவனின் சாத்மீக சௌந்தரியத்தை தீர்மானிப்பதும், மிருக இயல்புகளே இல்லாதிருப்பதும், மலக்குகளின் இயல்பாகும். நீயும் இத்தகைய மலக்குமார்களின் இயல்பை உடையவனாயின் உன் மூலஸ்தானம் பற்றி அறியும் முயற்சியில் ஈடுபடு.
இறைவனை அறிந்து தியானிக்கவும், ஆசை, விருப்பம், கோபம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடவும் அதுவே இந்த வழியாகும்.
இச்சை, கோபமாகிய இரண்டுவகை மிருக இயல்போடு நீ படைக்கப்பட்ட நோக்கம் யாது? அவை உன்னை வெற்றிகொண்டு அவை உன்னை கைதியாக நடத்தவா? அல்லது நீ அவற்றை ஒடுக்கி உன் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அவற்றுள் ஒன்றை உன் வாகனமாகவும்,
மற்றதை உன் ஆயுதமாகவும் ஆக்கிக்கொள்வதற்காகவா? என்பதையும் நீ தேர்ந்தெடுக்க வேண்டும்.
வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று, உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
மனிதர்களாகிய நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்பதை அறிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
தன்னை அறிவதற்கு முதல் படி என்ன? என்பதை அறிய இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய இந்த சிறு கட்டுரையை வாசியுங்கள்.