MAIL OF ISLAM

Knowledge & Wisdom



நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்

​ஆக்கம்:  மௌலவீ  KRM. ஸஹ்லான் (றப்பானீ) BBA (Hons)


​வஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்ளமை அற்றது என்பதை மறுப்பவர்கள் இதை சிந்தித்துப் பாருங்கள்.

அல்லாஹ் தஆலாவின் தன்மைகள், திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்தபின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை.

அவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான்.

{وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ (4)} [الحديد: 4]

நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான். (57-04) என்று கூறுகின்றான்.

இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்புகளுடன் “உடன் இருத்தல்” எனும் தன்மை அல்லாஹ்வுக்கு புதிதாக ஏற்பட்ட ஒரு தன்மையாக இருக்க முடியாது. அது அல்லாஹ்வின் பூர்வீகமான தன்மையாகவே இருக்க வேண்டும். படைப்புகளை படைத்தபின் அவைகளுடன் அல்லாஹ் இருப்பது பற்றி பிரச்சினை இல்லை. படைப்புகளை படைக்க முன், படைப்புகளே இல்லாதபோது அவைகளுடன் அல்லாஹ் இருப்பது எவ்வாறு? என்பதை சிந்திய்யுங்கள்.

படைப்புகளை படைக்க முன் அவை அல்லாஹ்வின் தாத் எனும் உள்ளமையிலேயே இருந்தன.அப்போது அவற்றுக்கு தனியான தோற்றம் இருக்கவில்லை அந்த நேரத்தில் அவை அல்லாஹ்வுடனேயே இருந்தன. படைப்புகளை படைத்தபின் அவற்றுக்கு தனியான தோற்றம் உருவானது. ஆயினும் அவை அல்லாஹ்வை விட்டு பிரியவுமில்லை. அல்லாஹ் அவற்றை விட்டு பிரியவுமில்லை. எப்போதும் “நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுடன் அவன் (அல்லாஹ்) இருக்கின்றான்” அவன் சகல சிருஷ்டிகளுக்கும் மிகச்சமீபமாக இருக்கின்றான். அவன் அடியானின் பிடரி நரம்பைவிட அவனுக்கு மிகச் சமீபமாக இருக்கின்றான்.

தரீக்கா என்றால் என்ன                (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.



​​​​​

வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

கலிமா தைய்யிபாவின் சிறு விளக்கம்


​​கலிமாவில் பொதிந்துள்ள தத்துவத்தின் (வஹ்ததுல் வுஜூத்தின்) சிறு விளக்கத்தை பெற்றுகொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

சூழ்தல் தரும் தத்துவம்


​​அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர். அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 41:54) இந்த வசனத்தின் விளக்கத்தை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.