அல்ஹம்துலில்லாஹ்! இஸ்லாமிய பெண்கள் மத்தியில் மார்க்க கல்வியை அதிகரிக்கும் நோக்கோடு 25 ஜனவரி  2013 தொடக்கம் மெயில் ஒப் இஸ்லாம்,  www.womanofislam.com இணையத்தளத்தோடு இணைந்து சேவை செய்ய தீர்மானித்துள்ளது.
www.womanofislam.com ஏன்?

​​​​*பெண்கள் சம்பந்தப்பட்ட அல் குர்ஆன் வசனங்கள், அல் ஹதீஸ்கள், உம்மஹாத்துல் முஃமினீன் (முஃமீன்களின் அன்னையர்) வாழ்க்கை குறிப்புகள், பெண் ஸஹாபாக்கள், வலிமார்கள் பற்றிய வாழ்க்கை குறிப்புகள், இஸ்லாமிய பெண்கள் திருமண, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை, பெண்கள் கல்வி, பெண்கள் ஆடை சம்பந்தப்பட்ட கட்டுரைகள் மற்றும் பெண்களுக்கு பிரயோசனம் அளிக்க கூடிய பெண்கள் மருத்துவம், அழகு குறிப்புகள், சமையல் கட்டுரைகள் ஆகியவைகளை முஸ்லிம் பெண்கள் படித்து உண்மை முஸ்லிமாவாக வாழ இந்த இணையத்தளம் உதவுகிறது.  

*  அத்தோடு மாற்று மத சகோதரிகள் இஸ்லாத்தை படிக்கவும் இஸ்லாம் சம்பந்தமாக அவர்களுக்கு ​​உள்ள கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ளவும் இந்த இணையத்தளம் உதவுகிறது.

* அத்தோடு புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ள சகோதரிகள் இஸ்லாத்தை ஆரம்பத்தில் இருந்து படிக்க கூடிய ​​விதத்தில் இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.​இந்த சிறப்பான பெண்கள் ​​இணையத்தளத்தை உங்கள் சகோதரிகளுடனும், பெண் நண்பர்களுடனும் பகிர்ந்து முஸ்லிம் சகோதரிகள் அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி உண்மை முஸ்லிமாவாக ஒழுக்கத்தோடு வாழவும்,  ​​மாற்று மத சகோதரிகள் சத்திய இஸ்லாத்தை அறிந்து விளங்கி அதனை ஏற்று முஸ்லிமாவாக மாறவும் உதவுங்கள்.

"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு"   - அல் குர்ஆன்​​


ஆம், சத்தியத்தை ​எடுத்து சொல்லும் இந்த புனித வேலையில் நீங்களும் பங்ககெடுத்துக்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் அல்லாஹ்வினது அருளையும் அவனது அன்பு தூதர் ﷺ அன்னவர்களது அன்பையும் பெற்று கொள்ளுங்கள்.   
Sign-Up  |  Log-In
MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
தமிழ் பகுதி -  பெண்கள் பகுதி