MAIL OF ISLAM

Knowledge & Wisdom



ரவா கேசரி


தேவையான பொருட்கள்:-


ரவை - 1 டம்ளர், சர்க்கரை - 2 டம்ளர், தண்ணீர் - ஒன்றரை டம்ளர், நெய் - அரை டம்ளர், முந்திரிப் பருப்பு- 10, ஏலக்காய் - 4, கேசரி பவுடர் - 1 தேக்கரண்டி

பன்னீர் - 2 தேக்கரண்டி




செய்முறை:    முந்திரியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூள் செய்து கொள்ளவும். நெய்யை உருக்கிக் கொள்ளவும்.


அடுப்பில் வாணலியை வைத்து 2 தேக்கரண்டி நெய் ஊற்றி நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும். அதேநெய்யில் ரவையைக் கொட்டி நன்றாக வறுக்கவும்.


தண்ணீரைக் கொதிக்க வைத்து வறுத்த ரவையில் ஊற்றி, கட்டியாகாமல் நன்றாகக் கிளறவும். ரவை நன்றாக வெந்ததும்,சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். கேசரி பவுடரை தண்ணீல் கரைத்து ஊற்றவும், பன்னீரையும் சேர்க்கவும்.


உருக்கிய நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கேசரியில் ஊற்றிக் கிளறிக் கொண்டே வரவும். வறுத்த முந்திரி, பொடித்த ஏலக்காயைச்சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி விடவும்.

ரவா

காய்கறி வடை


தேவையான பொருட்கள்:-

உளுந்தம்பருப்பு - 100 கிராம், கடலை பருப்பு - 100 கிராம்,

காய்கறிகள் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது), பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது, இஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது, மிளகாய் - 2, சீரகம் - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது),       

 எண்ணெய் -   1/2  லிட்டர், உப்பு - தேவையான அளவு



செய்முறை:


1. உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, முக்கால் பதத்துக்கு அரைத்துக் கொள்ளவும்.


2. இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சி, பெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். (தேவைப்பட்டால் மிளகாய், இஞ்சியை அறைத்தும் சேர்க்கலாம்)


3. ஒரு வாழை இலை அல்லது மொத்தமான பிளாஸ்டிக் கவரில் வடை மாவை தட்டி, வாணலியில் காய வைத்த எண்ணெயில் இட்டு பொரிக்கவும்.


4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து வடிதட்டில் இட்டு எண்ணெய் வடிந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

பப்பாளி பழ அல்வா


தேவையான பொருட்கள் :-

பப்பாளி பழ துண்டுகள் : 3 கப்

சர்க்கரை : 3/4 கப் (உங்கள் தேவைக்கேற்ப)

நெய் : 4 தே. கரண்டி

காய்ச்சின பால் : 1/2 கப் (உங்கள் தேவைக்கேற்ப)

ஏலப்பொடி - சிறிதளவு

 முந்திரி - 7, பாதாம் பருப்பு - 7




செய்முறை:


1. முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.

2. பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ளவும்.

3. அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய்விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்குங்கள்.

4. பச்சை வாடை போனதும் காய்ச்சின பாலை ஊற்றி நன்கு வேக விடவும்.

5. பப்பாளி குழைந்து வரும், அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.

6. அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவரவும்.

7. பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்பொது முந்திரி, பாதாம், ஏலப்பொடி தூவி கிளறி இறக்கவும்.

8. பப்பாளி பழ அல்வா தயார்.



குறிப்பு:

பப்பாளி நன்றாக பழுத்ததாக இருக்கவேண்டும் (தோல் மஞ்சள் நிறமாக இருக்கும்)

பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.

பழம் கிடைக்கவில்லையென்றால் பப்பாளிக்காயிலும் செய்யலாம்.



* பப்பாளிக்காயை தோல் நீக்கி துறுவிக்கொள்ளவும்.

* சர்க்கரை 2 கப் பப்பாளிக்கு 1 கப் வீதம் போடலாம். (காயில் இனிப்பு குறைவு)

* நிறத்துக்கு சிறிதளவு கேசரிபொடி உபயோகிக்கலாம்.

* மற்ற செய்முறை மேற்கூறியவாறுதான்.

பஜ்ஜி



தேவையான பொருட்கள்:-

கடலை மாவு - 1/4 கிலோ,  மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

கேசரி பவுடர் - 2 சிட்டிகை,  வெங்காயம் அல்லது வாழைக்காய் - 2

அரிசி மாவு - 2 ஸ்பூன்,  பெருங்காயம் - 1/4 ஸ்பூன்

எண்ணெய் - 1/2 லிட்டர்,  உப்பு -தேவையான அளவு




செய்முறை:-


1. கடலை மாவில் 1 கப் தண்ணீர் விட்டு கூழ் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.


2. இதில் அரிசி மாவு, மிளகாய்தூள், சீரகம், பெருங்காயம், கேசரி பவுடர், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொள்ளவும்.


3. வெங்காயம் அல்லது வாழைக்காயை சீவி வைத்துக் கொள்ளவும்.


4. வாணலியில் எண்ணெயை ஊற்றி நன்றாக சூடானதும், சீவிய வெங்காயம் அல்லது வாழைக்காயை, ஏற்கனவே கலந்து வைத்த மாவில் முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில் இட்டு வேக விடவும்.


5. பஜ்ஜி சிவந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து வடிதட்டில் கொட்டி எண்ணெயை வடிய விட்டு பின்னர் சூடாக பரிமாறவும்.

பெங்களூர் பிரியாணி


தேவையானப் பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ,  அரிசி – 1 கிலோ,  எண்ணை – 100 கிராம்

நெய் – 150 கிராம்,  பட்டை பிரியாணி இலை,  கிராம்பு,

ஏலக்காய் -தேவையான அளவு,  வெங்காயம் – 500 கிராம்

தக்காளி -500 கிராம்,  இஞ்சி – 11/2 ஸ்பூன்,  பூண்டு – 11/2 ஸ்பூன்

கொ. மல்லி தழை-1 கப்,  புதினா – 11/2 கப்,  ப. மிள்காய் – 5, தயிர் – 1கப்,  சிகப்பு மிளகாய் தூள் – 11/2 டீஸ்பூன்,  மஞ்சள் போடி – 1/2 டீஸ்பூன்

தணியா பொடி-1 டீஸ்பூன்,  கலர் பொடி – 1 சிட்டிகை

எலுமிச்சை பழம் – 1, நெய் – ஒரு டீஸ்பூன்



செய்முறை:


ஓர் பெரிய சட்டில் எண்ணையும் நெய் ஊற்றி பாதி வெங்காயம் போட்டு பொந்நிறமாக பொரிக்கவும். அதனை தணியாக எடுத்து வைக்கவும்.


பின் அதில் பட்டை, கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிந்ததும் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் பிறகு பாதி கொ. மல்லி புதினா வை போட்டு கிளறவும்.


ப.மிளகாய் மிளகாய் தூள், மஞ்சல் தூள், உப்பு தேவையான் அளவு போட்டு வதங்கியவுடன் சிக்கன் தயிர் தனியாபொடி,1/2 மூடி எலுமிச்சைசாறு தக்காளி மீதி கொ.மல்லி புதினா போட்டு வேக விடவும்.


சிக்கன் நன்குவெந்த்தும் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு 1 1/2கப் சூடு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் கலர் பொடி உப்பு போடவும்.


அரிசியை 20 நிமிடம் முன்பே ஊறவைத்து நன்கு வடி கட்டவும்.


அரிசியை போட்டு நன்கு கிளரவும்.


அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால் பகுதி வெந்தவுடன் தீயை சுருக்கவும். பாதி எலுமிச்சை ஜீஸ் ஊற்றவும்.


சட்டி்யை சுற்றிலும் துணிகட்டி தம்மில் போடவும். 10 நிமிடங்கள் கழித்து சுவையான பிரியாணி ரெடி.


சூடாக ராய்தா எண்ணை கத்திரிக்காயுடன் பரிமாறவும்

மசால் தோசை


தேவையானவை:


புழுங்கலரிசி - 2 கப்,  பச்சரிசி - 2 கப்,  உளுத்தம்பருப்பு - முக்கால் கப்,

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,  ஜவ்வரிசி - ஒரு டீஸ்பூன்,  உப்பு,

எண்ணெய், நெய், உருளைக்கிழங்கு மசாலா - தேவையான அளவு





செய்முறை:


அரிசி வகை, பருப்பு, வெந்தயம், ஜவ்வரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நைஸாக அரைத்து, உப்பு போட்டுக் கரைத்து, 10 மணி நேரம்

புளிக்கவைக்கவும். மாவு பொங்கிவரும் பட்சத்தில் தோசை வார்க்கலாம். தோசைக்கல்லில் நடுவில் மாவை ஊற்றி, அடி தட்டையாக இருக்கும் கரண்டியில் நிதானமாக வட்டமாக தேய்த்துக் கொண்டே வந்தால் தோசை பார்க்க அழகாக இருக்கும்.


பிறகு உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து மடித்து கொடுக்கலாம். இந்த தோசைக்கு திருப்பிப் போடவேண்டிய அவசியமில்லை. நெய்யும் எண்ணெயும் கலந்து வைத்துக்கொண்டு தோசை வார்க்க வேண்டும். ஹோட்டல் தோசை போன்று அருமையாக இருக்கும்.

பாதாம் ஹல்வா


தேவையானவை:

• பாதாம் - கால் கிலோ

• பால் - அரை டம்ளர்

• குங்குமப்பூ - ஒரு பின்ச்

• பட்டர் - 200 கிராம்

• சர்க்கரை - கால் கிலோ

• கேசரி கலர் - ஒரு சிட்டிகை



செய்முறை:


• பாதாமை கொதிக்கும் வெந்நீரில் போட்டு தோலை உரித்து கட் செய்து மிக்ஸியில் பால், குங்குமப்பூ சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.


• ஒரு நாண் ஸ்டிக் பானில் பட்டரை போட்டு லேசாக உருக்க வேண்டும் முக்கால் வாசி உருகும் போது அரைத்த பாதாமை போட்டு கைவிடாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.


• பிறகு கேசரி கலர் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூனில் கலக்கி ஊற்றவும்.


• கிளறி கலர் மாறி வரும் போது சர்க்கரை சேர்த்து நன்கு ஹல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

எக் பிரெட் உப்புமா


தேவையானவை:

பிரெட் - 6

முட்டை - 2

வெங்காயம் - 1

கடுகு - 1ஸ்பூன்

உளுந்து - 1ஸ்பூன்

கொ.மல்லி

க.பிலை, ப.மிளகாய் - 3, உப்பு, எண்ணெய் - தேவைக்கு



செய்முறை:


1.பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், ப.மிளகாயினை பொடியாக அறிந்து வைக்கவும்.


2.கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு க.பிலை, கொ.மல்லி போட்டு தாளித்து வதக்கவும்.


3.உதிர்த்த பிரெட்டை போட்டு கிண்டவும். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையினை ஊற்றி கிண்டவும்.


4.முட்டை பிரெட்டுடன் கலந்த பின் இறக்கவும்.சூடாக பரிமாறவும்.

இறால் வறுவல்


தேவையானவை:

இறால் - அரை கிலோ

பெ. வெங்காயம் - அரை கிலோ

மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்

மி. பொடி - இரண்டு டீஸ்பூன்

இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

ரீபைன்டு ஆயில் - மூன்று டேபிள்ஸ்பூன்

சோம்பு - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது, உப்பு - இரண்டு டேபிள் ஸ்பூன்



செய்முறை:


முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, இஞ்சி+ பூண்டு விழுது, உப்பு தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.


பிறகு அடுப்பில் நான்ஸ்டிக் வாணலியை வைத்து எண்ணையை ஊற்றி சோம்பு தாளித்து ஊற வைத்த இறாலை போட்டு வதக்க வேண்டும்.


அதுவே தானாக நீர்விட்டுக்கொள்ளும். எனவே நீர் ஊற்ற வேண்டாம்.


நீர் முழுவதும் வ்ற்றியதும் வெங்காயத்தை நீள நீளமாக அரிந்து இறாலில் போடவும்.


சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.

கறிவேப்பிலை சட்னி


தேவையானவை:

• தக்காளி - 3

• மிளகாய் வற்றல் - 6

• சின்ன வெங்காயம் - 10

• கறிவேப்பிலை - 8 கொத்து

• வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒன்றரை தேக்கரண்டி

• உப்பு - அரை தேக்கரண்டி

• கடுகு - ஒன்றரை தேக்கரண்டி   • கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி   • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி




செய்முறை:


தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.


வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும் அதில் கடலைப்பருப்பு, மிளகாய் வற்றலை சேர்த்து வதக்கவும்.


அதனுடன் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் கறிவேப்பிலையை போட்டு நன்கு வதக்கி விட்டு ஆறவைக்கவும்.


பிறகு ஆறவைத்தப் பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து எடுக்கவும். சுவையான கறிவேப்பிலை சட்னி தயார்.

லட்டு


தேவையானவை:

கடலை மாவு - கால் கிலோ

ஜீனி - அரை கிலோ

நெய் - மூன்று தேக்கரண்டி

முந்திரி பருப்பு - ஐம்பது கிராம்

ஏலக்காய் - பத்து

கிஸ்மிஸ் - இருபது

மஞ்சள் வண்ணப் பொடி - ஒரு சிட்டிகை, ரீபைண்டு ஆயில் - அரை லிட்டர்



செய்முறை:


கடலை மாவினை சலித்து எடுத்துக் கொள்ளவும். கடலை மாவு நாள்பட்டதாக இருந்தால் சுவை நன்றாக இருக்காது. புதிய மாவாக எடுத்துக் கொள்ளவும்


தேவையான இதரப் பொருட்களைத் தயாராய் எடுத்து வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாகிக் கொள்ளவும். மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவிட்டும்உடைத்துக் கொள்ளலாம். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.


ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் ஜீனியைக் கொட்டி, ஒரு டம்ளர் நீர் விட்டு கம்பி பதத்திற்கு பாகு காய்ச்ச வேண்டும். இளம் கம்பி பதம் என்பது கரண்டியில் எடுத்து விரலால் தொட்டு மூன்று வினாடிகள் கழித்து விரலைப் பிரித்தால் மெல்லிய கம்பி இழை போல் வரும்


குறிப்பிட்ட பதத்திற்கு பாகு தயாரானதும், அந்தப் பாகிலேயே கலர் பவுடர் மற்றும் ஏலப்பொடி சேர்க்கவும்


கடலை மாவில் போதுமான நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். மாவுக்கரைசலில் நீர் அதிகம் இருந்தால் பூந்தி உருண்டையாக வராது. மீண்டும் சிறிது கடலை மாவு சேர்த்தால் சரியாகி விடும்


வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, பூந்தி கரண்டியை வாணலியில் நேரடியாக, பிடித்து பரவலாக கரைத்த மாவை ஊற்றவும். பூந்தி கரண்டி இல்லையென்றால் சாதாரண கண் கரண்டியைப் பயன்படுத்தியும் செய்யலாம்


பூந்தியை சிறிது நேரம் வேக விடவும். முறுகி விடக் கூடாது


பதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, ஜீனிப் பாகில் உடனே கொட்டவும். இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்


பின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்


கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.

மீன் குழம்பு


தேவையானவை:


• சதை பற்றான மீன் - 6 - 8 துண்டுகள்

• சின்ன வெங்காயம் - 5

• பெரிய வெங்காயம் - பாதி

• பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

• பூண்டு - 10 பல்

• தக்காளி - ஒன்று

• மிளகு தூள் - 2 தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

• மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி(காரத்திற்கு ஏற்ப கூட்டலாம்)

• மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி

• புளி - தேவைக்கு ஏற்ப

• உப்பு - தேவைக்கு ஏற்ப

• எண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை - தாளிக்க

• கொத்தமல்லி - சிறிதளவு



செய்முறை:


மீனை நன்கு சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்


பாதி பெரிய வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு 5 பல் பூண்டு, ஒரு தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்


நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.


எண்ணெய் பிரிந்து வரும் போது புளி கரைசல் ஊற்றி கொதிக்க விடவும்.


நன்றாக கொதிக்கும் போது மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள், சேர்த்து கொதிக்க வைக்கவும்.


எண்ணெய் பிரிந்து வரும் போது சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து ஒரு கொதி கொதிக்க விடவும்.


பின்பு அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதை போட்டு கொதிக்க வைக்கவும்.


கடைசியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையான மீன் குழம்பு ரெடி.

மெதுவடை


தேவையானவை:


உளுத்தம்பருப்பு - 1 கப்,

வடித்த சாதம் - 1 கைப்பிடி,

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி - 1

துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன்,

கறிவேப்பிலை, மல்லித்தழை & சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:


உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சாதத்துடன் சேர்த்து நன்கு அரையுங்கள். பெருங்காயத்தை கால் கப் தண்ணீரில் கரைத்துக்கொண்டு, அவ்வப்பொழுது மாவில் தெளித்து அரையுங்கள். நன்கு அரைபட்டதும் வழித்து எடுங்கள்.


பச்சை மிளகாய், இஞ்சியை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து, மாவில் சேருங்கள். கறிவேப்பிலை, மல்லித்தழையை பொடியாக நறுக்கி சேருங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து பிசைந்து சிறு சிறு வடைகளாக காயும் எண்ணெயில் சுட்டெடுங்கள். பஞ்சு போன்ற மெதுவடை தயார்.

செட்டிநாடு கோழி குழம்பு


தேவையானவை:


கோழி – 1 கிலோ

கிராம்பு – 2

பட்டை – 2

சீரகத்தூள் – 1 ஸ்பூன்

சோம்புத்தூள்- 2 ஸ்பூன்

மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்

மிளகாய்த் தூள்- ஒன்றரை ஸ்பூன்

மல்லித்தூள் – இரண்டு ஸ்பூன்

முந்திரிபருப்பு – நூறு கிராம்

தேங்காய் – 1 மூட

உப்பு – தேவையான அளவு

இஞ்சி/பூண்டு விழுது – 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 4

தக்காளி – 250 கிராம்

பெரியவெங்காயம் – 250 கிராம்

எண்ணெய் – 250கிராம்



செய்முறை:


முதலில் மசாலாவை அரைத்துக் கெள்ளவும்.


மஞ்சள் தூள் அரை ஸ்பூன், சீரகத்தூள் ஒரு ஸ்பூன், சோம்புத்தூள் ஒரு ஸ்பூன், மல்லித்தூள் இரண்டு ஸ்பூன், மிளகாய்த் தூள் ஒன்றரை ஸ்பூன், தேங்காய், கசகசா,முந்திரிபருப்பு நூறு கிராம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.


அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, மிளகாய் முதலியவற்றை போட்டு வதக்கவும். அத்துடன் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.


இப்போது இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் (சுத்தம் செய்து நறுக்கிய) கோழியை சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நெருப்பைகுறைத்து வைத்து நன்கு வேகவிட்டு இறக்கவும்.சுவையான செட்டிநாடு கோழி குழம்பு தயார்.


பதமாக வெந்ததும், பூந்தியை சாரணி கொண்டு அரித்து எடுத்து, ஜீனிப் பாகில் உடனே கொட்டவும்.


இப்படியே மாவு முழுவதையும் பூந்தியாக பொரித்து பாகில் போடவும்.


பின்னர் உடைத்த முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து பூந்தியில் கொட்டவும். ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரை விரித்து அதில் கலவையை பரப்பி கரண்டியால் நன்றாக கலக்கவும்


கை பொறுக்கும் சூடு வந்தவுடன் லட்டுகளாக பிடிக்கவும். மிகவும் ஆறிவிட்டால் உருண்டைப் பிடிப்பது கடினம். மிதமான சூட்டிலேயே பிடித்துவிடவும்.

வெஜிடபுள் சப்பாத்தி


தேவையானவை:


• கோதுமை மாவு - 2 கப்

• பெரிய வெங்காயம் - ஒன்று

• முள்ளங்கி - ஒன்று

• காரட் - ஒன்று

• குடைமிளகாய் - பாதி

• உருளைக்கிழங்கு - 3

• உப்பு - அரை தேக்கரண்டி



செய்முறை:


முள்ளங்கி, காரட் இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.


மசித்த உருளைக்கிழங்குடன் வெங்காயம், முள்ளங்கி, காரட், குடைமிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து வைத்து கொள்ளவும்.


கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.


பிசைந்த மாவிலிருந்து ஒரு உருண்டை மாவை எடுத்து கட்டையில் வைத்து சப்பாத்தியாக இடவும்.


அதில் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து நான்கு புறமும் மூடி மீண்டும் சப்பாத்தியாக தேய்க்கவும்.


தோசைக் கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு மேலே எண்ணெய் தடவி வெந்ததும் எடுக்கவும்.


சுவையான வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி ரெடி. இதை மாலை நேர சிற்றுண்டியாக சாஸுடன் பரிமாறலாம்.

உளுந்து அடை


தேவையானவை:


உளுந்து = கால் ட‌ம்ள‌ர்

அரிசி மாவு = முன்று தேக்க‌ர‌ண்டி

ர‌வை = ஒரு மேசை க‌ர‌ண்டி

வெங்காய‌ம் = முன்று

ப‌ச்ச‌மிள‌காய் = ஒன்று

கொத்துமல்லி தழை = சிறிது

நெய் + எண்ணை = சுட தேவையான அளவு



செய்முறை:


உளுந்தை அரை ம‌ணி நேர‌ம் ஊற‌வைத்து சிறிது த‌ண்ணீர் சேர்த்து விழுதாக‌ அரைத்து கொள்ள‌வும்.


அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கி அதில் உப்பு,பொடியாக நருக்கிய வெங்காயம், கொத்துமல்லி தழை, பச்சமிளகாயை சேர்த்து அடை சுட தகுந்தவாறு தண்ணீர் சிறிது சேர்த்து அடைகளாக வார்க்கவும்

கீழுள்ள சமையல் குறிப்புகளை PDF இல் பதிவிறக்கம் செய்யவும் மேலும் பல

​சமையல் குறிப்புகளை வாசிக்கவும் :  www.womanofislam.com