MAIL OF ISLAM

Knowledge & Wisdomபெண்கள் ஸியாரத் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்.


திருமதி ஷfபியத் காதிரியா

பெண்கள் தர்கா ஸியாரத் செய்தால் முறையுள்ள (மஹ்ரமான) ஆண்களுடன் செல்லுங்கள் !

முழுமையான கோஷா முறையில் தொழுகைக்கு நிற்பதுபோல தன்னை மறைத்துக்கொண்டு செல்லுங்கள் !

தர்காக்களை ரவ்லா ஷரீப்களை மட்டும் பார்த்தால் போதும் !


​​

சப்தமிட்டு பேசுவது, போனில் பேசுவது, வெடி சிரிப்பு சிரிப்பது, கூச்சலிட்டு யாரையும் அழைப்பது போன்ற அதபில்லாத செயல்களை செய்யாதீர்கள் !

மெல்லிய ஆடையை தவிருங்கள்! புர்கா போட்டிருப்பதாக நினைத்துக்கொண்டு தலைப்பின்னலை வெளியே தொங்கவிட்டு பூக்களை தொங்க விட்டு செல்ல வேண்டாம் !

இத்தகைய காட்சிகளை தினமும் கண்டு மனம் வேதனைப்படுகிறது !

காலடி சப்தம் கேட்கும் அளவுக்கு நடையை நடக்க வேண்டாம் !

உடலை குலுக்கி குலுக்கி நடப்பது, மேனி அழகுகள் வெளியில் தெரியும்படியான புர்காக்கள் அணிவதை தவிருங்கள் பிளீஸ் !

அங்கே போயும் பொய், புறம், கோள் சொல்லி கொண்டிருக்க கூடாது ! பிறர் மனம் நோகும்படி அங்கிருந்து கொண்டு எந்த செயலும் செய்ய கூடாது !

தொழுகையை முறையாக பேணிக்கொண்டு வலிமார்களிடம் செல்லுங்கள் ! எந்த இறைநேசருக்கும் இறைவனை சஜ்தா செய்யாமல் தம்மிடம் வருபவர்களை பிடிக்காது !

ஹைளு நிபாஸ் உடைய காலத்தில் போக கூடாது ! சூரா பாத்திஹா கூட அந்த நேரத்தில் ஓத வேண்டாம்! பிறரைக்கொண்டு ஓத வைத்து துஆ செய்து கொள்ளுங்கள் !

தர்காக்களில் தங்க வேண்டிய நிலைமை வந்தால் இந்த இயற்கை இன்னல்கள் வந்தால் மாதவிடாய் போன்றவை வந்தால் போகாமல் வீட்டில் இருப்பது தான் உகந்தது !

தர்காக்களுக்கென்றே நேர்ச்சை செய்து அதை நிறைவேற்ற பெண்கள் தாரளமாக செல்லலாம் ! இதைக்கூடாது என்று சொல்பவர்களின் பேச்சை பொருட்படுத்த வேண்டாம் !

இதை ஆண்கள் படித்தால் பெண்களுக்கு சொல்லுங்கள்.

சூபிசம் சம்பந்தமான நூல்கள்


1. இஹ்யாவு உலூமூத்தீன்

2. பத்ஹுர் ரப்பானி     

3. மௌலானா ரூமியின் தத்துவங்கள்    

4. கல்வத்தின் இரகசியங்கள்

சூபிசம் என்றால் என்ன               (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீக பொன்மொழிகள்


ஆன்மீக பெரியார்களின் விலை மதிப்பில்லா சூபிச தத்துவங்கள், கருத்துகள் மற்றும் பொன்மொழிகள். கண்டிப்பாக வாசித்து பயன்பெறுங்கள்.


வஹ்ததுல் வுஜூத் என்றால் என்ன?


வஹ்ததுல் வுஜூத் என்பதற்கு மெய்ப்பொருள் ஒன்று,  உள்ளமை ஒன்று ஆயினும் ஸுபியாக்கள் “வஹ்ததுல் வுஜூத் “என்பதற்கு ஒரு உள்ளமையின் வெளிப்பாடு என்று கூறுவார்கள். இதைப்பற்றிய தெளிவை பெற்றுக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​​​​

பெண் ஸுfபியாக்கள்


இஸ்லாத்தில் உள்ள சில பெண் ஸுபியாக்களின் பெயர்கள்  சிலவற்றை  இங்கு  வாசிக்கலாம்.

மனிதனும் மகானும்


​மனிதன் என்றால் யார்? மகான் என்றால் யார்? என்பதை விளங்கிக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

பையத் என்றால் என்ன? (BAIYATH)


​பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா?


​ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.