MAIL OF ISLAM

Knowledge & Wisdomகாமிலான ஷெய்குமார்களின் தன்மைகள் 


எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.


♣  இஸ்லாத்தின் பார்வையில் காமிலான ஷைகுமார்களின் தன்மைகள்.

♦ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை சென்றடைகின்ற ஸில்ஸிலாவை (ஞான குருமார்கள் சங்கிலித் தொடரை)க் கொண்ட நல்ல ஒரு ஷைகிடம் ஞான தீட்சை பெற்று, ஞானத்திலும் அறிவிலும் சம்பூரணத் தன்மையிலும் மற்றவர்களுக்கு அருள் பாலிக்கின்ற விசயத்திலும் நல்ல பக்குவம் அடைந்திருப்பதுடன், தான் தீட்சை வழங்குவதற்கு இஜாஸாவும் (அனுமதி) பெற்றிருப்பவராக இருப்பார்.

♦ மார்க்க சட்டக் கலையிலும், கொள்கையிலும், சித்தாந்தத்திலும், ஞானக் கலையிலும் (ஆழ்ந்த அறிவு) இல்முள்ளவராக இருப்பதுடன் அதன்படி அமல் செய்கின்றவராயும் இருப்பார். அவ்வாறு இல்லையெனில் மனிதர்கள் மடையர்களை தலைவர்களாக ஆக்கிக் கொள்வார்கள். (அந்த மடையர்களான தலைவர்கள்) தானும் வழி கெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்து விடுவார்கள் என்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லுக்கு இலக்காக நேரிடும்.

♦முரீதுகளின் மூலம் ஏதேனும் பொருட்களையோ பணம் காசுகளையோ கொஞ்சமும் எதிர்ப்பார்க்காமல் அல்லாஹ்வுக்காக கடமையாற்றுபவராக இருப்பதுடன் முரீதுப்பிள்ளைகள் மனமுவந்து தூய்மையான எண்ணத்துடன் ஏதேனும் ஹதியாக்கள் தந்தால் மட்டுமே ஒப்புக் கொள்பவராகவும் இருப்பார்.

♦    ஏதேனும் சருகுதல்கள் ஏற்பட்டு விடின் உடனடியாக தவ்பா செய்து மீண்டு விடுவார்கள்.

♦ முரீது பிள்ளைகள் ஒப்புக் கொள்வதின் மீது பேராசை கொள்ளாமல் ஞானப்பாட்டையின் நுட்பத்தையும் முக்கியத்துவத்தையும் கடின முறையைக் கையாளாமல் அவர்களுக்கு இதமாக போதிப்பவராகவும் இருப்பார்.

♦  தமது முரீதுபிள்ளை தன்னல்லாத மற்ற ஞான குருமார்களை விடுத்து தன்னை மட்டுமே பற்றிப்பிடிப்பவராக இருக்கிறாரா? என்பதைப் பரீட்சித்துப் பார்த்து உண்மையானவராகவும் அதில் ஆசை கொண்டவராகவும் மனத்தூய்மை உள்ளவராகவும் இருப்பதாகப் பெற்றுக் கொண்டால் அவரை மனமுவந்து ஏற்று ஒரு எஜமான் தன் அடிமையை எப்படிக் கவனித்துக் கொள்வாரோ அது போன்று கவனித்து கொள்வதுடன் தனது சொந்த மகனை வளர்ப்பது போன்று வளர்த்து வருவதுடன் ஒழுக்க முறைகளையும் கற்பிப்பவராக இருப்பார்.

♦  முரீதுக்கு ஏற்படுகின்ற சிறு குற்றங்களைப் பெரிது படுத்தாமல் இருப்பார். மறதியாகவோ அல்லது பொடு போக்காகவோ ஏற்பட்டுவிட்ட தவறுகளை உடனடியாக பிடித்துவிடாமல் சற்று விட்டுப் பிடிப்பவராக இருப்பார். ஆனால் தாம் ஏவிய கட்டளைக்கு மாறுபடுதலின் பால் சேர்த்து வைக்கின்ற வகையிலோ அல்லது தமது சொல் செயல்களின் மீது குறுக்கீடு தெரிவிப்பது அளவில் சேர்த்து வைக்கின்ற வகையிலோ முரீதின் செயல் அமைந்திருக்குமாயின் உடனடியாக அவனைக் கண்டிப்புடன் எச்சரிக்கை செய்வார். அந்த செயலிலிருந்து நீங்கி பிழை பொறுக்கக் தேடி அதற்காக கவலையும் கொண்டால் திரும்ப அது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று நிபந்தனையிடுபவராக இருப்பார்.   ரூஹுல் பயான் - பாகம் 5 பக்கம் 278


​♦   அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அன்றாடம் இரவு நேரங்களில் தனித்திருந்து தியானத்தில் ஈடுபடுவது போல ஒவ்வொரு நாளும் தஹஜ்ஜுத் மற்றும் இறைவணக்கங்களை நிறைவேற்றி வருவார்.

♦   தன்முரீதுகளின் நிலைமைக்குத் தக்கவாறு தாம் மிகவும் கீழே இறங்கி அவர்களுடன் நற்குணத்தின் நடந்து கொள்வதுடன் அவர்களுடன் அறிவுக்குத் தகுந்தவாறு பேசுவார்.

♦  முரீதிடம் ஒரு வெறுப்பான காரியத்தையோ அல்லது அவரின் செயல்களில் தற்பெருமை இருப்பதாகவோ அறிந்தால் அதை அப்படியே பலருக்கு மத்தியில் போட்டு உடைத்து அவர் மனதை புண்படுத்தி விடாமல் பல முரீதுகள் ஒன்று கூடும் சந்தர்ப்பம் பார்த்து பொதுவாக சுட்டிக்காட்டி அவர் திருந்துவதுடன் மற்ற முரீதுகள் பயன் பெறும் வகையில் எடுத்துக் கூறுவார்.

♦    முரீதுகளின் இரகசியங்கள் பாதுகாத்து வைப்பார்.  அல் அவாரிப் - பக்கம் 273

♦   சம்பூரணமான ஷைகு என்பவர் பிரார்த்தைனையின் பலனாக தமது முரீதை ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலையின்பால் திருப்புகின்ற தகைமையும் ஒரு தரத்திலிருந்து வேறொரு தரத்தின்பால் உயர்த்துகின்ற தகுதியும் பெற்ற வணக்கசாலியான ஆலிமாவார் (மார்க்க அறிஞராவார்).


​​அத்தஸவ்வுப் - பக்கம் 90


♦ தமது முரீதுபிள்ளை தமது செய்கைகளில் குறைகாணும் வகையில் குறிக்கீடுகள் தெரிவித்தாலோ அல்லது பிரிவை ஏற்படுத்தி வைக்கின்ற காரியங்களில் ஈடுபட்டாலோ உடனடியாக தம்மை விட்டும் அவரைப் பிரித்துவிடாமல் ஓரிரு முறைகள் மன்னிப்பு வழங்குவார். மூன்றாவது முறையாக செய்தால் அவரைப் பிரித்து விடுவார். அப்படி பிரியாவிடை கொடுக்கும் போது தான் செய்ததற்கான அந்தரங்கக் காரணத்தைக் கூறி அவருக்குத் தேவையான உபதேசங்களையும் செய்து அனுப்பி வைப்பார்.


​​ரூஹுல் பயான் - பாகம் 5 பக்கம் 283


குறிப்பு:  ஷெய்க் என்றால்  ஞான ஆசிரியர் ,  முரீத் என்றால் மாணவர்​​

சூபிசம் என்றால் என்ன (SUFISM)


ஸுபிஸம் என்றால் என்ன? சூபிசம் போதிப்பது என்ன? சூபிகள் என்றால் யார்? சூபித்துவத் தரீக்காக்கள் பற்றிய அறிமுகம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.

தரீக்கா என்றால் என்ன (TARIQA)


இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.


​​​​​

ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா? 


​ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.​​

பையத் என்றால் என்ன? (BAIYATH)


​பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.