Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துத் தகாதுர் – 102  (அதிகமாகத் தேடுவது)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 28,  வசனங்கள் – 8,  எழுத்துகள் – 120


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (செல்வங்கள் மேலும் மேலும் பெருக வேண்டும் என்று நீங்கள் பேராசைக்கொண்டு) அதிகமாக தேடுவதானது (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராமுகமாக்கி விட்டது –

2. கப்ருகளை நீங்கள் சந்திக்கும் வரை.

3. (உண்மை நிலை) அவ்வாறல்ல - விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் –

4. பின்னரும் (உண்மைநிலை) அவ்வாறல்ல, விரைவில் நீங்கள் அறிந்துக் கொள்வீர்கள்.

5. (உண்மை நிலை) அவ்வாறல்ல! உறுதியான அறிவை (கொண்டு) நீங்கள் அறிந்து கொண்டீர்களானால் – (இவ்வாறு பராமுகமாய் இருக்க மாட்டீர்கள்)

6. (அப்பேராசையின் காரணமாக) நீங்கள் நரகத்தை திண்ணமாக காண்பீர்கள்.

7. பிறகு, உறுதியான கண்ணால் அதனை திண்ணமாக நீங்கள் காண்பீர்கள்.

8. பிறகு, அந்நாளில் (உலகில் கொடுக்கப்பட்ட) அருட்கொடையை பற்றி நீங்கள் திண்ணமாக விசாரிக்கப்படுவீர்கள்.