Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் மஆரிஜ் – 70  (ஏறிச் செல்லும் வழிகள்)
(மக்கீ) பிரிவு - 2, சொற்கள் – 224, வசனங்கள் – 44, எழுத்துகள் – 929

ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. (காபிர்களுக்கு) ஏற்பட இருக்கும் வேதனை குறித்து கேட்பவன் (பரிகாசமாக்) கேட்கின்றான் –

2. காபிர்களுக்கு – (அது ஏற்படும் போது) அதை தடுப்பவர் எவரும் இலர் –

3. (வானவர்கள்) ஏறிச் செல்லும் வழிகளுடைய (அதாவது வானங்களுடைய) அல்லாஹ்விடமிருந்து (அது ஏற்படும்).

4. வானவர்களும், (ஜிப்ரீலாகியி) அவ்வான்மாவும் ஒரு நாள் அவனிடம் ஏறிச் செல்வார்கள்: அ(ந்)த (நாளி)னுடைய அளவானது ஐம்பதினாயிரம் ஆண்டு காலமாகும்.

5. எனவே, அழகான பொறுமையுடன் நீர் பொறுத்திருப்பீராக!

6. நிச்சயமாக அவர்கள் (வேதனை ஏற்படும் நாளாகிய) அதனை வெகு தொலைவில் (இருப்பதாக எண்ணி) பார்க்கின்றனர் –

7. (அனால்) நாமோ அதனை (மிக) சமீபமாக பார்க்கின்றோம்.

8. அந்நாளில் வானம் உருக்கப்பட்ட சென்பு போல ஆகிவிடும் –

9. இன்னும் மலைகள் (கொட்டப்பட்ட) பல வண்ண (ஆட்டு) உரோமங்கல்போல (காற்றில் பறக்க கூடியவை) ஆகிவிடும் (நாளில்)

10. ஒரு நண்பன், மற்றொரு நண்பனை விசாரிக்க மாட்டான்.

11. அவர்களை நேருக்கு நேர் அவர்கள் காண்பார்கள் (அந்நாளில்: எனினும் ஒவ்வொருவரும் தம்மை பற்றிய கவலையால் பிறரிடம் பேசிக்கொள்ள மாட்டார்கள்): மேலும் அந்நாளின் வேதனைக்கு ஃபித்யாவாக – (ஈடாக)க் குற்றவாளிக் கொடுக்க விரும்புவான்: தன் மக்களையும் –

12. தன்னுடைய மனைவியையும், தன்னுடைய சகோதரனையும் –

13. தன்னை அரவணைத்துக் கொண்டிருந்த தன்னுடைய உறவினர்களையும் –

14. இன்னும் பூமியிலுள்ளோர் அனைவரையும் (அந்த நாளின் வேதனைக்கு ஈடாக கொடுத்து) பிறகு தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவான்.

15. அவ்வாறு (அவன் விரும்புவது நடக்கக்கூடியது) அல்ல: நிச்சயமாக அது (-நரகம்) கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்.

16. (அது) சிரசின் தொலைக் கழற்றுடுவதாக இருக்கும்.

17. (உலகில் நேர்வழியை விட்டு) புறங்காட்டியவனையும், புறகணித்தவனையும் அது அழைக்கும்.

18. (பொருளையே குறியாக வைத்து அதனை) சேமித்து காத்து கொண்டவனையும் (அழைக்கும்)

19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டுள்ளான் –

20. ஒரு தீங்கு அவனைத் தோற்றுவிட்டால் பதறுகிறவனாகவும் –

21. (ஆனால்) ஒரு நன்மை அவனைத் தொட்டுவிட்டாலோ (பிறருக்கு அது கிடைத்துவிடாதவாறு) தடுக்கிறவனாகவும் இருக்கிறான்.

22. தொழுகையாளிகளைத் தவிர:

23. அவர்கள் எத்தகையோரென்றால் தம் தொழுகையின் மீது அவர்கள் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள் –

24. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் அவர்களின் பொருட்களில் குறிப்பிட்ட பாத்தியதை இருக்கிறது –

25. யாசிப்போனுக்கும் (யாசிக்க வெட்கப்பட்டு) ஒதுங்கி கொள்பவனுக்கும் (பாத்தியதை இருக்கிறது.)

26. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் நியாயத் தீர்ப்பு நாளை (அது வருவது உறுதி என்பதை) மெய்ப்படுத்துகிறார்கள்.

27. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் அவர்கள் தங்கள் இப்புடிய தண்டனைக்கு பயப்படுகிறார்கள்.

28. நிச்சயமாக அவர்களுடைய இப்புடிய தண்டனை அச்சமற்றிருக்கக் கூடியது அல்ல.

29. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தம் மர்மத்தலங்களை (ஹராமை விட்டும்) பாதுகாக்கிறார்கள் –

30. தங்களுடைய மனைவியர்களிடமோ, அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர: நிச்சயமாக அவர்கள் (இப்பெண்கள் விஷயத்தில்) பழிப்பிற்குரியவர்களல்லர்.

31. எனவே, எவரேனும் இதற்குப்பின் (வேறெந்தப் பெண்களோடும் உறவு கொள்ளத்) தேடினால் அவர்கள்தாம் வரம்பு மீறியவர்கள்.

32. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தம் அமானிதங்களையும், தம் வாக்குறுதியையும் பேணுகிறார்கள்.

33. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தம் சாட்சியங்களின் மீது உறுதியாய் இருக்கிறார்கள்.

34. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தம் தொழுகையின் மீது பேணுதலாக இருக்கிறார்கள்.

35. இத்தகையோர் தாம் சொர்க்கச் சோலைகளில் கண்ணியப்படுத்தப்படுகிறவர்கள்.


ருகூஃ 2

36. காபிர்களுக்கு என்ன நேர்ந்தது? (உம்மைப் பரிகசிப்பதற்காக) உம்பக்கம் விரைன்தோடியவர்களாக வருகின்றனர்.

37. வலப்புறமிருந்தும், இடப்புரமிருந்தும் கூட்டங் கூட்டமாக (வருகின்றனர்.)

38. அவர்களிலிருந்து ஒவ்வொருவனும் “நயீம்” என்னும் (பாக்கியமுள்ள) சொர்க்கத்தில் புகுத்தப்பட வேண்டுமென ஆசை வைக்கிறானா?

39. அவ்வாறு (நடக்கப் போவது) இல்லை! நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கிற (விந்)திலிருந்தே படைத்தோம்.

40. எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகளுக்குரிய ரப்பின் மீது சத்தியம் செய்கிறேன்: நிச்சயமாக நாம் சக்தியுடையவர்களாக இருக்கிறோம். (அதாவது:)

41. இவர்களை விடச் சிறந்தவர்களைக் கொண்டு (இவர்களை) நாம் மாற்றி விடுவதின் மீது (சக்தியுடையவர்களாக இருக்கிறோம்: இதற்கு) நாம் இயலாதோர் இல்லை.

42. எனவே, அவர்கள் வாக்களிக்கப்பட்டுள்ள அவர்களுடைய (இறுதித் தீர்ப்பு) நாளை அவர்கள் சந்திக்கின்ற வரை அவர்கள் வீணில் மூழ்கிக் கிடக்கவும், விளையாடிக் கொண்டிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவீராக!

43. நிச்சயமாக அவர்கள் (விழாக் காலங்களில் ஆராதனை செய்யும் தம்) சிலைகளின்பால் விரைந்து செல்வது போல் அந்நாளில் கப்ருகளிலிருந்து விரைவாய் அவர்கள் வெளியேறுவார்கள் –

44. அவர்களுடைய மார்வைகளை கீழ் நோக்கியவையாய் இருக்கும் நிலையில் இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்: அந்நாள் அவர்கள் வாக்களிக்கப்ப்ட்டுக் கொண்டிருந்தார்களே அதுவாகும்.