Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் முஸம்மில் – 73  (போர்வை போர்த்திக் கொண்டிருப்பவர்)
(மக்கீ)  பிரிவு - 2, சொற்கள் – 285, வசனங்கள் – 20, எழுத்துகள் – 838


ருகூஃ 1

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே!

2. இரவில் (தொழ) எழுந்து நிற்பீராக – சிறிது நேரம் தவிர –

3. அதில் பாதி, அல்லது அ(ப்பா)தி(யி)லிருந்தும் சிறிது குறைத்துக் கொள்வீராக! –

4. அல்லது அதைவிட (-பாதியை விட) அதிகமாக்கிக் கொள்வீராக! (அதில்) குர்ஆனைத் தேவக, நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக!

5. நிச்சயமாக நாம் விரைவில் உம்மீது கனமான ஒரு சொல்லைப் போடுவோம்.

6. நிச்சயமாக இரவில் எழுந்திருப்பதானது (மனம், னா, செவி, பார்வை ஆகியவற்றை) ஒரு முகப்படுத்துவதில் அது மிக வலிமையானது: இன்னும் சொல்லால் மிக்க நேர்த்தியானதாகும்.

7. நிச்சயமாக உமக்குப் பகலில் நெடிய வேலை இருக்கிறது.

8. உம்முடைய ரப்பின் திருப் பெயரை திக்ரு செய்வீராக! அவன் பக்கமே முற்றிலும் சார்ந்திருப்பீராக!

9. (அவனே) கிழக்குத் திசை, மேற்குத் திசையின் ரப்பு ஆவான்: அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) எந்த நாயனும் இல்லை: எனவே அவனையே (உம்முடைய காரியங்களுக்கு) பொறுப்பாளனாக நீர் ஆக்கிக் கொள்வீராக!

10. அவர்கள் சொல்வதின் மீது நீர் பொறுமையுடனிருப்பீராக! இன்னும், அவர்களை அழகான வெறுப்பாக வெறுத்து (ஒதுக்கி) விடும்.

11. என்னையும், (உலக) சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் இப்பொய்ப்பிப்போரையும் நீர் விட்டுவிடுவீராக! அவர்களுக்குச் சிறிது அவகாசமும் கொடுப்பீராக!

12. நிச்சயமாக நம்மிடத்தில் (அக்கொடியவர்களுக்காக) விலங்குகளும், நரகமும் இருக்கின்றன.

13. இன்னும் விக்குதல் உடைய உணவும், நோவினை தரும் வேதனையும் (உண்டு) –

14. அந்நாளில் பூமியும் மலைகளும் நடுநடுங்கி, மலைகள் சரிந்து மணல் மேடாகி விடும்.

15. பிர்அவ்னிடம் ஒரு ரஸுளை நாம் அனுப்பி வைத்தது போல், உங்களின் மீது சாட்சி சொல்கின்ற ரஸுலை உங்களிடம் நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம்.

16. (அனால்) பிர்அவ்ன் அந்த ரஸுலுக்கு மாறு செய்தான்: எனவே, கடினமான பிடியாக அவனை நாம் பிடித்தோம்.

17. எனவே, நீங்கள் நிராகரித்தால், குழந்தைகளையும் (நரைத்த) கிழவர்களாய் ஆக்குகின்ற அந்நாளில் (நிகழவிருக்கும் வேதனைஇலிருந்து) நீங்கள் எவ்வாறு தப்பிப்பீர்கள்? –

18. அ(ந்த தினத்)தில் வானம் பிளந்துவிடும்: அவனுடைய வாக்கு செயல்படுத்தப்படும்.

19. நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்: எவர் (வெற்றியை) நாடுகிறாரோ, அவர் தம் ரப்பின்பால் (இதிலிருந்து நல்) வழியை ஆக்கிக் கொள்வார்.