Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துந் நபஃ – 78  (செய்தி)
(மக்கீ)  பிரிவு - 1, சொற்கள் – 173, வசனங்கள் – 40, எழுத்துகள் – 970



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

ருகூஃ 1

1. எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டு கொள்கின்றனர்?

2. மகத்தான செய்தியைப் பற்றி(யா)?

3. அ(ந்த செய்தியான)து எத்தகையதென்றால் அதில் தான் அவர்கள் கருத்து மாறுப்பாடு கொண்டிருக்கிறார்கள்.

4. அவ்வாறல்ல! விரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

5. பிறகும்:அவ்வாறல்ல! விரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

6. பூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?

7. மலைகளையும் முளைகளாக (ஆக்கவில்லையா?)

8. இன்னும் உங்களை (ஆண் – பெண்) ஜோடிகளாக நாம் படைத்தோம்-

9. உங்களுடைய தூக்கத்தை சுகந்தருவதாகவும் நாம் ஆக்கினோம் –

10. இன்னும், இரவை ஆடையாக ஆக்கினோம் –

11. பகலை வாழ்க்கை(த் தேவைகளை பெற்றுக் கொள்ளும்) நேரமாக்கினோம்.

12. பலமான (வானங்களை) எழினி, உங்களுக்கு மேல் நாம் உண்டாக்கினோம் –

13. மிக்க ஒளி தரும் விளக்கை (சூரியனை அங்கு) நாம் அமைத்தோம் -

14. மேலும், மேகங்களிலிருந்து பொழியத் தக்கதாகிய நீரை நாம் இறக்கி வைத்தோம் –

15. அதை கொண்டு விதையையும், தாவரத்தையும் நாம் வெளிப்படுத்துவதற்காக –

16. (செழித்து) அடர்ந்த மரங்களுடைய தோட்டங்களையும்.. (நாம் வெளிப்படுத்துவதற்காக) –

17. நிச்சயமாக தீர்ப்பு நாளாகிறது, நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.

18. அந்நாளில் சூர் என்னும் குழல் ஊதப்படும்: அப்போது, நீங்கள் அணியணியாக வருவீர்கள் –

19. வானமும் திறக்கப்பட்டு பல வாசல்கள் உடையதாக து ஆகிவிடும் –

20. மலைகளும் இடம் பெயர்க்கப்பட்டு, கானல் நீராகி விடும்.

21. நிச்சயமாக நரகம் (தீயவர்களை) எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறது –

22. வரம்பு மீறியவர்களுக்கு தங்குமிடமாக –

23. அதில் அவர்கள் பல யுகங்களாக தங்குபவர்களாயிருக்கும் நிலையில்.

24. அதில் குளிர்ச்சியோ, பானத்தையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள் –

25. மிக கடுமையாக கொதிக்க வைக்கப்பட்ட நீரையும், சீழையும் தவிர (வேறு எதையும் சுவைக்க மாட்டார்கள் -)

26. (அது அவர்களுக்கு) பொருத்தமான கூலியாகும்.

27. நிச்சயமாக அவர்கள் (இறுதி தீர்ப்பு நாளின் கேள்வி) கணக்கைப் பற்றி(ச் சிறிதும்) அச்சப்படாமல் இருந்தார்கள் –

28. நம்முடைய வசனங்களையும் பொய்யாகுவதாக அவர்கள் பொய்யாக்கினார்கள்.

29. ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் – அதனை நாம் கணக்கிட்டு வைத்துள்ளோம் –

30. எனவே, (அவர்களுக்குச் சொல்லப்படும்: இன்று வேதனையை) நீங்கள் சுவைத்துப் பாருங்கள்: வேதனையை தவிர (வேறு எதனையும்)
உங்களுக்கு நாம் அதிகப்படுத்தவே மாட்டோம்.

ருகூஃ 2

31. நிச்சயமாக முத்தகீங்களுக்கு (வேதனையைப் பற்றி அச்சமின்மை, சுவர்க்கப் பாக்கியங்கள் பற்றிய உறுதி ஆகிய) வெற்றிகள் உண்டு –

32. தோட்டங்களும், திராட்சைகளும் –

33. ஒரே வயதுள்ள கன்னிப் பெண்களும் –

34. (பானங்கள்) நிரம்பிய குவளைகளும் (உண்டு).

35. அங்கு வீணானதையும், பொய்யையும் அவர்கள் செவியுற மாட்டார்கள்.

36. உம்முடைய ரப்பிடமிருந்துள்ள பிரதிபலனாக, கணக்கின்படி (போதுமான) நன் கொடையாக (அது இருக்கும் -)

37. வானங்கள், பூமி, அவ்விரண்டுக்குமிடையிலுள்ள வற்றிற்கும் ரப்பானவன்: அளவற்ற அருளாளனிடமிருந்து அவன் முன் பேச (எவரும்)
சக்தி பெற மாட்டார்கள்.

38. அந்நாளில் (ஜிப்ரீலாகிய) ரூஹும், மலக்குகளும் அணி வகுத்து நிற்பர்: எவருக்கு அர்ரஹ்மான் அனுமதி கொடுத்திருக்கிறானோ அவர்கழ்த் தவிர எவரும் பேச மாட்டார்கள்: நேரானதையே (அவரும்) பேசுவார்.

39. அந்த நாள் (வருவது) உண்மையேயாகும்: எனவே, எவர் (நன்மையை) நாடுகிறாரோ அவர் தம் ரப்பின் பால் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளட்டும்.

40. நிச்சயமாக நாம் மிக சமீபமான வேதனையைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்: அந்நாளில் மனிதன் தன்னுடைய இருகரங்கள் முற்படுத்தி வைத்ததைக் காண்பான்: (அதன் வேதனையை எச்சரிக்கிறோம்): இன்னும் கபிரோ “நான் (மண்ணோடு) மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.