Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துந் நாஸிஆத் – 79  (சுழற்றுபவர்கள்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 197,  வசனங்கள் – 44,  எழுத்துகள் – 753


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

ருகூஃ 1

1. (பாவிகளின் உயிர்களை) மிகக் கடினமாகக் கழற்றி எடுப்பவர்க(லான மலக்குக(ளின் மீது சத்தியமாக –

2. (நல்லோர்களின் உயிர்களை) மிருதுவாக விடுவிப்பவர்க(ளான மலக்குக)ளின் மீது சத்தியமாக –

3. வேகமாக நீந்திச் செல்கின்றவர்க(ளான மலக்குக)ளின் மீது சத்தியமாக –

4. பின்னர்: முந்தி முந்திச் செல்பவர்க(ளான மலக்குக)ளின் மீது சத்தியமாக –

5. காரியத்தை நிர்வகிப்பவர்க(ளான மலக்குக)ளின் மீது சத்தியமாக –

6. அந்நாளில் நடுங்கக்கூடிய (பூமியான)து நடுங்கும் –

7. தொடரக் கூடிய (நில நடுக்கமான)து அதனை தொடர்ந்து வரும்.

8. இதயங்கள் அந்நாளில் கலக்கமடைந்து இருக்கும் –

9. அவற்றின் பார்வைகள் கீழ் நோக்கி இருக்கும்.

10. (இவற்றையெல்லாம் உணராமல்) “நிச்சயமாக நாம் முந்திய நிலைக்கு திருப்பப்படுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர்.

11. “மக்கிப்போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட போதுமா” (என்றும் கேட்கின்றனர்.

12. “அது அப்போது நஷ்டமான திரும்புதல் தான்!” என்று (இதை நம்பாமல் பரிகசித்து) அவர்கள் கூறுகின்றனர்.

13. (எனினும்) நிச்சயமாக அது ஒரே ஒரு சப்தம் தான் -

14. அப்போது அவர்கள் (உயிர்பெற்று) ஒரே திடலில் (ஒன்று கூடியவர்களாக) இருப்பார்கள்.

15. (நபியே!) மூஸாவின் செய்தி உம்மிடம் வந்ததா?

16. ‘துவா” என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவரை அவருடைய ரப்பு அழைத்தபோது (அவன் ஏவினான்).

17. “நீர் பிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டன.

18. “எனவே, நீ பரிசுத்தமடைய வேண்டும் என உனக்கு விருப்பமுண்டா?” என்று நீர் (அவனிடம்) கேட்பீராக!

19. “(அவ்வாறாயின்) உன்னுடைய ரப்பின் பால் உனக்கு நான் வழி காட்டுகின்றேன்: அப்போது நீ (அவனை ) பயப்படுவாய்” (என்றும் கூறுவீராக!)

20. எனவே, அவனுக்குப் பெரும் அத்தாட்சியை அவர் காட்டினார்.

21. பின்னர் அவன் (அவரை) போய்யாகினான்: மாறு செய்தான்.

22. பின்னர், அவன் பின்வாங்கி (அவருக்கு தீங்கு செய்ய) முயன்றான்.

23. எனவே, (மக்களை) ஒன்று திரட்டி அழைத்தான்.

24. பிறகு, “நான் உங்களுடைய மேலான ரப்பு ஆவேன்” என்று கூறினான்.

25. எனவே, அல்லாஹ் அவனை மறுமையுடையவும், இம்மையுடையவும் வேதனையால் பிடித்தான்.

26. நிச்சயமாக இதில் (அல்லாஹ்வை) அஞ்சி (வழிப்ப)டுவோருக்கு உறுதியான படிப்பினை இருக்கிறது.


ருகூஃ 2

27. படைப்பால் மிக கடினமா? அல்லது வானமா? அதனை அவன் படைத்தான் –

28. அ(வ்வானத்)தினுடைய முகட்டை அவன் உயர்த்தினான். பின்னர் அதனை ஒழுங்குப்படுத்தினான் –

29. அதனுடைய இரவை அவன் இருலாகினான்: அதனுடைய பகலையும் வெளியாக்கினான்.

30. பூமியை அதற்குப் பின் அவன் விரித்தான்.

31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் (புற்பூண்டு, தானியங்கள் முதலியன) மேய்ச்சல் பொருளையும் வெளிப்படுத்தினான்.

32. மலைகளையும் – அவற்றை அவன் நிலை நாட்டினான்.

33. உங்களுக்கும், உங்களின் கால்நடைகளுக்கும் சுகமளிக்கும் பொருளாக (இவற்றை அமைத்தான்.)

34. எனவே, பெரும் அமளி(யாகிய இரண்டாவது ஸுர் ஊதுதல்) வந்துவிட்டால் –

35. அந்நாளில் (உலகில் நன்மை தீமையான அமல்களில்) தான் முயற்சித்தானே அதனை மனிதனை நினைவுப்படுத்தினான்.

36. இன்னும் நரகம் பார்வர்களுக்கு(த் தெரியும் விதத்தில்) வெளியாக்கப்படும் –

37. எவன் வரம்பு மீறினானோ

38. இன்னும் இவ்வுலக வாழ்கையை தேர்ந்தெடுத்திக் கொண்டானோ –

39. நிச்சயமாக நரகம் – அதுதான் (அவனுடைய) தங்குமிடமாகும்.

40. எவர் தம்முடைய ரப்பின் சந்நிதானத்தை பயந்து, மனோ இச்சையை விட்டும் தன ஆன்மாவை தடுத்துக் கொண்டாரோ –

41. நிச்சயமாக சொர்க்கம் – அதுதான் (அவருடை) தங்குமிடமாகும்.

42. கியாமத்து நாளை பற்றி – அதனுடைய நிகழ்ச்சி எப்போது? என்று உம்மிடத்தில் அவர்கள் கேட்கின்றனர்.

43. அதனை கூறுவதற்கு நீர் எதிலிருகிறீர்?

44. அது பற்றிய முடிவு உம்முடைய ரப்பிடத்தில் (அல்லவே?) இருக்கிறது.

45. நிச்சயமாக நீரோ அதனை அஞ்சுபவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவர்தாம்.

46. நிச்சயமாக அவர்கள் அதனைக் (கண்ணால்) காணும் நாளில், மாலையிலோ அல்லது அதன் கலையிலோ (சிறிது நேரமே) தவிர (உலகில்)அவர்கள் தங்கி இருக்காதது போன்று இருப்பார்கள்.