Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் இன்ஃபிதார் – 82  (பிளந்து விடுதல்)
(மக்கீ)  பிரிவு - 1, சொற்கள் – 80, வசனங்கள் – 19, எழுத்துகள் – 327



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. வானம் பிளந்து விடும்போது –

2. இன்னும், நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது –

3. இன்னும், கடல்கள் பொங்கி (ஒன்றோடொன்று சேர்த்து) ஓட்டப்படும்போது –

4. இன்னும், கப்ருகள் திறக்கப்படும்போது –

5. ஒவ்வோர் ஆத்மாவும் (நற்செயல்களில்) எதனை முற்படுத்தி வைத்தது, பிற்படுத்தி வைத்தது என்பதை அறிந்து கொள்ளும்.

6. மனிதனே! தயாளனான உன்னுடைய ரப்பைப் பற்றி (அவனுக்கு மாறு செய்யும்படி) உன்னை எது ஏமாற்றியது?

7. அவன் எத்தகையவன் என்றால் உன்னைப் படைத்து, பிறகு உன்னைச் சரியாக ஆக்கி, உன்னைச் செவ்வையாக அமைத்தான்.

8. எந்த வடிவத்தில் (நீ அமைய வேண்டுமென) அவன் நாடினானோ, (அவ்வாறு) உன்னை (-உன் உறுப்புகளை)ப் பொருத்தினான்.

9. அப்படியல்ல (வா?): எனினும், நீங்கள் நியாயத் தீர்ப்புநாளைப் பொய்யாக்குகிறீர்கள் –

10. நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் இருக்கின்றனர்.

11. (அவர்கள்) கிராமுன் காத்திபீன் (நன்மை – தீமைகளை எழுதும் கண்ணியவான்)கள் –

12. நீங்கள் செய்கின்றவற்றை அவர்கள் அறிகிறார்கள்.

13. நிச்சயமாக நல்லோர்கள் (பாக்கியமிக்க சொர்க்கமான) நயீமில் இருப்பார்கள் –

14. நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்திலிருப்பார்கள் –

15. நியாயத் தீர்ப்பு நாளில் அதில் அவர்கள் புகுவார்கள்.

16. அவர்கள் அதைவிட்டு(த் தப்பி) மறைந்து விடுகிறவர்களல்லர்.

17. நியாயத் தீர்ப்பு நாள் என்னவென்று (நபியே!) உமக்குத் தெரியுமா?

18. பின்னரும் நியாயத் தீர்ப்பு நாள் என்னவென்று உமக்குத் தெரியுமா?

19. அந்நாளில் ஓர் ஆத்மா மற்றோர் ஆத்மாவிற்கு (உதவி) எதனையும் செய்யச் சக்தி பெறமாட்டாது: அதிகாரம் (அனைத்தும்) அந்நாளில் அல்லாஹ்வுக்கே சொந்தம்.