Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துஷ் ஷம்ஸ் – 91  (சூரியன்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 54,  வசனங்கள் – 15,  எழுத்துகள் – 247



அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. சூரியனின் மீதும், அதனுடைய ஒளியின் மீதும் சத்தியமாக –

2. அதனை தொடந்து வரும் போது (ள்ள) சந்திரனின் மீது சத்தியமாக் –

3. (சூரியனாகிய) அதனை வெளியாக்கிடும் போதுள்ள பகலின் மீது சத்தியமாக –

4. (சூரியனாகிய) அதனை மூடிக் கொள்ளும் போதான இரவின் மீது சத்தியமாக –

5. வானத்தின் மீதும், அதை நிர்மாணித்தவன் மீதும் சத்தியமாக் –

6. பூமியின் மீதும் அதனை விரித்து வைத்தவன் மீதும் சத்தியமாக –

7. ஆத்மாவின் மீதும், அதனைச் செவ்வையாக அமைத்தவன் மீதும் சத்தியமாக –

8. பிறகு (ஆத்மாவான) அதற்கு அதனுடைய தீமையையும், அதனுடைய தக்வாவையும் (நன்மையையும்) அவன் உணர்த்தினான்.

9. (எனவே) அதனைத் தூய்மைப்படுத்திக் கொண்டவர் திட்டமாக வெற்றியடைந்து விட்டார்.

10. அதனைப் (பாவமெனும் மண்ணுக்குள்) மறைத்தவன், திட்டமாக நஷ்மடைந்து விட்டான்.

11. தமூது கூட்டத்தினர் தம் அட்டூழியத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்யாக்கினார்கள்.

12. அவர்களில் மிகத் தீயவன் (ஒருவன்) விரைந்து வந்த போது –

13. “அல்லாஹ்வுடைய (இப்)பெண் ஒட்டகத்தையும், அதனுடைய குடிப்பையும்” (நீங்கள் தடை செய்யாமல் விட்டு விடுங்கள்) என்று அவர்களிடம் அல்லாஹ்வுடைய ரசூல் (ஸாலிஹ்) – கூறினார்.

14. ஆயினும் அவரை அவர்கள் பொய்யாக்கிப் பின்னர் அதனுடைய குதிங் கால் நரம்பைத் தரித்து(க் கொன்று) விட்டனர்: எனவே அவர்களுடைய பாவத்தின் காரணத்தால், அவர்களுடைய ரப்பு அவர்களின் மீது அழிவை இறக்கி வைத்து, பிறகு அதனை (அனைவருக்கும்)
சமமாக்கினான்.

15. அதனுடிய முடிவை அவன் பயப்படமாட்டான்.