Sign-Up  |  Log-In








MAIL OF ISLAM
The Path to Paradise
© Copyright 2008-2013 www.mailofislam.com all rights reserved. Mail of Islam™ is trademark of Mail of Islam Organization.
சூரத்துல் இன்ஷிராஹ் – 94  (விரிவாக்குதல்)
(மக்கீ)  பிரிவு - 1,  சொற்கள் – 27,  வசனங்கள் – 8,  எழுத்துகள் – 103


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்......

1. உம்முடைய நெஞ்சை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?

2. இன்னும் உம்மை விட்டும் உம்முடைய சுமையை நாம் இறக்கினோம்.

3. அது உம்முடைய முதுகை ஓடித்துக் கொண்டு இருந்தது –

4. இன்னும் உம்முடைய நினைவை (கீர்த்தியை) உமக்காக நாம் உயர்த்தினோம்.

5. எனவே நிச்சயமாக சிரமத்துடன் இலேசு (சுகம்) இருக்கிறது –

6. நிச்சயமாக சிரமத்துடன் (தான்) இலேசு (சுகம்) இருக்கிறது.

7. எனவே (வேலைகளிலிருந்து) நீர் விடுப்பட்டால் வணக்கத்தில் ஈடுபடுவீராக!

8. இன்னும் உம்முடைய ரப்பை ஆர்வத்துடன் சார்ந்திருப்பீராக!