MAIL OF ISLAM
™
The Path to Paradise
ரமலான் தரும் பதவி
எழுதியவர்: அஸீஸ் மரைக்கா காதிரி
பசித்திரு, தனித்திரு, விழித்திரு இந்த மூன்று வார்தைகளின் முதல் எழுத்தை வரிசைப்படுத்தினால் பதவி என்று வரும்.
இந்தப்பதவி வார்தைகளை வரிசைப்படுத்தினால் மட்டும் வந்துவிடாது. இம்மூன்று குணங்களையும் நம் வாழ்கையில் வரிசைப்படுத்த வேண்டும்.
மெஞ்ஞான பாதையில் பயணிப்பவர்களுக்கு ரமலான் மாதம் மிக சிறந்த மாதம். ஞானவழியில் தன் மன இச்சைகளை கட்டுப்படுத்தி பழக்குவது மிக மிக முக்கியமாக இருப்பதால் இந்த மாதம் எல்லா வகையிலும் சிறந்தது.
நோன்பு நோற்கும் ஒருவரின் உடல் நிலை பசி, தாகம், தூக்கம் இம்மூன்றும் மாற்றம் அடைவதால் அதிகமான வெப்பத்திற்கு உள்ளாகிறது. உடல் வெப்பமடைந்தால் அத்தனை உணர்வுகளும் அதிகமாகும்.
உடலில் உணர்வுகள் அதிகமாக இருக்கும்போது அவைகளை அடக்கி பழக்கி விட்டால் உடல் நிலை சாதாரணமாக இருக்கையில் மன இச்சைகளை அடக்குவது மிக எளிதாகிவிடும்.
எத்தனையோ ஞானிகள் பசியோடும் தாகத்தோடும் மாதக்கணக்கில் காடு மலைகளில் அலைந்திருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் அவனை அடைவது ஒன்றே என்றிருந்ததால் பசியோ தாகமோ அவர்களுக்கு தெரியவில்லை.
இஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
பைஅத் என்றால் என்ன? பைஅத் ஏன் செய்ய வேண்டும் ? போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஆன்மீக வழிகாட்டி என்பவர் யார்? இவரை எப்படி பெற்றுகொள்வது? இவரினால் நாம் பெறும் பயன் என்ன? போன்ற விஷயங்களை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.
ஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி
அஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என அழைக்கப்படும் ஸஹாபாக்கள் மூலம் சூfபி ஞானகலை உருவாகியதை அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.