MAIL OF ISLAM

Knowledge & Wisdom



தஹஜ்ஜுத் தொழுகை


இதன் முக்கியத்துவம்


தஹஜ்ஜுதும், வித்ரும் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மீது ஃபர்லாக ஆக்கப்பட்டிருந்தது. இலேசைக் கருதியும், சடைவு ஏற்பட்டு, அதை விட்டு விட்டால் குற்றவாளிகளாகி விடுவார்களே என்ற இரக்கத்தினாலும், உம்மத்தினர் மீது அவையிரண்டும் ஃபர்லாக்கப்படவில்லை. எனினும், ஞானவான்கள் அதனை ஃபர்லைப் போன்றே கருதி செயல்பட்டார்கள்.ஏனெனில், அதில் ஏரளாமான நன்மைகளும் சிறப்புகளும் காணப்படுவதலாகும். இதற்கு எழுதி முடிக்கமுடியாத அளவு சிறப்புகள் உண்டு. ஆகையால் கொஞ்சமானாலும் வழக்கமாகத் தொழுது வருவது ஸுன்னத்தாகும்.



எப்போது தொழ வேண்டும்?


இது இரவில் தூங்கி விழித்துத் தொழும் ஸுன்னத்துத் தொழுகையாகும். ஸுப்ஹுடைய பாங்கிற்கு முன்பு தொழலாம்.



எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?


தஹஜ்ஜுதில் குறைந்தது இரண்டு ரக்அத்துகள். அதிகத்திற்கு அளவில்லை. எனினும், பன்னிரண்டு ரக்அத்துகள் என்று கூறப்பட்டுள்ளது.



எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?


இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான தஹஜ்ஜுத் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.



எப்படி தொழ வேண்டும்?


சாதாரணமாக  ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.  அதில் சூராயாசீன், சூரா முஸம்மில் ஆகியவற்றை ஓதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.



மேலும் பல தொழுகை முறைகளை எமது இணையத்தளமான www.mailofislam.com இல் கற்று கொள்ளுங்கள்.

                                        மேலும் படியுங்கள் - தெரியாதவர்களுடன் பகிருங்கள்


வித்ர் தொழுகை தொழுவது எப்படி?


தராவீஹ் தொழுகை தொழுவது எப்படி?


தஸ்பீஹ் தொழுகை தொழுவது எப்படி?


ழுஹா தொழுகை தொழுவது எப்படி?


இஷ்ராக் தொழுகை தொழுவது எப்படி?


அவ்வாபீன் தொழுகை தொழுவது எப்படி?


ஐங்கால முன் பின் சுன்னத்து தொழுகை விபரம்