MAIL OF ISLAM

Knowledge & Wisdom



அவ்வாபீன்  தொழுகை


இதன் முக்கியத்துவம்



கண்மணி  நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:


"மஃரிப்பிக்கு பின் யார் ஆறு ரக்அத்கள் தொழுது அவற்றிக்கிடையே எந்த தீய பேச்சுக்களும் பேசாமல் இருக்கிறாரோ அவரது அத்தொழுகை பன்னிரென்டு வருடத்து வணக்கத்துக்கு நிகரானவை"


நூல் - திர்மிதி, இப்னு மாஜா


கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:


"யார் மஃரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்"


நூல் : தபரானி



எப்போது தொழ வேண்டும்?


மஃரிபுடைய பின் ஸுன்னத்தான தொழுகைகள், அவ்ராதுகள் ஆகியவற்றை முடித்தபின் மஃரிபுக்கும் இஷாவுக்குமிடையில் தொழவேண்டும்.



எத்தனை ரக்அத்து தொழ வேண்டும்?


பொதுவாக ஆறு ரக்அத்துகள் தொழ வேண்டும். கூடியது இருபது ரக்அத்துகள் தொழலாம்.



எப்படி நிய்யத்து வைக்க வேண்டும்?


இத்தொழுகையின் நிய்யத்து “சுன்னத்தான அவ்வாபீன் தொழுகையின் இரண்டு ரக்அத்துகளையும் கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் அல்லாஹு அக்பர்” என்பதாகும்.



எப்படி தொழ வேண்டும்?


சாதாரணமாக  ஐந்து நேர தொழுகையை தொழுவது போன்றே இதனையும் தொழவேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக தொழுது ஸலாம் கொடுக்க வேண்டும். தொழும் முறை, ஓதல்கள் அனைத்தும் வழமை போன்றதே.



அந்த நேரத்தில் வேறு தொழுகைகளை தொழுதால் இதை நிறைவேற்றிய நன்மை கிடைக்குமா?


ஆம், அந்த நேரத்தில் வேறு ஏதேனும் தொழுகைகளை தொழுவதை கொண்டு இந்த தொழுகையை நிறைவேற்றிய நன்மை கிடைத்து விடும். அதாவது, இத்தொழுகையானது தஹியத்துல் மஸ்ஜித் தொழுகையை  தொழுவதை கொண்டும் அல்லது ஃபர்லான அல்லது ஸுன்னத்தான ஏதாவது தொழுகைகளைக் அந்த நேரத்தில் களாச் செய்வதை கொண்டும், அல்லது வேறு எந்தத் தொழுகைகளை அந்த நேரத்தில் தொழுவதை கொண்டும் நிறைவேறிடும்.  தனியாக மீண்டும் இதை தொழ தேவை இல்லை.



மேலும் பல தொழுகை முறைகளை எமது இணையத்தளமான www.mailofislam.com இல் கற்று கொள்ளுங்கள்.